புதிய பதிவுகள்

'முந்தியெமைக் காப்பதுவே முறை' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Mar 25, 2020 06:35 am

உலகழிக்கப் புறப்பட்ட ஓர் சிறிய 'வைரஸி'ன் பலமழிக்கும் வகை அறியவேண்டும் நாம்- நிலமழிக்க வந்ததுவாம் கிருமியதன் வாயதனுள் வீழாமல் முந்தியெமைக் காப்பதுவே முறை. காலை எழுந்தவுடன் கை, கால், முகம் கழுவி மூலையிலே நூலோடு முடங்கிடுக - சாலையிலே ஊர் சுற்றும் வேலையதை ஒதுக்கித்தான் வைத்திட்டால் பார் மிரட்டும் நோயறுமாம் பார்! காய்ச்சலது …

மேலும் படிப்பதற்கு

'ஐந்துபேர் அறிவு' :பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

Mar 23, 2020 01:13 am

உங்களில் பலர் இக் கட்டுரைத் தலைப்பைக் கண்டதும், நான் ஏதோ சமயவிடயம் பற்றி எழுதப் போவதாய் நினைத்திருப்பீர்கள். பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார், சுந்தரரின் வரலாற்றை உரைக்கையில் வரும் ஒரு பாடலில், மேற் தலைப்புப் பதிவாகியிருப்பது உண்மையே. சிதம்பரத்தில் நடேசரைக் கண்டதும், சுந்தரர் அடைந்த நிலையினைச் சேக்கிழார் அப்பாடலில் சொல்கிறார். ஐந்து பேர் …

மேலும் படிப்பதற்கு

'செல்லும் சொல்வல்லான்' : பகுதி 6 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Mar 21, 2020 12:31 pm

'முடிசூட்டுதற்கு இடையூறாய் நின்ற, கைகேயியின் சூழ்ச்சிக்கு மேம்பட்ட சூழ்ச்சியாகவும், மும்மூர்த்திகளின் வலிமைக்கு அடங்காததாகவும் விளங்குகின்ற, விதியினிற்கு, விதி வகுக்கக்கூடிய என் வில் தொழிலினைக் காண்பாய்!' என்கிறான் இலக்குவன். உயர்ந்த தன் உரைத்திறன் அனைத்தும், இலக்குவனிடம் தோற்று வீழ்வதைக்கண்டும், இராமன் மனம் சோர்ந்தான் அல்லன். முள்ளை முள்ளால் எடுப்பதென்பது …

மேலும் படிப்பதற்கு

'மனுநீதிகண்ட சோழன்': பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

Mar 20, 2020 01:38 pm

பிறந்தனன் உலகம் போற்ற என்ற தொடரில், உலகம் போற்றும்படியாக இவன் பிறந்தான் எனும் பொருளும், உலகத்தைப் காக்க இவன் பிறந்தான் எனும் பொருளும், ஒன்றித்து நின்று மகிழ்வு தருகின்றன. (போற்ற - வாழ்த்த, காக்க) 🔔 🔔 🔔 🔔 உலகம் காக்கப் பிறந்த அம்மைந்தனின் நெறிப்பட்ட …

மேலும் படிப்பதற்கு

'தொட்டால் வருமாம் தும்மப் பிடித்திடுமாம்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Mar 19, 2020 10:50 am

கொரோனா கவி -2- உலகழிக்க ஆயுதங்கள் உவப்போடு செய்தவர்கள் நிலமனைத்தும் அவை விதைத்து நிமிர்ந்தார்கள் - தளமதனில் ஓர் கிருமி உள்நுழைய ஒளிந்தோடித் திரிகின்றார் வேரறுக்கத் தெரியாமல் வெருண்டு. தொட்டால் வருமாம் தும்மப் பிடித்திடுமாம் எட்டாத இடமெல்லாம் எட்டிடுமாம் - விட்டால் ஊரை அழிக்குமென ஒப்பாரி வைக்கின்றார் போரை வளர்த்திட்ட புல்லர். இறக்குமதிதான் எங்கள் …

