"...எண்ணங்களைத் துணிந்து சொன்ன நீங்கள்,
மொட்டையாய்ப் பெயரை மறைத்ததன் சூட்சுமம் ஏனோ புரியவில்லை!
என்னதான் காரணங்களைச் சொன்னாலும்,
இச்செயலில் உங்களை நீங்களே தாழ்த்திக் கொண்டீர்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது...
போனால் போகட்டும் விடுங்கள்!
அது சரி,
உங்களை ஒன்று கேட்க வேண்டும்,
'மாமியார் உடைத்தால் மட்குடம் மருமகள் உடைத்தால் பொற்குடமா?'
என்ன புரியவில்லையா?...
வாருங்கள்,
நாளை பேசுவோம்..."
செப்பித் திரிவாரடி கிளியே...
செய்வதறியாரடி -பாரதி-
பிரதம ஆசிரியர்
-உகரம்-