'பரிசில் புலமை' -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-

சின்னஞ் சிறு குஞ்சு,
அதன் புன்சிரிப்பைப் பறித்துவிடும்
பெறுபேற்றின் வெளிவருகை.

'சித்தி பெறவில்லை நீ'
எனும் வார்த்தையில்
கீறுண்டு
வடிகிறது குருதி.

வெட்டுப் புள்ளியில் காயமுற்று
தலைகவிழும், அக்குஞ்சு
தொட்டுத் தடவ விரலொன்றில்லை
அதை.

தாயின் அனல் வார்த்தைகளில் தீக்குளித்து
வெந்து கருகும் தளிர்.

சருகாகும் மனிதம்
சாம்பர் பூக்கும் கல்வி.

முகப்புத்தக வாழ்த்துக்கள்
தன் முத்துக்கில்லையே
என்ற வருத்தம்
அகஞ் சுமந்த அந்த அன்னைக்கு.

அவளின் தலை கோதிச்
சொல்கிறது மழலை மொழி
'கொல்லுங் கிருமிதன்
கொடுங்கோன்மை இடையேயும்
பள்ளி
செல்ல நேர்ந்ததும்
பரீட்சை செய்ததும் வெற்றிதானே அம்மா!
நான் சித்தி பெற்றவன்.'

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்