புதிய பதிவுகள்

பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 28: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

Aug 01, 2021 11:12 am

கேள்வி 01:- மகாராஜா நிறுவன அதிபர் இராஜமகேந்திரன் அவர்களின் மறைவு பற்றி?  பதில்:- உலகைத் தன் உறவாய் நினைத்த ஒரு பெருமனிதனை நாம் இழந்து நிற்கிறோம்.  தன்னைப் பொருளாதாரத்தால் மட்டுமன்றி, இன்னும் பல வழிகளாலும்,  உயரச் செய்த தன் தலைமகனை இழந்து இலங்கைத்தாய் கண்ணீர் சிந்துகிறாள்.  இலங்கைத் தமிழர்கள் இத்தேசத்தை …

மேலும் படிப்பதற்கு

'பொங்கித் தணிந்தது' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Jul 31, 2021 02:10 pm

மனித மன உணர்ச்சிகள் ஆயிரமாய் விரிபவை. அவ் உணர்ச்சிகளை வடநூலார் ஒன்பதாய் வகுத்து, நவரசங்கள் எனப் பெயரிட்டனர். அவை அற்புதம், ரௌத்திரம், கருணை, பீபற்சம்,  சாந்தம், சிருங்காரம், பயம், நகை, வீரம் என்பனவாம்.    உளத்தில் தோன்றும் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புக்களை உடல் காட்டுவதால், உடலில் தோன்றும் உணர்ச்சி வெளிப்பாடுகளை அடிப்படையாய்க் கொண்டு, இவ்வுணர்ச்சிகளை …

மேலும் படிப்பதற்கு

'சலியாது கம்பனுக்காய்ப் பணிகள் செய்தோன்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Jul 30, 2021 08:11 am

உளமதிர அடுத்தடுத்து அவலச் செய்தி  ஒவ்வொன்றாய் வருகிறதே விதியோ சொல்வீர்! நலமிகுந்த புதுவையிலே கம்பன் தொண்டில்  நாளும்தான் தனைத் தேய்த்து உழைத்த ஐயன் விலையதிலா உழைப்பாலே கழகம் தன்னை விண்ணளவாய் உயர்த்துதற்கு வழிகள் செய்தோன் தளர்ந்திடவே நாமெல்லாம் விண்ணைச் சேர்ந்தான் தன்னிகரில் பெரியவனை வணங்கி நின்றோம்.   கலியாண சுந்தரனார் மறைவுச் செய்தி கனவாகிப் போகாதா …

மேலும் படிப்பதற்கு

'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 76 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Jul 29, 2021 12:49 pm

   ஆசிரியர் சொக்கன் கழகத்தின் முதல் விழாவிலிருந்து எங்களோடு இணைந்திருந்தவர் இவர். பெருந்தமிழ் அறிஞன், எழுத்தாளன், நாடக ஆசிரியன் என, பல்துறை ஆற்றல் கொண்ட மரபறிஞர். தனது ஆற்றலால்  யாழ் இந்துக்கல்லூரிக்குப் பெருமை சேர்த்தவர். முதல் விழாப் பட்டிமண்டபத்திலேயே இவரோடு சிறு முரண்பாடு ஏற்பட்டது. அதிலிருந்து இவருக்கு எங்களை அதிகம் பிடிக்காது. ஒருமுறை …

மேலும் படிப்பதற்கு

'நீளத்தான் புகழ் வளர்த்து நிமிர்ந்து நின்றான்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Jul 29, 2021 12:33 pm

புகழ் பெற்ற மகாராஜா நிறுவனத்தின் தலைவரும் எமது கம்பன் கழகத்தின் ஆதரவாளருமான ஆர். இராஜமகேந்திரன் அவர்களின் மறைவையொட்டி கம்பவாரிதி அவர்கள் எழுதிய அஞ்சலிக்கவிதை   உலகமது போற்றுகிற தமிழ்த்தாய் தன்னின் ஒப்பற்ற பெரும் புதல்வன் ஓய்ந்து போனான். திலகமென ஈழத்துத் தமிழர்க்கெல்லாம் திகழ்ந்த பெரும் அறிவாளன் வீழ்ந்து போனான் நலமிகுந்த …

