புதிய பதிவுகள்

'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 56 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Mar 11, 2021 03:32 pm

   பிரச்சினைகள் தொடர்ந்தன விழா வேலைகளையெல்லாம் ஒருவாறு செய்து முடித்தோம். வழக்கமாக எங்களுக்குப் பந்தல் போடுகிறவர், கழகத்தின் மேல் பகைகொண்டவர்களின் தூண்டுதலால், முடிந்த ஆண்டில் பேசியதைவிட  அதிகமான தொகையைக் கேட்க, நாம் அவர் கோரிக்கையை மறுத்தோம். அவர் சுன்னாகத்திலிருந்த புலிகளின் காவல்துறையில்  முறைப்பாடு வைத்தார். சூழ்நிலை எங்களுக்கு எதிராக இருந்ததால், பிரச்சினையை வளர்க்க விரும்பாமல், அவர் கேட்ட தொகையைக் …

மேலும் படிப்பதற்கு

பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 07: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

Mar 07, 2021 02:07 pm

கேள்வி 01:- யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெற்ற சிலருக்குக் கன்னத்தில் தடவிக் கொடுத்தும், சக்கரநாற்காலியில் வந்தவருக்குத் தான் முழங்காலில் நின்றும் பட்டமளித்து நெகிழச்செய்த துணைவேந்தரின் செயலைப் பார்த்தீர்களா? பதில்:- பார்த்தேன். அவரின் மனிதாபிமானத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.  நினைவுச்சின்ன உடைப்பில் தேவைக்கதிகமாக நிமிர்ந்து பலரதும் எதிர்ப்பைச் …

மேலும் படிப்பதற்கு

'இயற்கை - தமிழ் - கம்பன்': பகுதி 2-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Mar 06, 2021 10:32 am

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦ முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧    ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦ உயிரும் மெய்யும் கூடி உயிர்மெய்யாய் நிற்கும், உலகின் ஓர் உயிர்ப்பொருளை ஆராய்வோம். உயிரும் மெய்யும் கூடிய நிலையில், மெய்யே,  அவ்வுயிர்ப்பொருளின் வடிவத்தைக் காட்டுகிறது. வடிவுக்கு மெய் காரணமாயினும், உயிரின்றேல் அம் மெய்க்கு இயக்கமில்லை. அதுநோக்க, அவ்வுயிர்ப் பொருளின் இயக்கத்திற்கு, உயிரே காரணமென்று உணர்கிறோம். இதனால், ஓர் உயிர்ப்பொருளின், வடிவை மெய்யும், இயக்கத்தை உயிரும் தீர்மானிப்பது …

மேலும் படிப்பதற்கு

'சிவனருட்செல்வி': பகுதி 05 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Mar 05, 2021 12:20 pm

உலகம், மானக்கஞ்சாறனாரின் பக்தி நிலை கண்டு வியந்து நிற்கிறது. மகளின் அறுத்தெடுத்த கூந்தலைக் கையில் எடுத்துக் கொண்டு, வந்த சிவனடியாரைத் தேடுகிறார் மானக்கஞ்சாறனார். எங்கு தேடியும் அவரைக் காண முடியாது திகைக்கிறார். நின்ற பெரியவர்கள் சிவனடியார் வேடத்தில் வந்தவர் சிவனேயென முடிவு செய்கின்றனர். அனைவர் கண்களிலும் ஆனந்த அருவி.    நடந்த …

மேலும் படிப்பதற்கு

'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 55 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Mar 04, 2021 01:06 pm

   வெள்ளை கட்டுவதிலும் பிரச்சினை இம்முறையும் நல்லூர் வீதியில் பந்தல் போட ஆயத்தங்களைச் செய்தோம். அதிலும் பல பிரச்சினைகள் வந்தன. பந்தலுக்கு வெள்ளை கட்டுகிற பொறுப்பைத் தன்னிடம் தரச்சொல்லி, எங்கள் கழகத்தின் சலவைத் தொழிலாளி கெஞ்சிக் கேட்க, சரி என்று சம்மதித்து அப்பொறுப்பை அவனிடம் கொடுத்தோம். ஆனால் விழாவிற்கு முதல் நாட்களில் …

