கம்பவாரிதிக்கு 'வலம்புரி' புருசோத்தமன் எழுதிய அன்பு மடல்கள்: 27.03 - 09.04 /2019 (பத்துப் பாகங்கள்).

கம்பவாரிதிக்கு 'வலம்புரி' புருசோத்தமன் எழுதிய அன்பு மடல்கள்:                   27.03 - 09.04 /2019 (பத்துப் பாகங்கள்).
புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 1)

பெருமைமிகு கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு அன்பு வணக்கம்.
தங்களின் பேச்சாற்றலால்,  ழத்தமிழினம் உலகப் புகழ் பெறுவது கண்டு
புளகாங்கிதமடைகின்றோம். தமிழகத்தில் தங்களுக்கு வழங்கப்படும் விருதுகள் தங்களினூடாக ஈழத்தமிழினத்திற்குரியது என்ற இறுமாப்பில், எம் தோள் புயங்கள் உயருகின்றன.
கம்பன் விழா, திருக்குறள் வகுப்புக்கள், சேக்கிழாரின் பெருமை, திருவாசகத்தின் மகிமை
என்றவாறு தங்கள் தமிழ்ப்பணி நீண்டு செல்கின்ற அதேநேரம், எங்கள் ஈழத்துக்
கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் களம் அமைத்து மேடையேற்றி எம்மவர்களின் திறத்தை
பகிரங்கப்படுத்தும் தங்களின் அளவு கடந்த பணிக்கு என்றும் எம் நன்றிகள். யாழ்ப்பாணத்தில் 
கடந்த மார்ச் மாதம் 15, 16, 17 ஆம் திகதிகளில் நடந்த கம்பன் விழாவின் முதல் நாள் நிகழ்வில் பொன்னாலை சந்திரபரத கலாலய இயக்குநர் ஸ்ரீமதி ஸ்ரீதேவி கண்ணதாசன் அவர்களின் நெறியாள்கையில் இடம்பெற்ற நாட்டிய வேள்வி கண்டு வியக்காதவர்கள் யார் உளர்.

பரதனின் பெருங்குணத்தினூடு அன்பின் மகிமையை வெளிப்படுத்திய அந்த நாட்டிய வேள்வி
பார்வையாளர்களின் கண்ணீருடன் நிறைவு கண்டபோது ஈழத்தமிழனை எவரும் எதுவும் செய்ய
முடியாது என்ற எண்ணம் எம் இதயங்களை வைரப்படுத்தியது. அந்த வைராக்கியம் கலை, பண்பாடு, இயல், இசை, நாடகம் என்ற துறைகளில் நாம் விரைந்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருகிறது. எனினும் இலங்கை மண்ணில் எங்களின் வாழ்வு, எங்களுக்கு இருக்கக்கூடிய உரிமை, போரில் நொந்துபோன மக்களுக்கு மறுக்கப்படுகின்ற நீதிரூபவ் அரசியல் என்ற பெயரால் எங்கள் மக்களை காட்டிக் கொடுக்கின்ற யூதாஸ்கள் இவர்களையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது தான் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதியாகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். நீங்கள் பேசுகின்ற மேடைகளில் திரும்பத் திரும்ப எடுத்துரைக்கின்ற அறத்தின் பாற்பட்டு எங்கள் தமிழ் அரசியல் தரப்பில் ஏற்படவேண்டிய ஒற்றுமை பற்றிப் பிரஸ்தாபிப்பதும்
எங்களை ஏமாற்றுகின்ற தமிழ் அரசியல்வாதிகளை வெளியேற்ற வேண்டியதன் அவசியத்தையும்
இவ்விடத்தில் எடுத்துரைப்பது இக்கடிதத்தின் முக்கிய நோக்கமாகும்.
 
அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே!...
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அதிலும் குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியினரின் போக்குகள் எங்கள் தமிழினத்தை நிர்மூலமாக்குபவையாக இருக்கின்றன என்பதை நாம் கூறி நீங்கள் அறியவேண்டியதில்லை. இருந்தும் இலங்கைப் பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலைப்புச் செய்தபோது, கூட்டமைப்பினர் நீதிமன்றேறி பாராளுமன்றக் கலைப்பு அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறி வாதிட்டனர். அந்த விவாதம் நீதிமன்றால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாராளுமன்றக் கலைப்பு இரத்துச் செய்யப்பட்டது.
இச்சம்பவம் நடந்தேறிய போது தாங்கள் உகரத்தில் ஓர் ஆக்கத்தை வரைந்தீர்கள். அதை
வாசித்தபோது, அறம் உரைக்கவல்ல கம்பவாரிதி அவர்கள் நிலைமையைத் தவறாகப்
புரிந்துவிட்டார் என்ற வேதனை என்னை வாட்டியது. இருந்தும் அந்த நேரத்தில் அது பற்றி நாம் தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தால், அது கூட்டமைப்பு மீது கொண்ட காழ்ப்புணர்வின் எண்ணம் என்றே அந்தக் கடிதத்தை தங்களும் மற்றவர்களும் பார்த்திருப்பர். ஆகையால்தான் காலம் வரும் வரை காத்திருந்தேன். அந்தக் காலம் வந்துவிட்டது. இப்போது உண்மை வெளிப்பட்டுள்ளது.

ஐ.நா. மனிதவுரிமை ஆணையம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்குக் காலஅவகாசம் வழங்கக்கூடாது என தமிழ்த் தரப்புக்கள் வலியுறுத்தின.
ஆனால் அதனை வலுக்குறைப்புச் செய்யும் வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி காலஅவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறியது. காலஅவகாசம் என்பது தவறான வார்த்தை என்றும் இலங்கை மீதான ஐ.நாவின் மேற்பார்வை என்பதாகவும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விளக்கம் கொடுத்திருந்தார். இப்போது நிலைமை என்ன என்பது நீங்கள் அறியாததல்ல. கால அவகாசம் கேட்டிருந்த இலங்கை அரசு; கலப்பு நீதி மன்றத்தை நிராகரித்து விட்டது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத் தொடரில் உரையாற்றும் போது கலப்பு நீதிமன்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். உள்ளூர் நீதிபதிகளைக் கொண்டு விசாரணை இடம்பெறும் என்பது அவரின் அறிவிப்பு. அந்த அறிவிப்புத் தொடர்பில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் எந்த எதிர் வினையும் வெளிப்படுத்தப்படவில்லை.
 
ஆக, இதற்கு முன்னரும் கால அவகாசத்தைக் கோரிப் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு காலம்
கடத்திவிட்டு இப்போது வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறக்கூடிய கலப்பு நீதிமன்ற
முறைமையைத் தூக்கி எறிந்துள்ளனர். எனினும் கலப்பு நீதிமன்றத்தை இலங்கை அரசு நிராகரிக்க முடியாது என்றும் அவ்வாறு நிராகரித்தால் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டு செல்வோம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் வைத்துக் கூறியுள்ளார். அவர் கூறியதன் உள்ளார்ந்தம் தங்களுக்குத் தெரியாததல்ல.
✿ ✿ ✿ ✿ ✿ ✿
 
புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 2)
 
அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே! 
கால அவகாசம் வழங்கக்கூடாது என்று ஒட்டு மொத்தத் தமிழர்களும் கேட்ட போது காலஅவகாசம் வழங்க வேண்டும் என தமிழரசுக் கட்சி விடாப்பிடியாக நின்றது. இங்கு தமிழரசுக்கட்சி என்பது அதன் தலைவரின் கட்டுப்பாட் டில் கூட இல்லை என்பது வேறு விடயம்.

ஆக, தமிழரசுக் கட்சியை இப்போது முழுவதுமாக நிர்வகிப்பது யார் என்பது தசரதச் சக்கரவர்த்தியின் அரசாட்சியை எடுத்துரைக்கும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க நியாயமில்லை. தமிழரசுக்கட்சி தனியொருவரின் ஆதிக்கத்திற்குள் இருக்கிறதா? அந்தக் கட்சியின் தலைவர் பெயரளவில் மட்டுமே இருக்கிறாரா? என்பது பற்றி யயல்லாம் நமக்குக் கவலையில்லை. தனிமனித ஆளுகைக்குட் பட்டு ஒரு கட்சி செயற்படு கிறது என்றாலும் அந்தக் கட்சி சரியாகச் செயற்பட்டால், அதற்கு விமர்சனம் ஏற்பட நியாயமிருக்காது. ஆனால் தனிமனித
ஆளுகையின் கீழ் எம் இனத்தின் தலைமை என்று கூறக்கூடிய ஓர் அரசியல் கட்சி தவறான பாதையில் பயணிக்கும்போது அதுபற்றிய விமர்சனத்தின் முன்னுரை தனி ஆள் ஆளுகை பற்றியதாக இருப்பது தவிர்க்க முடியாததே. எம்மைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்மக்களை படுகுழியில் வீழ்த்துகிறது. எனினும் அது பற்றி மக்களை விழிப்படையச் செய் வதற்கு ஆளில்லை. அப்படித் துணிந்து ஒருசிலர் கருத்துரைத்தாலும் அவர்களை விமர் சித்து அவர்களின் நேர்மைக்குப் பங்கம் இழைக்கின்ற பாவங்களும் நடப்பதனால் தீவினை கொளுந்து விட்டு எரிகிறது.
 