மேலும் படிப்பதற்கு

பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 27: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

Jul 25, 2021 01:23 pm

கேள்வி 01:- கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் தனக்கு அடுத்து கட்சிக்குத் தலைமை ஏற்கப்போவது யார் என்று அடையாளம் காட்டாமல் இருக்கிறாரே, ஒரு ஜனநாயக அமைப்பு இங்ஙனம் செயல்படுவது சரியாகுமா? இதையெல்லாம் நீங்கள் கண்டிக்கமாட்டீர்களா? பதில்:- உங்களின் ஒரு கேள்வியிலிருந்து எனக்குப் பல கேள்விகள் உதயமாகின்றன.  அவற்றைக் …

மேலும் படிப்பதற்கு

காலம் அது மாற, கருத்ததுவும் மாறிடுமாம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Jul 23, 2021 02:33 pm

2018 உள்ளே வாராதே! உறுமித்தான் கடுகடுப்பாய்  வள்ளென்று பாய்ந்திட்டார் வாத்தியார் - வல்லவனும் பள்ளிக்கு வாராமல் நின்றதனால் பலர் அறிய எள்ளித்தான் தண்டித்தார் இகழ்ந்து. கையில் 'செல்' போனைக் கண்டதுமே ஆசிரியர் தைதையெனக் குதித்தார் தணலெனவே- பையனவன் காதைப்பிடித்துக் கடுகடுத்தார்  இனிக் கண்டால் பாதையிலே போட்டுடைப்பேன் பார்! முகம் மூடி வந்திட்ட முஸ்லீம் பெண் …

மேலும் படிப்பதற்கு

'விட்டார், வீடுற்றார்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Jul 23, 2021 02:23 pm

உயர் மனிதப் பிறவியின் நோக்கம், ஆன்ம ஈடேற்றமேயாம். அறிவுப் பொருளாகிய ஆன்மா, ஆணவமலத்தின் வயப்பட்டு சடம்போற் கிடக்குமோர் நிலையுண்டு. ஆன்மாவின் இந்நிலையை, சித்தாந்தம் 'கேவலநிலை' எனக் குறிக்கும்;.    அறிவிருந்தும் சடம் போலக்கிடக்கும் ஆன்மாவை உய்விப்பதற்காக, அதன், விருப்பு, அறிவு, செயல் ஆகியவற்றை ஓரளவு தூண்டி, ஆணவத்தால் விளைந்த கன்ம அனுபவங்களை அவை …

மேலும் படிப்பதற்கு

'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 75 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Jul 23, 2021 12:18 am

   நிறைவில் சிலர் பற்றிய எண்ணங்கள்..... ஆதரவு தந்த மதத் தலைவர்கள் எமது கழக முயற்சிகளை அங்கீகரித்து, பல மதத்தலைவர்களும் எமக்குப் போதிய ஆதரவினை நல்கினர். அவர்தமைப்பற்றியும் ஓரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டும். மணி ஐயர் என்று முன்பு சொல்லப்பட்டவரான, நல்லை ஆதீனத்தின் ஸ்தாபக குருமுதல்வரான சமாதி அடைந்த,  ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிக …

மேலும் படிப்பதற்கு

பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 26: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

Jul 18, 2021 01:41 pm

கேள்வி 01:- பாராளுமன்றத்தில் தங்களுக்குப் பேச இடந்தருவதில்லை என்றும் அதனால் மக்கள் தங்களைத் தவறாய் நினைக்கிறார்கள் என்றும் கூட்டமைப்புக்குள் ஒருசிலர் போர்க்குரல் எழுப்புகிறார்களே. கவனித்தீர்களா? பதில்:- கவனித்தேன்.  அவர்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று தோன்றுகின்றது. இதுநாள் வரைக்கும் அங்கு இவர்கள் பேசி, என்னத்தைக் கிழித்தார்கள் என்பது முதற்கேள்வி.  பேசாததால் …

மேலும் படிப்பதற்கு

'உடம்பும் ஆயினான்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Jul 18, 2021 01:17 pm