மேலும் படிப்பதற்கு

'செல்லும் சொல்வல்லான்': பகுதி 5-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Mar 15, 2020 06:31 am

இப்பாடலில் வரும், பொன் எனும் சொல் இலக்குவனின் மேனியது செம்மை நிறத்தையும், புயல் எனும் சொல் இலக்குவன் தடக்கைகளின் வலிமையினையும், அத்த எனும் சொல் தந்தையே எனும் அர்த்தத்தினையும், சன்னத்தன் எனும் சொல் கோபம் மிகுந்தவன் என்பதனையும் குறித்து நிற்கின்றன. தந்தை, …

மேலும் படிப்பதற்கு

'நல்லதோர் வீணை செய்து' : பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

Mar 14, 2020 06:42 am

(மறைந்த நாடக நடிகர் அருமைநாயகம் பற்றிச் சில எண்ண அலைகள்) ஏன் அண்ணை அங்க தேவாரம் பாடினனீங்கள், அவர்களுக்குப் பிடிக்காதெல்லோ?' நான் கேட்கிறேன். அருமைநாயகம் மீண்டும் சிரிக்கிறார். 'உமக்கு விஷயம் விளங்கயில்லை.  நான் தேவாரம் பாடின படியால்த்தான், என்னைச் 'செலக்ட்' பண்ணினவங்கள்.  தேவாரம் …

மேலும் படிப்பதற்கு

கோரோனா வந்த கதைகூறு! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Mar 14, 2020 12:15 am

உலகம் அழிக்கவென ஒரு கிருமி வந்ததனால் நிலமுழுதும் பதறிற்றாம் நெளிந்து! வாரானா என ஏங்கி வரவேற்ற சீனர்களால் கோரோனா வந்த கதைகூறு! விஞ்ஞானம் இருக்கையிலே வேறென்ன பயமென்றோர் மெஞ்ஞானம் தேடுகிறார் மெலிந்து! ஆகாயம் தொட்டு அதற்கப்பால் சென்றவர்கள் சாகாத வழிதேடிச் சரிந்தார்! பொல்லாத நோய்க்கிருமி பொங்கிவர உலகதனில் எல்லோரும் நடுங்குகிறார் ஏங்கி! போரென்று உலகழிக்கப் புறப்பட்டோர் …

மேலும் படிப்பதற்கு

மனுநீதிகண்ட சோழன்: பகுதி 4-கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

Mar 13, 2020 10:20 am

வேதம் பல சமயங்கட்கும் பொதுவாக அமைந்து, அவரவர் கொள்கைகளை விரித்தற்கு இடமளிப்பதால், அதனையும் வளரும் தன்மை கொண்டதாய் வருணிக்கிறார் சேக்கிழார். வேதத்தினதும் புற்றினதும், தொடர்விரிவினைக் குறிக்க, பொங்கும் எனும் சொல் பாடலில் இடப்பட்டிருக்கிறது. இறைவன் குறித்த ஓர் இடத்தில் அமர்ந்தனன் என …

மேலும் படிப்பதற்கு

'செல்லும் சொல்வல்லான்': பகுதி 4-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Mar 09, 2020 01:11 pm

ஒருவர்க்குக் குறித்த ஒரு துறையில் பட்டம் வழங்குவதாயின், அப்பட்டம் வழங்குபவரும் அத்துறையில் விற்பன்னராய் அமைந்திருத்தல் வேண்டும். அங்ஙனம் அமைந்தாலே வழங்கப்பட்ட பட்டம் மதிப்புறுமாம் என முன்னுரைத்தோம். அனுமனுக்குச் சொல்லின் செல்வன் எனப் பட்டம் வழங்கிய இராமன், அச் சொற்திறத்தில் எத்தகையன்? அவனது …

மேலும் படிப்பதற்கு

'நல்லதோர் வீணை செய்து...': பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