மதிப்பார்ந்த கம்பவாரிதி அவர்களே! ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தின் கூட்டத் தொடரில் காலஅவகாசம் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு என்பது இலங்கைத் தமிழரசுக் கட் சியால் பாதுகாக்கப்பட்ட அரசு. நீதிமன்றம் ஏறிய தமிழரசுக் கட்சி, பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் அரசை ஜனாதிபதி மைத்திரி கலைத்தது தவறு என்று வாதிட்டது. இதற்கு மேலாக இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட போது பிரதமர் ரணில் மீதும் அவரது அரசு மீதும் எங்களுக்கு நம்பிக்கை உண்டு என ஆதரவாக வாக்களித்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் என்பது மறுக்க முடியாத உண்மை.
 
ஆக, நாம் இப்போது கேட்பதெல்லாம்; தமிழரசுக் கட்சி யால் பாதுகாக்கப்பட்ட இலங்கை அரசு- தமிழரசுக் கட் சிக்கு நம்பிக்கைக்குரிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலப்பு நீதிமன்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறும்போது அதனை ஐ.நா. மனிதவுரிமை ஆணையாளரோ அன்றி, வெளிநாட்டுப் பிரதிநிதிகளோ எதிர்க்க முடியுமா என்ன? இங்குதான் பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கமீது நம்பிக்கை உண்டு எனக்கூறி ஆதரவளித்த தமிழரசுக் கட்சியின் செயற்பாடு தமிழினத்திற்கானதா? அல்லது சொந்தநலன் சார்ந்ததா? என்பதை அனைத்து அறத்தையும் ஆழ்ந்துணர்ந்த தாங்கள் அறிவீர்கள் என்பது எம் அசைக்கமுடியாத நம்பிக்கை.
 
நீதிமன்றத்தை நாடி, பாராளுமன்றக் கலைப்பை நிராகரித்த போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கமீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு என அவரை ஆதரித்து வாக்களித்த போது கலப்பு நீதிமன்றத்தை நீங்கள் ஆதரிப்பீர்களா? சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? என்றொரு வார்த்தையை பிரதமர் ரணிலிடம் கேட்டிருந்தால், அதுபுத்திசாலித்தனம். ஆனால் நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று தமிழரசுக்கட்சி கூறுகின்றதெனில், அந்தக் கட்சிக்கு தமிழினத்தின்பால், காணாமல் போன உறவினர்கள் விடுகின்ற கண்ணீரின் பால், சிறைகளில் வதைபடும் தமிழ் அரசியல் வாதிகளின் பால் எந்த அக்கறையும் இல்லை என்பதை நீங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வீர்கள்.
 
அன்பு மிகுந்த கம்பவாரிதி அவர்களே! கம்பராமாயணத்தில் மந்தரையின் மனக் கூனை, கைகேயியின் சண்டா ளத்தனத்தை, இராவணனின் விரச புத்தியை, சடாயுவின் தியாகத்தை, பரதனின் அன்புடைமையை, கோசலையின் குணவியல்பை, அனுமனின் பிரமச்சாரிய வீரத்தை எல்லாம் அக்குவேறு, ஆணிவேறாக அணுகிப் பார்த்து கம்பனைக் கடந்து கருத்தோவியம் படைக்கும் தாங்கள் எங்கள் தமிழ் அரசியல் தலைமையின் கீழ் மைத்தனத்தை நுணுக்கமாக ஆராயாமல் விட்டமை மன வருத்தம் தருகிறது.
அதுமட்டுமன்றி தமிழினத்தின் நம்பிக்கைக்குரிய அரசியல் தலைவராக இருக்கின்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களைத் தாங்கள் புறந்தள்ளுவதும் வேதனைக்குரியது.
வல்லவர்களை விட நல்ல வர்களே நமக்குத் தேவை என்றார் விடுதலைப்புலிகளின் யாழ். மாவட்டப் பொறுப்பாளராக இருந்த மூர்த்தி அவர்கள். அந்தக் கருத்து மிகவும் முக்கியமானது. இராமனின் நேர்மையும் ஏகபத்தினி விரதமும் தந்தை சொல்லை சிரமேற்கொண்ட பண்பும் பெரியவர்களை மதிக்கின்ற உயர்ந்த குணவியல்புமே இராமனைப் போர்க்களத்தில் வெல்ல வைத்தது.
சிவனார் கொடுத்த வாளும் கைநழுவும் அளவில் இராமனின் திரிகரண சுத்தி உயர்ந்து நின்றது. இப்போது நமக்குத் தேவை நம்பிக்கைக்குரிய, நேர்மைக்குரிய தர்மத்தைப் போற்ற வல்ல தலைவர்களே. அத்தகைய தலைவர்கள் முன்னிற்கும் போதுதான் எங்களுக்கான வெற்றியை தர்மம் பெற்றுத் தரும் என நம்புகிறேன்.
 
