'பார்புகழும் 'பத்மஸ்ரீ' விருதைப் பெற்றாய்' -பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன்-

ண்டிதர்க்குமட்டுமல்லப் பேச்சு, அது
பாமரர்க்கும் உரியதெனஉரத்துச் சொன்ன
தொண்டினையார் செய்தார்கள் உன்னையன்றி?
தோமறுமாத் தமிழறிஞ!  துறைவல்லோனே!
தெண்டிரைசேர் ஞாலமெலாம் இருக்கும் மாந்தர்
'திரையுலகப் பிரபலம்' போல் உன்னைநாடி
வண்டினைப் போல் மயங்கித் தேன்மாந்தும் வண்ணம்  
வைத்தவனே! தமிழ்வளத்தின் சொத்தையாவே!

சிரிப்புவரும் முன்னே, அதற்குப் பின்னால்
சிந்தனைசேர் சொற்கள்தாம் படையெடுக்கும்
பொறுப்புமிகும் அவர் கருத்துப் பேச்சினாலே
பொங்கிவரும் கலை, போதிஞானம் பூக்கும்,
குறிப்புமொழிவிருந்தாகும், கொஞ்சிப்பேசும் 
குழந்தைமொழி அனைவருக்கும் மருந்துமாகும்
விருப்பமிகும் ஈழத்துரசிகர் நெஞ்சை
வெல்லுகிற புன்சிரிப்பு விரியலாகும்!

சீரியநற்தமிழறிவு, எங்கள் வாழ்வில் 
சிந்தனைகள் பலசேர்க்கும் கருத்துச்செம்மை,
கூரியநல்மதிநுட்பம், அதனையார்க்கும்
கூறுதற்குஎன வாய்த்தவெல்லும் சொற்கள்,
'யார் அவற்றைக் கொண்டார்கள்?' என்னும்போது
யாவர்க்கும் பாப்பையா பெயரே தோன்றும் 
பார்புகழும் '
பத்மஸ்ரீ' விருதைப் பெற்ற
பண்பாள! நின்பாதம் பணிகின்றோமே! 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்