Mar 07, 2020 05:44 am

(மறைந்த நாடக நடிகர் அருமைநாயகம் பற்றிச் சில எண்ண அலைகள்) 'அப்ப நீங்கள் வேதக்கரரே?'- எனக் கேட்கிறேன். 'ஓம் ஓம்' என்கிறார் சாதாரணமாக 'ஐயோ அதுதெரியாம உங்களைத் திறுநீறு பூசி, கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போயிட்டேன்.' என்று நான் பதற, சிரிக்கிறார் அருமைநாயகம். 'முருகனைப் பார்த்து …

மேலும் படிப்பதற்கு

மனுநீதிகண்ட சோழன்: பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

Mar 06, 2020 12:00 pm

வழிபாடு, காமிகம், நிஷ்காமிகம் என இருவகைப்பட்டது. காமிகவழிபாடு தன்விருப்பம் நோக்கிச் செய்யப்படுவது. நிஷ்காமிக வழிபாடு விருப்பின்றி பயன்நோக்காது செய்யப்படுவது. புத்திர காமேஷ்டி யாகம் போன்றவை, தன்னுயர்வெண்ணிச் செய்யப்படும் யாகங்கள். இவை காமிக யாகங்களாம். இம்மன்னவன் தன்னுயர்வு எண்ணாது, உலகின் உயர்வெண்ணி நிஷ்காமியமாய், …

மேலும் படிப்பதற்கு

'செல்லும் சொல்வல்லான்': பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Mar 01, 2020 12:12 am

மேற்கண்டவாறு இராமனைத் தான் உணர்ந்து கொண்டமையை, புகழுரைகளால் நுண்மையாய் வெளிப்படுத்திய அனுமன்தன் உரையால், அவனது நுண்ணறிவினை இராமன் அறிந்து கொள்கிறான். ☂  ☂  ☂  ☂ உலகம் வியக்கும் அனுமனின் மேற் புகழுரைகள், கற்போர் நெஞ்சைக் களிக்கச் செய்கின்றன. அப்புகழுரைகளின் பின்,  தொடர்ந்து, அனுமன் தன்னைப் பற்றிய அறிமுகத்தை,  மிகச் சுருக்கமாய்ச் செய்கிறான். யான் காற்றின் …

மேலும் படிப்பதற்கு

'நல்லதோர் வீணை செய்து...': பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

Feb 28, 2020 09:26 pm

(மறைந்த நாடக நடிகர் அருமைநாயகம் பற்றிச் சில எண்ண அலைகள்) இவரது நாடக முயற்சிபற்றிச் சொல்வதல்ல என் நோக்கம்.  நாடகத்துள் மூழ்கி, ஞானக்கிறுக்கனாகித் திரிந்த இவர், ஏதோவகையில் என்னோடு தொடர்புபட்டார். அவரது ஞானக்கிறுக்கை உணர்த்திய சில சம்பவங்களை, இக்கட்டுரையில் வெளிப்படுத்த முனைகிறேன். இவரை …

மேலும் படிப்பதற்கு

மனுநீதிகண்ட சோழன்: பகுதி 2-கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

Feb 28, 2020 01:40 pm

அங்ஙனமன்றி வாழ், தரு என இச்சொல்லைப் பிரித்து, மன்னுயிர்கட்கெல்லாம் மண்ணில் வாழ் தரு எனக் கொண்டு கூட்டி, உயிர்க்கட்கெல்லாம், மண்ணில் வாழ்கின்ற கற்பகத்தருவாய் பயன் செய்பவன் எனவும், இவ்வடிக்குப் பொருள் கொள்ளல் கூடும். 🔔 🔔 🔔 🔔 உலகிலுள்ள மனிதர்களுக்கு மட்டுமன்றி,  எல்லா உயிர்களுக்கும் …

மேலும் படிப்பதற்கு

'செல்லும் சொல்வல்லான்': பகுதி 2-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Feb 23, 2020 06:55 am