 
 
✿ ✿ ✿ ✿ ✿ ✿
 
புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 3)
 
.நா. மனிதவுரிமைகள் ஆணையத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற  இலங்கை அரசுக்குக் கால அவகாசம் கொடுப்பதா?  இல்லையா? என்ற விடயத்தில் கூட நாம் ஒருமித்து நிற்கமுடியாமல் போய்விட்டது.

கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனக்கூறிய தமிழரசுக் கட்சிக்கு கால அவகாசம் காலத்தைக் கடத்தும் என்பதனைக்கூட  உணரமுடியவில்லை. காலத்தைக் கடத்துவதன் மூலம் சம்பந்தப்பட்ட விடயம் நீத்துப் போவதற்கு  வழிவகுக்கும் என்பதே இலங்கை அரசின் உள்நோக்கம். இருந்தும் இவற்றை உணராமல் அல்லது உணராதது போல தமிழரசுக் கட்சி செயற்படுவதுதான் வேதனைக்குரியது. தமிழரசுக்கட்சி மீது  இவற்றை நாம் கூறும்போது தமிழரசுக்கட்சிக்கு நாம் எதிர்ப்பு என்று தயவுசெய்து நினைத்து விடாதீர்கள்.

துரியோதனா! நீ செய்வது தர்மமன்று  எனக்கூறிய  விதுரனே துரியோதனனைக் காப்பாற்ற நினைத்த முதல் ஆள். மாறாக துரியோதனா!  நீ செய்வது சரி என்று யாரெல்லாம் கூறினார்களோ அவர்கள் தான், தன் ஆதரவாளர்கள் என்று துரியோதனன் நம்பினான். ஆனால் அது உண்மை அன்று என்பதை குருசேத்திரப் போரின் 18ஆம் நாளில்தான் துரியோதனன் உணர்ந்திருப்பான்.
 
