புதிய பதிவுகள்

செங்கை பங்கயம்-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

May 15, 2021 01:11 pm

உயர் நாடொன்றின் சிறப்பை வர்ணிக்கப்புகும் புலவர்கள் பல்லாற்றானும் அந்நாட்டில் உள்ள அனைத்திலும், மலர்ச்சியைக் காட்ட முனைவர். வயல்கள், சோலைகள், ஆடவர், மகளிர் என, அனைவரினதும் நிறைநிலையை மலர்ச்சியாய், பல காட்சிகளூடும் வெளிப்படுத்துவர். கம்பனும் இவ்வாறே அயோத்தியின் சிறப்பை, பல கற்பனைக் காட்சிகளூடு விதிமுகத்தான் கூறத் தலைப்படுகிறான். கற்பனை, கடலெனப் பெருகுகின்றது. வர்ணனைப் பாடல்கள் ஆயிரமாய் …

மேலும் படிப்பதற்கு

பூங்குழலி: பகுதி 03-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

May 14, 2021 01:33 pm

உள்ளத்தில் எந்தவித அதிர்வுமின்றி, இயற்பகையாரின் வார்த்தைகள் வந்து விழுகின்றன. 'சுவாமி! தங்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் 'இல்லை' என்று சொல்லும்படியான ஒன்றைக் கேட்காமல், என்னிடம் இருக்கும் ஒரு பொருளைக் கேட்டு எனக்கு நிம்மதி தந்தீர்கள். என் மனைவி என் உரிமை மட்டுமல்ல என் உடமையுமாம். அவள் நான் …

மேலும் படிப்பதற்கு

'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 65 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

May 13, 2021 01:37 pm

     இராணுவம் புகுந்தது நாம் பேசுவதை நிறுத்தி அடுத்தடுத்த வாரங்களில், இராணுவம் வேகமாய் முன்னேறியது. அப்போது கந்தசஷ்டி விரதம் தொடங்கியிருந்தது. அம்முறை விரதமேயிருந்து அறிந்திராத மணிமாறனையும், விரதமிருக்கச் செய்திருந்தேன். கந்தசஷ்டி விரதக் கடைசி நாள் அன்று, அவர்களுக்காகப் பாறணைச் சமையல்; சமைத்திருந்தேன். சூரன் போர் முடிந்து அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இராணுவம் யாழ்ப்பாணத்திற்குள் நுழையப் போவதால்;, எல்லோரையும் …

மேலும் படிப்பதற்கு

இரங்கற்பா எத்தனைதான் எழுதுவோமோ? -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

May 12, 2021 08:14 am

12.05.21அன்று அமரராகிய முனைவர் ரெங்கராஜன் அவர்களுக்கான இரங்கற்பா!    உலகமெல்லாம் இருண்டேதான் போயிற்றம்மா! உயிர் அன்பன் பிரிவதனைக் கேட்டதாலே உளமதனில் தமிழாலே என்னைச் சார்ந்த  ஒப்பற்ற நேசனையும் கொடிய நுண்மி பலியெடுத்துப் போயிற்றாம் பதறுதெந்தன்  பாசமிகு நெஞ்சமதும் பண்பால் தேர்ந்து நிலமகற்குத் திலகமென வாழ்ந்த ஐயன் நேசர்களை விட்டெங்கே போயினானோ?   இரங்கற்பா எத்தனைதான் எழுதுவோமோ இரக்கமிலா விதியதுவும் …

மேலும் படிப்பதற்கு

பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 16: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

May 09, 2021 12:42 pm

கேள்வி 01:- வேள்விகளில் உயிர்ப்பலியை நியாயப்படுத்துகிறீர்கள். திருக்குறளைப் போற்றுகிற உங்களுக்கு ' அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று' என்ற குறளில், உயிர்க்கொலையை வள்ளுவரே கண்டித்திருப்பது, தெரியாமல் போனது எப்படி?​ ​     பதில்:- என்னிடம் கேட்கப்பட்ட, 'இந்துமதத்தில் உயிர்ப்பலி உண்டா?'  என்ற கேள்விக்கான பதிலாகத்தான் 'உண்டு' என்ற பதிலை  நான் சொன்னேனே …

