'ஆகமம் அறிவோம்' பகுதி 22: 'மற்றைய அபரக்கிரியைகள்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

ங்களுக்கு சென்றமுறை,
ஒருவர் இறக்கும்போது செய்கின்ற அபரக்கிரியைகள்,
14 பிரிவுகளாய் அமைக்கப்பட்டுள்ளன என்றும்,
அவற்றின் பெயர்கள் இன்னன்ன என்றும் சொல்லியிருந்தேன்.
அப் பதினான்கில் அத்திசஞ்சயனம் வரை,
விபரமாய்ப் பார்த்தோம்.
இனி, அதைத் தொடர்ந்த மற்றவை பற்றி இம்முறை சொல்கிறேன்.

🍁  🍁  🍁

ஆறாவது அபரக்கிரியையான நக்கினப் பிரச்சாதனம் பற்றி இனிப் பார்க்கலாம்.
ஒரு குடத்தில் அரிசியை நிரப்பி அக்குடத்தைச் சுற்றி வஸ்திரங்கள் கட்டி,
வெண்கலப் பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, 
பரமசிவனைத் தியானம் பண்ணிக் கொண்டு,
இல்வாழ்வானுக்கு அவற்றைத் தானமாய்க் கொடுப்பதே,
நக்கினப் பிரச்சாதனம் கொடுக்கும் முறையாகும். 
இதனைச் செய்யவேண்டும் என்பதற்கான பிரமாணம், 
'காமிக ஆகமத்திலும்', 'ஆசௌசதீபிகையிலும்' உள்ளது. 
அவற்றின் விபரம் பின்வருமாறு:
'தீஷிதனாகிய இல்வாழ்வானுக்கு நக்கினப் பிரசாதனம் கொடுக்க. 
அது தகனமுடிவிலே இறந்தவனைச் சுட்டி வஸ்திரத்தோடும் அரிசியோடும் கொடுக்கற்பாலது'

மொழிய வரு நக்கினத்தை மூடவரும் சிராத்த
முந்து தகனாந்தத்தின் மரித்தவனைக் குறித்துப்
பழியின் அவ வத்திரமும் பச்சரிசி தானும்
பகர்ந்திடு நல் அக்கிணையும் முதலான பொருள்கள்
அழிவில் சிவ தீக்கை உள இல்வாழ்வான் கையில்
அளித்திடுக!

🍁  🍁  🍁

அடுத்து ஏழாவதான அபரக்கிரியையாகிய,
ஏகோத்தரவிருத்தியின் விபரங்களை அறியலாம்.
முதல் நாளில் மூன்று தருப்பணமும், 
இரண்டாம் நாள் முதலாக தொடக்கு முடியுமளவும்,
தினமும் ஒவ்வொன்று அதிகரித்த தருப்பணமும் செய்தலுமே,
ஏகோத்தரவிருத்தியாகும். 
பத்து நாட்கள் தொடக்கு உள்ள பிராமணருக்கு,
ஏகோத்தரவிருத்தி தருப்பணம் எழுபத்தைந்தாம்.
பன்னிரண்டு நாட்கள் தொடக்கு உள்ள சத்திரியருக்கு,
ஏகோத்தரவிருத்தி தருப்பணம் நூற்றிரண்டாம்.
பதினைந்து நாட்கள் தொடக்கு உள்ள வைசியருக்கு,
ஏகோத்தரவிருத்தி தருப்பணம் நூற்றைம்பதாம்.
முப்பது நாட்கள் தொடக்கு உள்ள சூத்திரருக்கு,
ஏகோத்தரவிருத்தி தருப்பணம் ஐந்நூற்றி இருபத்தைந்தாம்.
தருப்பணத் தொகையின் அளவான ஏகோத்தரவிருத்தி சிரார்த்தத்தினையும்,
அவ்வத் தினங்களிலே செய்க என நூல்கள் உரைக்கின்றன.

🍁  🍁  🍁

அடுத்ததாக எட்டாவதாகிய நவச்சிரார்த்தம் பற்றிய விபரங்களை அறியலாம்.
'நாலாநாளிற்றான், ஐந்தாநாளிற்றான், ஒன்பதாநாளிற்றான், 
பதினொராநாளிற்றான் இறந்தவனைக் குறித்துச் செய்யுந்தானம் நவச்சிராத்தம் எனப்படும்'

🍁  🍁  🍁

மற்றைய அபரக்கிரியைகளின் விபரங்கள் பற்றி,
அடுத்தவாரம் அறியலாம்.

🍁  🍁  🍁

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்