என்ன செய்வது, காலம் கடந்த பின்பு- எதுவும் செய்ய முடியாதென்ற சூழ்நிலை உருவாகிய பின்பு உண்மையை உணர்ந்து கொண்டாலும்  அதனால் பிரயோசனம் ஏதுமில்லை என்றாகிவிடுகிறது.
இதுபோலத்தான் எல்லாமே. எங்கள் போராட்ட அமைப்புக்கள் சில தீர்மானங்களை எடுத்தபோது அவற்றைத் தவறு என்று நம்மில்  யாரேனும் ஒருவர் எடுத்துரைத்திருந்தால்கூட இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும்.
போராட்ட அமைப்புக்களைக் குறைபடுவதாகத் தங்கள் கருத்து இருந்து விடக்கூடாது என்பதிலேயே நம்மவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்களேயன்றி, சரியானதைக் கூறுவதற்கு  எவரும் முன்வரவில்லை. அவ்வாறு முன்வந்திருந்தாலும் போராட்ட அமைப்புக்களின் முடிவு  கருத்துரைத்தவருக்குப் பாதகமாகக்கூட இருந் திருக்கலாம் என்பதையும் நாம் நிராகரிக்கவில்லை. எது எவ்வாறாயினும் இன்றி ருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியின் தவறான அணுகு முறைகளை யாரெல்லாம் விமர்சிக்கின்றார்களோ அவர்கள் தமிழரசுக் கட்சியைப் பாது காக்கப் பாடுபடுகின்றனர் என்பதே பொருளாகும்.
அந்தவகையில் நாமும் தமிழரசுக் கட்சியின் பாதை தவறிய பயணத்தை இங்கு சுட்டிக் காட்டுவது அந்தக் கட்சி சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே. இதற்கு மேலாக,  தமிழ் மக்கள்  தமிழரசுக் கட்சியை  நம்பி வாக்களித்தனர். அந்த நம்பிக்கைக்குத் துரோகம் இழைப்பதாகச் செயற்படுவது எந்தவகையிலும் தர்மமன்று.  
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற இளங்கோவடிகளின் அறக்கருத்து  இங்கு நோக்குதற்குரியது. கண்முன்னே நடப்பது நம்மக்களை ஏமாற்றுகின்ற  கபட நாடகம் என்பதை அறிந்தும் அதுபற்றி பேசாதிருப்பது பெரும் பிழை என்பது  நம் நிலைப்பாடு. இதனையே இதிகாச புராணங்கள் உலக மக்களுக்கு எடுத்துரைக்கின்றன என்பதைத் தாங்கள் ஒரு போதும் மறுக்கமாட்டீர்கள்.
ஆக, நாம் சொல்லிய மேற்போந்த பொருளின் அடிப்படையில் எங்கள் கருத்தை நோக்குங்கள் என்பதுதான்  நம் கோரிக்கை. இவை ஒருபுறமிருக்க, இப்போது ஐ.நாவில் கால அவகாசத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு கலப்பு நீதிமன்றத்தை  ஏற்கமுடியாது என்கிறது.
வெளிநாட்டு நீதிபதிகளும் பங்கேற்கக்கூடியதான கலப்பு நீதிமன்றை நிராகரித்தால், முடிவு உள்நாட்டவர்களே விசாரணை நடத்துவதாக இருக்கும். உள்நாட்டவர்கள் விசாரணை நடத்தினால்  நிலைமை என்னவாக இருக்கும் என்பதை நாம் கூறி நீங்கள் அறிய வேண்டிய தேவை இல்லை.
மன்னாரில் எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீதான காபன் பரிசோதனையின் முடிவு  350 தொடக்கம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட எலும்புக்கூடுகள் என்பதாக இருந்தது.
இரும்புக் கம்பிகளால் கைகட்டி, கால்கட்டிப் புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மீட் கப்பட்டு அவற்றின் புகை ப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்த பின்பு குறித்த எலும்புக்கூடுகள்  500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதாகப் பரிசோதனை முடிவு அமைகிறது எனில், தமிழினம் எவ்வாறு ஏமாற்றப்படுகிறது என்பது தெளிவாகிறதல்லவா. லைமை இதுவாக இருக்கையில், வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்காத விசாரணை; நடந்தால் என்ன, நடக்காமல் விட்டால் என்ன எல்லாம் ஒன்றுதான்.
 
✿ ✿ ✿ ✿ ✿ ✿
 
புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 4)
 
லப்பு நீதிமன்றத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையத் தின் கூட்டத் தொடரில் மிகத் தெளிவாகக் கூறியிருக்க,  தமி ழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் உரையாற் றுகையில்; கலப்பு நீதிமன் றத்தை  நிராகரித்தால்,  சர்வ தேச குற்றவியல் நீதிமன்றுக்கு  குறித்த விடயத்தைக் கொண்டு போவோம் என்று கூறியுள்ளார். தனது  கூற்றுக்குச் சார்பாக இணை அனுசரணைக்கு உடன்பட்ட பின்பு அதிலிருந்து  இலங்கை அரசு விலகமுடியாது  என தனது கருத்தை அவர் வலிமைப்படுத்தியுள்ளார்.
 
சட்டவியல் சார்ந்து  அவர் முன் வைத்த விடயம்  ஏற்புடைய தாக இருக்கலாம். ஆனால் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டு செல்லவேண்டும் என நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கூறிய போது  உங்களால் முடி ந்தால் கொண்டு போய்ப் பாருங்கள் என்று  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கூறியது ஏன்? என்பதுதான் எம் கேள்வி. 
 
முடிந்தால் இலங்கை விவகாரத்தை  சர்வதேச நீதிமன்று க்குக் கொண்டு போங்கள் பார்க்கலாம் என்று  சவால் விடு த்த எம்.ஏ. சுமந்திரன் இப்போது அதே சர்வதேச குற்றவியல் நீதிமன்றை உச்சரிக்கத் தலைப்பட் டுள்ளார். ஆக, இலங்கைத் தமிழர்களின்  தலைவிதி எப்படியிருக்கிறது என்பது இப்போது தெளிவாகிறது.
 