மேலும் படிப்பதற்கு

'சேருதும் அமளி': -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

May 08, 2021 02:33 am

உலகம் இறைவனின் ஒப்பற்ற படைப்பு. அவ் அற்புதப் படைப்பில் சிற்றின்பத்தைப் பொதித்து, அச்சிற்றின்பத்தினூடு பேரின்பத்தை விளக்கம் செய்கிறான் இறைவன். பேரின்பக் குறியீடே சிற்றின்பமாம். இஃது நம் பெரியோர்தம் முடிபு. பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம் எனும் திருவுந்தியார் அடியே இதற்குச் சான்று. அருள் நூல்களிலும் சிற்றின்பச் செய்திகள் வருவதன் அடிப்படையும் இஃதேயாம். சிற்றின்பம், பேரின்பம் எனும் …

மேலும் படிப்பதற்கு

பூங்குழலி: பகுதி 02 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

May 07, 2021 12:44 pm

உதிரம் உறைந்தாற்போல் ஆயிற்று பூங்குழலிக்கு. கணவனாரின் கண் பார்வை குத்திட்டு நின்ற திசையில் நோக்கிய, அவளின் பார்வையில் அந்த அடியார் தெரிந்தார். பட்டும் பீதாம்பரமுமான உடை. கையில் சுற்றிய மல்லிகைச் சரங்கள். மையால் தீட்டப்பட்ட புருவம். கழுத்தில் பலவகை நிறங்களில் மணிமாலைகள். தாம்பூலத்தால் சிவந்த உதடுகள் என, அடியார்க்கான எந்த இலட்சணமுமின்றி, ஆடம்பரமாய் அமர்ந்திருந்தார் …

மேலும் படிப்பதற்கு

'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 64 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

May 06, 2021 12:20 pm

   மீண்டும் மறுத்தேன் மீண்டும் ஒருவாரம் கழித்து அவன் வந்தான். 'மேலிடத்தில் நீங்கள் சொன்னதைச் சொன்னேன். அவர்களைப் பேச வேண்டாம் என்று, நாங்கள் ஒருநாளும் சொல்லவில்லையே, பின்னர் அவர்களைப் பேசுங்கள் என்று, நாங்கள் ஏன் சொல்ல வேண்டும்?' என்று, மேலிடத்தில் பதில் சொன்னதாய்ச் சொன்னான். 'தம்பி! நாங்கள் குழந்தைகள் இல்லை, வெளிப்படையாக நீங்கள் சொல்லாவிட்டாலும், கழகத்தோடு இயக்கத்திற்கு …

மேலும் படிப்பதற்கு

பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 15: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

May 02, 2021 03:17 pm

கேள்வி 01:- முதலமைச்சர் விவகாரத்தில் 'வித்திக்கும்', 'விக்கிக்கும்' மாவை வெளியிட்ட அறிக்கையைப் படித்தீர்களா?  ​     பதில்:- படித்தேன்! அதுபற்றி மனதில் எழுந்த சில எண்ணங்கள் கீழே. மாவை பற்றிப் பேச 'விக்கி'யாருக்கு எந்த உரிமையோ, தகுதியோ இல்லை. தன்னிடம் தரப்பட்ட மாகாணசபையை எந்தப் பயனுமின்றி (தனக்கான வாகனத்தைக் கேட்டுப் பெற்றதைவிட்டால்) …

மேலும் படிப்பதற்கு

'முத்தமிழ்க்கம்பன்': பகுதி 03-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

May 01, 2021 03:27 am

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦ முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧    ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦ உயர் கம்பனின் காவியத்தில், முத்தமிழ்த்துறையின் மூன்றாவதான நாடகத்துறை பற்றிய, செய்திகளை இனிக் காண்போம். நாடகத்துறை கம்பன் காலத்தில், நடனக்கலையே நாடகக் கலையாய்க் கணிக்கப்பட்டமை, வெளிப்படை.  நடனக்கலையின் பிரிவுகளான, நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்பவற்றில், நாட்டியம் எனும் சொல் நாடகத்தையே குறிக்கிறது. இயல், இசை போலவே, நடனக்கலை பற்றியும் கம்பன் பல இடங்களில் பேசுவான்.  அவையனைத்தையும் …

மேலும் படிப்பதற்கு

பூங்குழலி: பகுதி 01 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Apr 30, 2021 12:48 pm

