ஆகமம் அறிவோம் பகுதி 15: 'சிரார்த்த வகைகள்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ங்களுக்குச் சென்ற முறை,
96 சிரார்த்தங்களின் விபரங்கள் பற்றிச் சொல்லியிருந்தேன்.
அந்த அளவில் சிரார்த்த விபரங்கள் முடிவுறவில்லை.
இன்னும் சில சிரார்த்தங்கள் பற்றிய விபரங்களை நமது நூல்கள் கூறுகின்றன.
இம்முறை அவை பற்றிய விபரங்களைத் தருகிறேன்.
 
🍂​  🍂  🍂
 
வேறு சிரார்த்த வகைகள்
நித்திய சிரார்த்தம், நைமித்திய சிரார்த்தம், காமிய சிரார்த்தம் என,
வேறு மூவகைச்  சிரார்த்தங்கள் பற்றியும் நம்நூல்கள் சொல்கின்றன.
அவற்றின் விபரங்கள் பின்வருமாறு:
நாள்தோறும் பிதுரரைக் குறித்துச் செய்யப்படுவது -நித்திய சிரார்த்தமாகும்.
 
தாய், தந்தையர் இறந்த மாதமும், திதியும் வரும்போது,
வருஷம் தோறும் செய்யப்படுவது -நைமித்திய சிரார்த்தமாகும்.
 
அமாவாசை,சூரியகிரகணம், சந்திரகிரகணம், வியதிபாதயோகம்;,
உத்தராயணம், சித்திரை விஷு மாதப்பிறப்பு, வைகாசி மாத
பூர்வபக்கத் திருதியை, கார்த்திகை மாத பூர்வபக்க நவமி
புரட்டாதி மாதத்து அபரபக்கத் திரயோதசி, மாசிமாதத்து 
அமாவாசை  என்னும் இத்தினங்களிலே செய்யப்படுவது. -காமியசிரார்த்தம் அல்லது தீர்த்த சிரார்த்தமாகும்.
 
🍂​  🍂  🍂
 
மேற் சொன்ன காமிய சிரார்த்த தினங்களில்,
மற்றவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவைதான்.
சித்திரைவிஷு மாதப்பிறப்பு என்பதை விளங்குவதில் மட்;டும்,
உங்களுக்குச் சிரமம் இருக்கலாம். ஆகவே அது பற்றி,
சில சொல்ல விரும்புகிறேன்.
விஷு என்பது ஒரு புண்ணியகாலம். இது உத்தராயணம், 
தட்சணாயனம் ஆகிய இரு அயனங்களும் ஒன்று சேரும் 
சந்தியாகாலமாகும். (சந்திக்கும் காலம்)
 
🍂​  🍂  🍂
 
இவ்விடத்தில் தட்சணாயனம், உத்தராயணம் என்றால் என்ன என்றும்,
நான் சொல்லவேண்டியிருக்கிறது.
தட்சணாயனம் என்ற வார்த்தை தட்சண அயனம் எனப்பிரியும்.
அதுபோலவே உத்தராயனம் என்ற வார்த்தையும் உத்தர அயனம்  எனப் பிரியும்.
(தட்சணம் - தெற்கு, உத்தரம் - வடக்கு, அயனம் - பாதை.)
தட்சணாயம் என்பது சூரியன் தெற்கு நோக்கிப் பயணிக்கும் காலம்.
உத்தராயனம் என்பது சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கும் காலம்.
உத்தராயனத்தை ஒரு வருடத்தின் ஒளிக்காலம் என்றும்,
தட்சணாயனத்தை ஒரு வருடத்தின் இருட்காலம் என்றும் உரைப்பர்.
இந்த இரு அயனங்களும் தை  மாதத்திலும் ஆடி மாதத்திலும்,
ஒன்றோடு ஒன்று சந்திக்கும்.
இங்ஙனம் இவ்விரண்டு அயனங்களும் சந்திக்கும் காலத்தை,
விஷுபுண்ணிய  காலம் என்று நம் பெரியோர்கள் வகுத்துள்ளனர்.
இப்புண்ணிய காலத்தில் மும்மூர்த்திகளும் ஒன்று சேர்வதாய் ஐதீகம். 
 