அவனது சொற்திறனும், சொற்சுருக்கமும், தொடர்ந்து அழகுற வெளிப்படுகின்றன. நுண்மை மிக்க அனுமனது இவ்வரவேற்புரையைக் கேட்டு, இராமன் வியக்கிறான். கருணையோடு அவனை நீ யார்? என இராமன் வினவ, அனுமன் தன்னை அறிமுகம் செய்யத் தொடங்குகிறான். எவ்வழி நீங்கியோய்! நீ யார்? என …

மேலும் படிப்பதற்கு

'நல்லதோர் வீணை செய்து' : பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

Feb 22, 2020 01:59 pm

(மறைந்த நாடக நடிகர் அருமைநாயகம் பற்றிச் சில எண்ண அலைகள்) உளம் வருந்த ஒரு செய்தியைப் பதிவு செய்கிறேன். நீண்ட நாட்களாகவே நம் சமூகத்தராசு பழுதுபட்டுக்கிடக்கிறது. நல்லார் நிறையைக் குறைத்தும், அல்லார் நிறையைக் கூட்டியும் காட்டும் அத்தவறினால், நம் சமூகத்தில், ஆற்றலுள்ள பலர் அடையாளம் தெரியாது போயினர். புல்லர் பலர் புகழ் …

மேலும் படிப்பதற்கு

'மனுநீதி கண்ட சோழன்' : பகுதி 1 - கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

Feb 21, 2020 01:33 am

🔔 🔔 🔔 🔔 உலகு இறைவனின் படைப்பு.  அவ்வுலகின் இயக்கமே இயற்கையாம். இயற்கையுள் காணப்படும் ஒழுங்கே அறம் எனப்படும். அவ் அறவொழுங்கிற்கு உட்பட்டே நம் வாழ்வு அமைதல் வேண்டும். அங்ஙனம் அமையின்,  இறை, இறையால் ஆக்கப்பட்ட இயற்கை,  இயற்கையின் ஒழுங்காய் அமைந்த அறம், என்ற வரிசையின் மறுதலைப் பெறுபேறாய், அறவாழ்வால் இயற்கையுணர்வும்,  இயற்கையுணர்வால் இறையின்பமும் எய்தப்படும். எனவே, இறையின்பம் …

மேலும் படிப்பதற்கு

'செல்லும் சொல்வல்லான்': பகுதி 1-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Feb 16, 2020 01:30 pm

உயர்பண்புகளைத் தன் காவியத்தில் உறுதி செய்தவன் கம்பன். மானுடத்தின் தனித்தகுதியான சொல்வன்மையின் சிறப்பினையும், தன் காவியத்தின் பல இடங்களில்; அவன் பதிவு செய்கிறான். ஆழ்ந்த சொல்லாற்றலின் தகைமையை வெளிப்படுத்தவென, இராம காதையில் பாத்திரமொன்றினையே படைத்துப் புதுமை செய்கிறான் அவன். அனுமனே, சொல்வன்மையின் திறம் காட்ட, கம்பனால் படைக்கப்பட்ட அற்புதப்பாத்திரமாம். ☂  ☂  ☂  ☂ இப்பாத்திரம் சொல்லாற்றலின் …

மேலும் படிப்பதற்கு

'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை': நிறைவுப் பகுதி -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

Feb 15, 2020 12:15 pm

(சென்றவாரம்) வேறொரு சம்பவம். இது அவனது குருவின் நண்பரொருவர் தமிழகத்தில் சொன்னது. மனைவிக்கும், தாய்க்கும் நடந்த சண்டையில் மனம்நொந்து, யாருக்கும் சொல்லாமல் அவர் வீட்டை விட்டுப் போய்விட்டாராம். பதறிப்போன தாயும், மனைவியும், இவனது குருவுக்குத் தொலைபேசியில் சொல்ல, 'நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க, நான் …

மேலும் படிப்பதற்கு
அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்