மேலும் படிப்பதற்கு

பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 06: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

Feb 28, 2021 01:15 pm

கேள்வி 01:- தமிழ்நாட்டு விஜயத்தின்போது ஈழத்தமிழர்கள்பற்றி மோடி பேசியதைக் கேட்டீர்களா? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்:- தனக்குத் தேவை வரும்போதெல்லாம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்பற்றிப் பேசுவதை பாரதம் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது.  அந்த வழக்கத்தை மீறி அபூர்வமாய் பாரதம் நமக்குக் கைதர முனைந்தபோது  நம்மவர் அதனைக் கெடுத்துவிட்டனர்.  இப்போது மோடியும் எம்மைப் பற்றிப் …

மேலும் படிப்பதற்கு

'இயற்கை - தமிழ் - கம்பன்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Feb 27, 2021 02:29 pm

உலகம் ஆயிரக்கணக்கான மொழிகளைத் தன்னுள் அடக்கிநிற்கிறது. அவற்றுள் ஆதி அறியா அற்புதப் பெருமை, நம் தமிழ்மொழியின் தனிச் சிறப்பாம். ஆதி அறியா மொழியெனவே, அஃது அந்தமறியா மொழியாயும் நிலைக்குமாம். காலங் கடந்து நிலைத்தற்கான, தமிழ் மொழியின் தனித்த சிறப்புத்தான் என்ன? ஆராய்வது கடமையாகிறது.    அண்டங்களின் இயக்கத்தில், யாருமறியா ஓர் அற்புத ஒழுங்கு அமைந்திருக்கிறது. அவ்வொழுங்கே, அண்டங்கள் ஒன்றோடொன்று …

மேலும் படிப்பதற்கு

'சிவனருட்செல்வி': பகுதி 04 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Feb 26, 2021 12:35 pm

உதிரம் முழுவதும் வற்றினாற் போலாயிற்று சிவனருட்செல்விக்கு. மாப்பிள்ளை கலிக்காமர் குழுவினர் அண்மித்து விட்டதாய் வந்த செய்தியால், மகிழ்ந்திருந்த அவளின் எண்ணத்தில் முனிவரின் வேண்டுகோள், இடியாய் வீழ்ந்து இன்னல் தந்தது. நடக்கப்போவதை ஓரளவு அவள் ஊகித்தால், தந்தையின் இயல்பு அவளுக்குத் தெரியாததல்ல. அடியார் கேட்ட ஒரு பொருள் தன்னிடம் இல்லாவிட்டாலும்கூட, எங்கிருந்தேனும் அவர்களுக்கு …

மேலும் படிப்பதற்கு

'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 54 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Feb 25, 2021 12:30 pm

   சோதனைக்குள்ளாக்கிய 1995 இவ்வாண்டு கழகத்தைப் பொறுத்தவரை, மிகப்பெரும் சோதனைக்காலமாக அமைந்தது. முன்னைய ஆண்டுகளிலேயே கழகத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புக்கள். இவ்வாண்டில் ஒன்றாய்த் திரண்டு, எமக்குப் பெரும் சங்கடத்தை உண்டாக்கின. கழக வரலாற்றில் 1995 ஆம் ஆண்டுபோல, வேறெந்த ஆண்டும் எமக்குத் துன்பம் தந்ததில்லை. 1995 தந்த துன்பங்களிலிருந்து நாம் மீண்டு வந்தது, நிச்சயம் இறைவனுடைய திருவருளே. அத்துன்பங்கள் …

மேலும் படிப்பதற்கு

பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 05: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

Feb 21, 2021 12:12 am

கேள்வி 01:- நம் ஆட்சியாளர்களுக்கிடையில் வெட்டுக்குத்துத் தொடங்கிவிட்டாற்போல் தெரிகிறதே. அதுபற்றி உங்கள் கருத்து? பதில்:- ஏறிய ஏணியை எட்டி உதைக்க நினைக்கிறார்கள்.  அறம் கூற்றாகத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். உலகநாதரின் ஒத்தூதல்:  'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.' ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆ கேள்வி 02:- யாழ் மக்களுக்கோ, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ ஏதும் சொல்லாமல் யாழ்ப்பாணத்தின் மூன்று …