உலக மக்களை, இறைவன் வகுத்ததாய ஒழுக்க நெறியொடு பொருத்தி வாழச் செய்வதால், மன்னனை உயிர் எனவும், மக்களை உடம்பு எனவும், நம் சங்கச் சான்றோர்தம் கவிதை பேசும். மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம் என்பது அப்புலவோர் கருத்தாம். கால மாற்றத்தால் இன்றைய நவீன ஐனநாயக உலகில், சர்வாதிகாரக் குறியீடாய் …

மேலும் படிப்பதற்கு

'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 74 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Jul 15, 2021 12:08 pm

   மீண்டும் யாழ் புறப்பட்டோம் கொழும்பு வாழ்க்கை எனக்கு ஒத்துவரவில்லை. பிரசங்கங்களுக்கூடாக நடக்கும்  மக்கள் சந்திப்பு, காலையில் கேட்கும் நல்லூர் மணியோசை,  அழகிய கம்பன் கோட்டம்  தந்த நிழல், வணங்கிய சிவலிங்கம் இவையெல்லாம்  மீண்டும் மீண்டும் நினைவில் வந்து, செயற்கையான  கொழும்பு வாழ்வை  வெறுக்கச் செய்தன. ரத்தினகுமாருக்கும் யாழில் வேலை  போய் விடுமோ எனும் பயம். மீண்டும் யாழ் போவதென …

மேலும் படிப்பதற்கு

'நாவரசர்' இறையடியில் அமைதி கொண்டார் -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Jul 12, 2021 02:30 pm

அண்மையில் மறைந்த மூத்த தமிழறிஞர் 'நாவுக்கரசர்' பேராசிரியர் சோ.சத்தியசீலன் அவர்களுக்கு அகில இலங்கைக் கம்பன் கழகம் தனது அஞ்சலியைச் செலுத்துகிறது. உளமெல்லாம் பேரதிர்ச்சி கொண்டதம்மா! ஒப்பற்ற தமிழறிஞன் மறைவைக் கேட்டு வளமெல்லாம் தமிழுக்கு ஈந்த ஐயன் வற்றாத சொற்திறத்தால் உலகை ஈர்த்தோன் பலகற்றும் கல்லார் போல் அடங்கி வாழ்ந்த  பண்பாளன் …

மேலும் படிப்பதற்கு

பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 25: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

Jul 11, 2021 01:20 pm

கேள்வி 01:- உங்களைப் பலபேர் கண்டபடி திட்டவும் செய்கிறார்களே? அதைப் பார்க்கும் போதும் நீங்கள் கவலைப்படமாட்டீர்களா?​  பதில்:- கவலையா? சந்தோஷமல்லவா பட வேண்டும்.  என்னைத் திட்டுகிறார்கள் என்றால்,  சமூக நன்மைக்காக எழுத்தாலும் பேச்சாலும் நான் கொடுக்கும் மருந்துகள்,  வேலை செய்யத் தொடங்கிவிட்டது என்றல்லவா அர்த்தம்.  அதனால்த்தான் அத்திட்டுக்களைக் கேட்டு நான் சந்தோஷப்படுகிறேன்.  ஒரு …

மேலும் படிப்பதற்கு

'நின்றவனே காத்திடுவான் நினையும்!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Jul 10, 2021 01:27 pm

உருத்திரனார் தன் வஞ்சம் உளமதனில்  பெருகிடவே அருகிருந்த பொன்னரையே அண்டித்தான் - வெறுப்பேற்ற ஏன்காணும் நீரும் அவ்விழவெடுத்த தடுப்பூசி தான் போட்டுவிட்டீரோ தடுக்க. எவ் ஊசிதனைப் போட்டீர் இந்தியர்கள் தான் தந்த அவ் ஊசி தனைத்தானோ! அவர் கேட்க - பவ்வியமாய் பொன்னர் தலையாட்ட போச்சுது உம் வாழ்வு இனி  பின்னர் …

மேலும் படிப்பதற்கு

'கம்ப நாடகம்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Jul 09, 2021 12:24 pm