உளம் அதிர்ந்து நின்றாள் உத்தமியான பூங்குழலி. எந்தப் பெண்ணுக்குத்தான் அந்தச் செய்தி அதிர்ச்சி தராது? அந்த அதிர்ச்சி தரும் செய்தியைச் சொல்லிவிட்டு, ஏதுமே நடக்காததுபோல் பற்றற்று நின்றார் இயற்பகையார். அவர் சொன்ன வார்த்தைகள் நெஞ்சைச் சுட, வழமைக்கு மாறாகக் கணவனை நேருக்கு நேர் பார்க்கிறாள் அவள். அவள் விழிகளில் ஆயிரம் …

மேலும் படிப்பதற்கு

'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 63 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Apr 29, 2021 11:37 am

   புலிகளின் நேரடித் தலையீடு அக்கூட்டம் நடக்க இருந்த திகதியின் முதல் நாள் இரவு, உதயன் நிறுவனர் சரவணபவனும், வித்தியாதரனும்,  எங்களை வரச் சொல்லிச் செய்தி அனுப்பினர். பதற்றத்தோடு நானும், ரத்தினகுமாரும் அங்கு சென்றோம். இரவு எட்டு மணியிருக்கும், அவ்விருவரும், 'புலிகள் இக்கூட்டம் நடத்துவது பற்றி,கடுமையாய்  அதிருப்தியுற்றிருக்கின்றனர். இன்று மாலை பிரபாகரன் முக்கியமானவர்களோடு, இதுபற்றி, ஒரு கூட்டம் …

மேலும் படிப்பதற்கு

பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 14: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

Apr 25, 2021 10:36 am

கேள்வி 01:- எல்லோருமாய் அழைத்தால் அடுத்தமுறையும் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடத் தயார் என்று முன்னாள் முதலமைச்சர் கூறியிருக்கிறாராமே? ​     பதில்:- ம...று...ப...டி...யு...மா..மா..மா..மா..மா...? (வடிவேலுக்கு நன்றி)  உலகநாதரின் ஒப்பீனியன்​:  'வாரிதியார் நல்லாப் படம் பார்க்கிறார் போல'. ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆ கேள்வி 02:- தன்னை ஜனாதிபதி தொலைபேசியில் மிரட்டியதாக அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினரே முறைப்பாடு …

மேலும் படிப்பதற்கு

'முத்தமிழ்க்கம்பன்': பகுதி 02-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Apr 24, 2021 02:06 am

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦ முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧    ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦ உலகம் போற்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பர், முத்தமிழ்த்துறையின் இரண்டாவதான இசைத்துறை பற்றி, பதிவிடும் செய்திகளை இனிக் காண்போம். இசைத்துறை இசைத்துறை பற்றிய செய்திகள், காவியத்தின் பலவிடங்களிலும், கம்பனாற் காட்டப்படுகின்றன.  பல இசைவாத்தியங்களின் பெயர்களும், கம்பகாவியத்தினூடு நமக்குத் தெரியவருகின்றன.  வாய்ப்பாட்டு,  நரம்பு வாத்தியங்கள்,  காற்று வாத்தியங்கள்,  தோல் வாத்தியங்கள் போன்றவற்றை, கம்பன் பல இடங்களிலும் குறிப்பிடுகின்றான். நரம்பு வாத்தியம், தோல் …

மேலும் படிப்பதற்கு

'ஞானவதி' : பகுதி 03 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Apr 23, 2021 03:22 pm

உறக்கத்தில் இருந்த கணவர், திடீரெனப் படுக்கையில் அங்குமிங்குமாய் உருண்டு, 'சிவசிவ, சிவசிவ' என்று பெரிதாய்ச் சத்தமிட, ஞானவதியின் மனம் பதறுகிறது. எண்ண அலைகள் நிற்கப் படுக்கையைவிட்டு எழுந்து, பதறி அவர் அருகில் ஓடுகிறாள் அவள். 'இனி உன்னைத் தீண்டமாட்டேன்' என, காலையில் கணவர் இட்ட சபதம் நினைவில் வர, அச்சபதத்தைக் காப்பது தன் கடமை …

மேலும் படிப்பதற்கு

'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 62 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Apr 22, 2021 12:33 pm