மேலும் படிப்பதற்கு

'ஈறில் நல்லறம்': பகுதி 03-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Feb 20, 2021 12:27 pm

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦ முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧    ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦ உறுதி உரைத்த உரைத்த வசிட்டரின் வார்த்தைகளை, கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் கவிதையில் பதிவாக்குகிறார். 'பெய்யும் மாரியால் பெருவெள்ளம் போய் மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல், ஐய! நின்மகற்கு அளவு இல் விஞ்சை வந்து எய்து காலம் இன்று எதிர்ந்தது'  மாரியால் உருவாகும் சிறு ஆறு …

மேலும் படிப்பதற்கு

'சிவனருட்செல்வி': பகுதி 03 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Feb 19, 2021 01:51 pm

உற்றாரும் உறவினரும் மகிழ்ச்சியோடு உலாவி நின்றார்கள். மாப்பிள்ளை வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அதனால் ஏற்பட்ட பரபரப்பில் திருமணப் பந்தல் சுழன்று கொண்டிருந்தது. தோழியர்கள் சிவனருட்செல்வியை இவள் ரதியோ எனும்படி அலங்கரித்திருந்தனர். அவர்களால் அணிவிக்கப்பட்டிருந்த வைர நகைகள்,  சிவனருட்செல்வியின் அழகுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் சற்று மங்கி நின்றன. முழங்கைவரை அணிவிக்கப்பட்டிருந்த தங்க, …

மேலும் படிப்பதற்கு

'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 53 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Feb 18, 2021 01:11 pm

   நவராத்திரி விழா (1994- நவம்பர்)  ஆண்டுதோறும் நவராத்திரி விஜயதசமி அன்று, யாராவது ஒரு அறிஞரை அழைத்து, அவருக்குப் பாதபூஜை செய்து விழா எடுப்பதை. வழக்கமாக வைத்திருந்தோம்.  கம்பன் கோட்டம் முழுமையாய்க் கட்டப்பட்ட பிறகு, இந்த நிகழ்வை முதல் முதலாக 1994 நவம்பர் மாதத்தில், கழக இளைஞர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி நடாத்தினோம்.  இந்நிகழ்வில் விக்கிரகங்கள் …

மேலும் படிப்பதற்கு

பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 04: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

Feb 14, 2021 12:32 pm

கேள்வி 01:- மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் என்ன நடக்கப்போகிறது?   பதில்:- ஆட்சியாளர்களின் பதற்றத்தைப் பார்த்தால்  வழக்கமாய் நடப்பதுதான் இம்முறையும் நடக்கும் என்று  உறுதியாய்ச சொல்லத் தோன்றவில்லை.  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவில் உருவாகி வரும்  பகையின் தன்மையைப் பொறுத்துத்தான்  முடிவு இருக்கப்போகிறது என்று நினைக்கிறேன்.  உலகநாதரின் ஒத்தூதல்:  உண்மை! வலியவர்களின் உலகம் இது.  ❆❆❆❆❆❆  …

மேலும் படிப்பதற்கு

'ஈறில் நல்லறம்': பகுதி 02-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Feb 13, 2021 01:10 pm

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦ முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧    ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦ உண்மை அறம், உபாய அறம் என அறமும் இருவகைப்படும். உபாய அறத்தினை ஒரு குருவிடம் முதலில் கற்றுத் தெளிந்த பின், உண்மை அறத்தினை வேறொரு குரு மாணவர்க்கு உணர்த்துவார். இதுவே அறம் கற்கையில் பேணப்படும் முறைமையாம். நூல்களால் உரைக்கப்படும் எல்லைப்படுத்தப்பட்ட அறத்தினை, மாணவர்க்கு ஒரு …

மேலும் படிப்பதற்கு

'சிவனருட்செல்வி': பகுதி 02 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Feb 12, 2021 09:48 am