உலகம் போற்றும் நம் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன், முத்தமிழ்த்துறைகளிலும் முறை போகிய உத்தமன். தன் காவியத்தில் இயற்றமிழ், இசைத்தமிழ் நுட்பங்களைப் போலவே, நாடகத்தமிழின் நுட்பங்களையும் வியக்கும் வண்ணம் பதிவாக்கியுள்ளான். அங்ஙனம் கம்பனால் கையாளப்பட்ட, நுட்பமிகுந்த நாடக உத்தி ஒன்றை இனங்கண்டு காட்டுவதே, இக்கட்டுரையின் நோக்கமாம்.    நவீன நாடக வல்லுநர்கள், தம் நாடகப் பாத்திரங்களை, தனித்துவமாய் …

மேலும் படிப்பதற்கு

'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 73 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Jul 08, 2021 12:57 pm

   'றோட்டறிக்' கழகம் தந்த ஆதரவு யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, உதயன் சரவணபவனின் வேண்டுதலால் குமாரதாசனும்,  ரத்தினகுமாரும், 'றோட்டறிக் கிளப்பில்' இணைந்திருந்தமை  பற்றிச் சொல்லியிருக்கிறேன். கொழும்பு வந்தும் அவர்களுக்கு  அத்தொடர்பு நீடித்தது. இராணுவப் பயத்திலிருந்து நீங்க, கொழும்பில் தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் என நினைந்து, எங்கள் வீட்டில் ஓர் இரவு  'றோட்டறிக்  கிளப்பினருக்கு' விருந்தளித்தோம். செல்வாக்கும், செல்வமும் மிகுந்த அவர்களெல்லாம், பெரிய பெரிய …

மேலும் படிப்பதற்கு

பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 24: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

Jul 05, 2021 12:55 am

கேள்வி 01:- என்ன? விஷேசமொன்றும் இல்லாமல் திடீரென ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறாரே?  பதில்:- விஷேசமில்லை என்று யார் சொன்னது?  ஆட்சிப் படகிற்குள்,  பயணக்கட்டுப்பாட்டு எதிர்ப்பு, உரமின்மை எதிர்ப்பு, கடல்மாசு எதிர்ப்பு, சீன எதிர்ப்பு,  எரிபொருள் விலையேற்ற எதிர்ப்பு, உட்கட்சிப்பூசல் என  பலபக்கங்களிலும் ஓட்டைகள் விழத் தொடங்கிவிட்டன.  அவற்றை அடைப்பதற்கு அவரது குடும்பக் கரங்களும்  இராணுவக் …

மேலும் படிப்பதற்கு

உகரத்தின் புதிய முயற்சி: 'ஒலி நூலகம்'

Jul 03, 2021 08:35 am

ஒலி நூலகம்' உங்களுக்காக எங்கள் குருநாதரின் எழுத்தாக்கங்களை ஒலி வடிவில் தரப் போகிறோம். அவரது பேச்சுக்கள் எல்லோரையும் ஈர்ப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதைவிட அவரது எழுத்துக்கள் இன்னும் ஈர்ப்புடையன.  சிந்தனையைத் தூண்டும் ஆய்வுக்கட்டுரைகள்  நகைச்சுவையுடன் கூடிய கிண்டல் கட்டுரைகள் ஆழம் மிகுந்த இலக்கியக் கட்டுரைகள்  மனம் உருக்கும் பக்திக் கட்டுரைகள் …

மேலும் படிப்பதற்கு

'நிலைத்திடுமோ மெஞ்ஞானம் நினை!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Jul 03, 2021 08:03 am

உலகம் வெறுத்துப் பின் உற்றவரைத் தான் துறந்து விலகித்தான் வாழ்விருந்து விண்ணடைய - உளம் அடக்கி கண்மூடித் தவமிருந்த கற்றோனும் அசைய மனம்  பெண்தேடி வீழ்ந்தானாம் பிரண்டு. ஆறாறு தத்துவத்தை ஆராய்ந்து தெளிந்தவனும் வீறாக விண்ணடைய விரைந்தானாம் - நேராக ஐயன் தாள் அது சேர ஆயத்தங்கள் செய்தானாம் பொய்யதனை புகழென்று …

மேலும் படிப்பதற்கு
அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்