பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 20: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:-

தமிழ் வெல்லுமா?

பதில்:-

எப்போ தோற்றது?

😇உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆


கேள்வி 02:-

கொழும்பில் கப்பல் தீப்பற்றி எரிகிறதாமே?

பதில்:-

எந்தக் கப்பலைச் சொல்கிறீர்கள்?

😜உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'இந்த 'குசும்பு' தானே வேணாங்கிறது.'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-

பயணத்தடை யூன் 14 வரை நீடிக்கப்பட்டிருக்கிறதே?

பதில்:-

யூன் 14 இல் விழப்போவது முற்றிப்புள்ளியா? 'கமா' வா? யாருக்குத் தெரியும்.

 

😔உலகநாதரின் ஒப்பீனியன்: 📣'கரிநாக்கு... கரிநாக்கு...'

 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-

மருத்துவ அதிகாரிகள் 'லொக்டவுண்' பண்ணும்படி தலை தலையாய் அடித்துக் கேட்டும் அதை அலட்சியம் செய்துவிட்டு இப்போது அடுத்தடுத்து அதனை நீடித்துக் கொண்டு போகிறார்களே?

பதில் :-

எல்லாவற்றுக்கும் இராணுவத்திடம் அபிப்பிராயம் கேட்டதால் வந்த வினை. 
பிழை என்று தெரிந்த பிறகும் 
தான் நினைத்த காரியத்தை முடித்தே தீருவேன் என நினைக்கும் அரச மானத்தை, 
குற்றம் உடைய மானம் என்கிறார் வள்ளுவர். 
குறளை நல்லபடி மொழிபெயர்த்து ஆட்சியாளர்களிடம் எவரேனும் சேர்ப்பிப்பார்களா?

👌 உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'வாரிதியார், இல்லாத ஊருக்கு வழி சொல்லுறார்.'

 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:-

கொரோனா நெருக்கடியில் நாடு பொருளாதாரத்தில் தத்தளித்துக் கொண்டு இருக்கும்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்கள் வாங்க, இவ்வளவு தொகை ஒதுக்க வேண்டுமா?
பதில் :-

வெட்கக்கேடான விடயம்!
மக்களின் உயிரைவிட 'மாண்புமிகுக்களுக்கு' வாகனந்தான் பெரிதாய்த் தெரிகிறது. 
இந்தக் 'கிருமிகளைத்' திருத்த இன்னும் எத்தனை கிருமிகள் வரப் போகின்றனவோ? 
ஒரு சில எம்.பீக்கள் அதை எதிர்த்துக் குரல் கொடுத்ததையும் கேட்டேன். 
அவர்களுக்கு எனது மரியாதையுடன் கூடிய 'சல்யூட்'

😡உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  மாண்புமிக்க சின்ன மனிதர்கள்

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 

கேள்வி 06:-

சீனா, தனது 'சினோபாம்' தடுப்புமருந்தின் மூலம் இலங்கையரைக் கியூவில் நிற்க வைத்துவிட்டதே?
பதில் :-

இது தான் ஆரம்பம் 
இன்னும் என்னென்னவற்றிற்கெல்லாம் கியூவில் நிற்க வேண்டி வருமோ? 

🥀உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   'போகப் போகத் தெரியும் இந்தப் பூ வின் வாசம் புரியும்'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

 

கேள்வி 07:-

சென்னை 'பத்மா சேஷாத்திரி பால பவன்' பள்ளி, பிரச்சினைபற்றி அறிந்தீர்களா?  

பதில் :-

அறியாமல் என்ன? 
கடந்த வாரத்தில் இணையத்தளங்கள் முழுவதையும் 
அந்தப் பிரச்சினை தானே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. 
இருபக்கத்தில் இருந்தும் வைக்கப்படும் தரக்குறைவான வாதங்கள் 
கற்றோரை முகம் சுழிக்க வைக்கின்றன. 
ஒன்று மட்டும் உண்மை.
வாதம் செய்யும் இருசாராரிடமும் சத்தியத்தை விட 
சாதியமே முதன்மைப்படுகிறது. 
தமிழ்நாடு வெட்கப்படவேண்டிய விடயம்

🤦உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'நீதியா? சாதியா?'  சினிமாவுக்கு நல்ல ரைட்டில்
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 01:-

அமைச்சர் டக்ளஸ் அந்தணர்களுக்கென்று தனி கொரோனா முகாம் அமைத்துக் கொடுத்திருக்கிறாராமே?

பதில்:-

நானும் கேள்விப்பட்டேன். 
பாராட்ட வேண்டிய விடயம். 
இந்து மதத்தவர்கள் அமைச்சருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். 
இதைவைத்தேனும் அந்தணர்கள், தாம் அந்தணராய்ப் பிறந்ததன் பெருமையை 
உணர்ந்து கொள்வார்களா?

😷உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'அப்ப இதுவரை உணரவில்லைங்களா?'

 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்