   புதுவையின் கவிதை- பேச்சை நிறுத்தினேன் இச் சூழ்நிலையில் தான் முதல் முதலாய், எங்கள்மேலான புலிகளின் மறைமுகமான கண்டனம் ஒன்று, பத்திரிகையில் வெளிவந்தது. நேராகக் கம்பன்கழகத்தைச் சாடாவிடினும், ஆலயங்களில் நாங்கள் செய்துவந்த பட்டிமண்டபங்களை, மறைமுகமாகக் கிண்டல் செய்து புதுவை எழுதிய ஒரு கவிதையை, புலிகளின் அதிகார பூர்வ பத்திரிகையான 'ஈழமுரசு' வெளியிட்டிருந்தது. புலிகளின் சார்பில் …

மேலும் படிப்பதற்கு

பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 13: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

Apr 21, 2021 01:58 am

கேள்வி 01:- சுமந்திரன், சாணக்கியன் கூட்டு பலரையும் எரிச்சலடைய வைத்திருப்பதைக் கவனித்தீர்களா?     பதில்:- அறிவும் ஆளுமையும் ஒன்றுசேர்ந்தால்,  அவை இல்லாதவர்களுக்கு வயிறு சற்று எரியத்தானே செய்யும். பாராளுமன்றத்திற்குள் நுழைந்து எட்டே மாதங்களான நிலையில்  உலகம் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படி செய்திருக்கிறார் சாணக்கியன்.  தங்களால் இதைச் செய்யமுடியாமல் போனதை வைத்தே,  சாணக்கியனின் ஆளுமையை,  பலகாலமாய் வெறுமனே …

மேலும் படிப்பதற்கு

'பிலவ வருடம் ஒளியுடன் வருகவே' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Apr 21, 2021 01:46 am

உலகெலாம் துயர் நீங்கிட நல் ஒளி ஓங்கி எங்கும் உலகிருள் மாய்ந்திட நலமெலாம் தளைத்தின்பம் பெருகிட நல்லவர் மனம் நாளும் சுகித்திட விலையிலா அறம் நின்று இம் மண்ணிடை வெல்லும் தன்மையால் வீழ்ந்திட மறமதும் பிலவ வருடம் ஒளியுடன் வருகவே  பேறெலாம் இவ் வுலகினிற்கருள்கவே.   சின்ன 'நுண்மி'யின் செருவினிற் கஞ்சியே செகமெலாம் இன்று சிதைந்து …

மேலும் படிப்பதற்கு

'முத்தமிழ்க்கம்பன்': பகுதி 01-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Apr 18, 2021 02:40 am

உலகம் போற்றும் நம் தமிழ்மொழிக்கு, ஆதி அறியா அற்புதப் பெருமை உண்டு. ஆதி அறியா மொழியெனவே, அஃது அந்தமறியா மொழியாயும் நிலைக்குமாம். காலங் கடந்து நிலைத்தற்கான, தமிழ் மொழியின் தனித்த சிறப்புத்தான் என்ன? ஆராய்வது கடமையாகிறது.    அண்டங்களின் இயக்கத்தில், யாருமறியா ஓர் அற்புத ஒழுங்கு அமைந்திருக்கிறது. அவ்வொழுங்கே, அண்டங்கள் ஒன்றோடொன்று மோதி அழியாது நிலைத்தலின் காரணமாம். அவ்வொழுங்குக்குட்பட்டதே …

மேலும் படிப்பதற்கு

'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 61 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Apr 15, 2021 03:28 pm

     திலீபன் நினைவு தின விழாவில் முரண்பட்டேன் திலீபன் மறைவையொட்டி அவர் உண்ணாவிரதம்  இருக்கத்தொடங்கிய நாளிலிருந்து, மறைந்த நாள் வரை ஆண்டு தோறும் இயக்கம் நல்லூர் வீதியில், பெரிய அளவில் நினைவுக்கூட்டத்தை நடத்தி வந்தது. எல்லா ஊர்களிலிருந்தும் புலிகளின் ஆதரவாளர்கள் வந்து, நல்லூரில் விடிய விடிய பஜனை, வில்லுப்பாட்டு என  நிகழ்ச்சிகளை நடத்தினர். ஊர் …

மேலும் படிப்பதற்கு
அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்