உதிரம் ஏறிய கண்களோடு கொதித்து நின்ற கலிக்காமரை நோக்கி, அப்பெரியவர் கனிந்த குரலில் பேசத் தொடங்குகிறார். 'அப்பனே! அப்படி என்னதான் செய்துவிட்டார் அந்தச் சுந்தரர்? அதனை முதலில் நாம் அறியும்படி சொல்லு. 'பெரியவர் உத்தரவிட,' 'சொல்கிறேன்! சொல்கிறேன்! சொல்லாமல் என்ன செய்ய? அவன் செய்த அநியாயத்தை என் வாயால் …

மேலும் படிப்பதற்கு

'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 52 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Feb 11, 2021 12:57 pm

   கம்பனுக்கு எதிர்ப்பு -புலிகளின் புதிய வியூகம் மக்கள் மத்தியில் எங்களுக்கிருந்த மதிப்பினை விரும்பாத புலிகள்.  காரணமின்றி எங்களை நேராய்ப் பகைக்கவும் விரும்பவில்லை. ஆகவே, புதியதோர் வியூகம் அமைக்க நினைந்த அவர்கள், முந்தைய திராவிடர் கழகக் கொள்கையை உள்வாங்கி, கம்பராமாயணத்திற்கு எதிர்ப்பு எனும் வகையில், எமக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். கழக விழாக்களில் …

மேலும் படிப்பதற்கு

பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 03: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

Feb 07, 2021 05:51 am

கேள்வி 01:- இல்லறத்திற்கும் துறவறத்திற்கும் என்ன வித்தியாசம்?  பதில்:- ஒன்று பற்று வைப்பது! மற்றது பற்றைத் துறப்பது! ஒன்றுக்கொன்று முரண்பட்ட இவ்விரு நிலைகளையும் தொடர்புபடுத்தி,  அறமாய் வகுத்த நம் பெரியவர்களை வணங்கத் தோன்றுகிறது. உலகநாதரின் ஒத்தூதல்:  இவர் வைப்பவரா? துறப்பவரா? ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆ கேள்வி 02:- கம்பர் வைஷ்ணவரா? சைவரா? பதில் :- மனிதர்! உலகநாதரின் ஒத்தூதல்:  மற்றவர்கள் எல்லாம் …

மேலும் படிப்பதற்கு

'ஈறில் நல்லறம்': பகுதி 01-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Feb 06, 2021 12:47 pm

உலகில் அனைவராலும் விரும்பப்படும் விடயம் வெற்றியாம். வெற்றிநோக்கியே அனைவர்தம் இயக்கமும் அமையுமாம். இவ்வெற்றியை அடைதல் எங்ஙனம்? இதற்காம் வழியைப் பலரும் பலவாய் உரைப்பர். வெற்றி அடைதற்காம் நிச்சய வழியொன்றை நம் தமிழ்ச்சான்றோர் இனங்காட்டினர். அறவழி நடத்தலே வெற்றிக்காம் வழியென்பதே அவர்தம் முடிந்த முடிபு. அறம்வழுவிய எம்முயற்சியும் வெற்றியை நல்குமாற்போல் தோற்றி, முடிவில் …

மேலும் படிப்பதற்கு

'சிவனருட்செல்வி': பகுதி 01 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

Feb 05, 2021 01:19 pm

உலகம் சுழலுமாற்போல் தோன்ற, சிவனருட்செல்வி கலங்கி நின்றாள். வாழ்க்கையில் எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாத நிலை அவளுக்கு. தன் காதல்க் கணவன் வாளால் வயிறு கிழிக்கப்பட்டு, இரத்த வெள்ளத்தில் கிடக்கும் காட்சியை எந்தப் பெண்தான் தாங்குவாள். சிவனருட்செல்வியின் உள்ளம் கதறி அழுதது. ஆனாலும் வாய்விட்டுக் கதறி அழமுடியாத அந்தரநிலையில் இருந்தாள் அவள். காரணம், …

மேலும் படிப்பதற்கு
அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்