'பேரன்புக்குரிய கம்பவாரிதி அவர்களுக்கு' -அன்புடன் சிவகுமார்-

பேரன்புக்குரிய                                                                             06.05.2020
கம்பவாரிதி அவர்களுக்கு,

வணக்கம். 

ஜெயா டிவியில் ‘ஆல்பம்’ நிகழ்ச்சி
பார்த்து நெகிழ்ச்சியுடன் நீங்கள் எழுதிய கடிதம் கண்டு மகிழ்ந்தேன்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கவிச்சக்கரவர்த்தி படைத்த சாகாவரம் பெற்ற ராமாயண காவியத்தை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லப் பிறந்த தவமுனி நீங்கள். 
அத்தோடு அன்னையாருக்கு பணிவிடை செய்யவும் மட்டுமே பிறப்பெடுத்த பிரம்மச்சர்ய ஆஞ்சனேயர் ...
உங்களை இந்த நிகழ்ச்சி கவர்ந்திருப்பதறிந்து பேருவகை கொள்கிறேன்
ஜெயலலிதா அம்மையார் முதல்வராக இருந்த 2013-ல் அவர்  கேட்டுக்கொண்டபடி
‘ஆல்பம்’- நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.
இருபது பேரைப் பேட்டி எடுத்திருப்பார்கள், ஆனால் என்னுடையதுதான் அம்மையார் பிறந்த பிப்ரவரி 24-ந்தேதி அவர் உயிரோடு இருந்தபோது ஒளிபரப்பாயிற்று. 
இதுவரை 7 முறை ஜெயா டிவி ஒளிபரப்பிய நிகழ்ச்சி. 
ஆளுமைகளை அவர்கள் காலத்துக்குப் பிறகு சிலர் ஆவணப்படம் எடுப்பார்கள். அதில் வடிவமைப்பவர் விருப்பத்துக்கேற்ப புகழ்மொழியோ வசைமொழியோ கொஞ்சம் சேர்ந்துவிட வாய்ப்பு உண்டு.
இதில் என்னைப் பற்றி நானே கூறுவதால்
நம்பகத்தன்மை அதிகம் உள்ள எனது ஆவணப்படமாக இதை வைத்துக் கொள்ளலாம்.
எனது ‘இது ராஜபாட்டை அல்ல’- தன் வரலாற்று நூலைத் திரைப்படமாகப் பார்ப்பது போன்ற பிரமை இதைப் பார்ப்போருக்கு கிடைக்கும்.
முழு நேர்காணல் 2மணி 10 நிமிடங்கள்.
அதை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளேன்.
கொரோனாக் காலம் தாண்டியதும் விரைவில் திட்டமிட்டபடி சந்திக்கலாம்.

என்றும் அன்புடன்
சிவகுமார்

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்