🍂​  🍂  🍂
 
மங்கல காரியங்களில் செய்யப்படும் சிரார்த்தங்கள்
நாந்தி என்று சொல்லப்படும் மேற்படி விருத்தி சிரார்த்தத்தினை,
சுபகாரியங்களின் முதல் தினத்திலாவது, 
அத்தினத்திலாவது பிதிர் தேவர்களைக் குறித்துச் செய்ய வேண்டும்.
இச்சிரார்த்தம் பிதிரருடைய ஆசீர்வாதத்தைப் பெறும் பொருட்டுச் செய்யப்படுவதாம்.
இது மங்கள சிரார்த்தம் எனவும் கூறப்படும். 
மேற்படி பிதிர்பூசையை செய்யாது விடுவார்களாயின்,
அவர்கள் பிதிர் சாபத்தை அடைவார்கள் என்று நூல்கள் கூறுகின்றன.
 
🍂​  🍂  🍂
 
மேற்படி சிரார்த்தங்களை புஞ்சவனம், சீமந்தம், சாதகர்மம், 
நாமகரணம், உபநிஷ்கிரமணம், அன்னப்பிராசனம்,
கர்ணவேதனம், சௌசம், உபநயனம், விரதம்,
விவாகம், கிருகஆரம்பம், கிருகப்பிரவேசம், சாந்தி ஆகிய,
மங்கல காரியங்களின் போது செய்தல் வேண்டும் என்பது மரபு.
அவை பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகின்றன.
 
புஞ்சவனம்: கருப்பத்திலுள்ள சிசு ஆண்மகவாகப் பிறக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஓமம் செய்து, ஆலந்தளிர், உழுந்து முதலியவைகளைப் பாகம் செய்து கருப்பிணிகளுக்கு மூக்கினுள் பிழிவதாகிய கிரியை. இது 4,6 அல்லது 8ஆம் மாதங்களில் செய்யும் ஒரு சடங்கு.

சீமந்தம்: கருப்பம் தரித்து ஆறாம் மாதம் மூன்றிடத்தில் வெள்ளை நிறமுள்ள பன்றி முள்ளினால் உச்சி வகிர்ந்து செய்யும் ஒரு சடங்கு.

சாதகர்மம்: புத்திர உற்பத்தியான காலத்தில் (முதலிரவில்) செய்யும் ஒரு சடங்கு.

நாமகரணம்: பெயர் சூட்டும் ஒரு சடங்கு.

உபநிஷ்கிரமணம்: பிள்ளை பிறந்து நான்காம் மாதம் அப்பிள்ளையை வெளியே கொண்டு சென்று சந்திர தரிசனமும், ஆலய தரிசனமும் பண்ணுவிக்கும் சடங்கு.

அன்னப்பிராசனம்: குழந்தைக்குச் சோறு ஊட்டும் சடங்கு.

கர்ணவேதனம்: காது குத்தும் சடங்கு. (கர்ணம் - காது, வேதனம் - துளையிடுதல்)

சௌசம்: மயிர் கழித்தல் சடங்கு.

உபநயனம்: பூணூல் சடங்கு. பரம சிவனைத் தரிசிப்பதற்குச் சமீபமாகிய (உப) கண்ணை (நயனத்தை) உண்டாக்கும் சடங்கு.

விரதம்: பிரமச்சரிய விரதத்தை ஒழித்தற்குச் செய்யும் சடங்கு.

விவாகம்: திருமணச் சடங்கு.

கிருகஆரம்பம்: வீட்டு அத்திவாரச்சடங்கு.

கிரகப்பிரவேசம்: குடிபுகுதல் சடங்கு.

சாந்தி: கிரகக் கோளாறுகளைச் சாந்தப்படுத்த செய்யும் சடங்கு.
 
🍂​  🍂  🍂
 
மேற்சொன்ன மங்கள சிரார்த்தங்கள் பற்றிய  விபரங்களை,
நாந்திமுகச் சிராத்தவிதி எனும் நூலும், 
வீரதந்திரம் என்னும் சைவாகமமும் விரிவாகக் கூறுகின்றன.
அது தவிர, திருவானைக்காப் புராணத்தில்,
திருவளரும் சுபக்கிரியை அனைத்தினுக்கும்,
நாந்திமுகம் செய்தல் வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
 
🍂  🍂  🍂
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்