ஆம், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக இருந்தாலும் அது  எங்களாலேயே ஆகவேண் டும். சர்வதேச குற்றவியல் நீதி மன்றுக்கு இலங்கை விவ காரத்தைக் கொண்டு போவது என்று கூறுவதாக இருந்தாலும்  அதை நாங்களே எங்கள்  வாயால் கூற வேண்டும் என்பதுதான்  எம் தமிழ் அரசியல் தலைமையின் நிலைப்பாடாக உள்ளது.
 
இலங்கை ஆட்சியாளர்களால் எம் தமிழினம் பட்ட  துன்ப துயரங்களுக்கு  நீதி கிடைக்க வேண்டும். ஈழத்திருநாட்டில் எங்கள் தமிழினம்  உரிமையோடும் சுதந்திரத்தோடும் வாழவேண் டும் என்று  இலங்கைத் தமிழ ரசுக் கட்சி நினைக்குமாக இரு ந்தால், இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்று க்கு  எடுத்துச் செல்லவேண்டு மென்று  நீதியரசர் விக்னேஸ் வரன் அவர்களும் கஜேந்திரகு மார் பொன்னம்பலம் அவர்க ளும்  கூறியபோது, ஆம் அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.  இதற்காக ஒற்றுமைப்பட்டு வியூகம் அமைப்போம் வாருங்கள் என்ற  அழைப்பை தமிழரசுக் கட்சி விடுத்திருக்க வேண்டும். 
 
ஆனால் அது எதுவும் நடக்கவில்லை எனும் போது இவர்களால் தமிழர்களுக்கு விமோசனம் கிடைக்குமென்று  யார்  நம்பினாலும்  அதைவிடக்  கொடுமை வேறு எதுவுமாக இருக்க முடியாது.
என்ன செய்வது, அழுவார் அழுவார் எல்லாம் தம் கவலை  திருவன் பெண்டிலுக்காக அழ யாருமில்லை என்ற தமிழ்ப் பழமொழி தான் எம் நினைவுக்கு வருகிறது.
 
தமிழ் அரசியல் தலைமையில் இருக்கின்றவர்களுக்கு அடுத்த முறையும்  பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும். மாகாண சபையில் உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு பாராளுமன்றக் கதிரைகளிலும் இருக்கவேண்டும் என்ற ஆசை. கொடி பிடித்து, குடைபிடித்துச் சொன்னதை அப்படியே  செய்யும் கட்சி உறுப்பினர்களுக்கு  மாகாண சபையில் ஓர் உறுப்பினராகி விடவேண்டும் என்ற ஏக்கம். இவை  நீதியை, நியாயத்தை, தர்மத்தை  மறைத்து விடுகின்றன. மற்றவர்கள் விடுகின்ற கண்ணீரில் எங்களுக்கான வாக்குகள் தெரிகின்றபோது எப்படி தமிழினம் உய்ய முடியும். 
 
எம் தமிழினத்தின் உலகப் பெருமைக்குக் காரணமாக இருக்கின்ற மதிப்பார்ந்த கம்பவாரிதி அவர்களே! இந்த நாட்டு  ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அடிப்படையில் ஒரு நல்ல மனிதர். இதை நாம் கூறி நீங்கள் தெரிய வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது. 2017இல் கொழும்பில் நடந்த  கம்பன் விழாவில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக்  கலந்து கொண்டிருந்தார். அங்கு அவர் ஆற்றிய உரைக்குப் பின்னர் உங்கள் உரை இடம்பெற்றது. 
என் அதிகாரத்தைக் குறைப்புச் செய்ய உங்களின் அனுமதியை வேண்டுகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரையை மீள ஞாபகப்படுத்திய தாங்கள், அதனூடு ஜனாதிபதி மைத்திரியைப் பாராட்டியிருந்தீர்கள்.
 
✿ ✿ ✿ ✿ ✿ ✿

புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 5)
 
நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி ஆட்சியில் தனக்கிருக்கக்கூடிய அதிகாரத்தைக் குறைப்புச் செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடம்  அனுமதி கேட்டவர்  ஜனாதிபதி மைத்திரி. தவிர, புங்குடுதீவு மாணவி வித்தியா  கொல்லப்பட்ட போது உடனடியாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, அந்த மாணவியின் பெற்றோரைச் சந்தித்து  ஆறுதல் கூறியவர். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்குச் சென்று  அந்த மாணவிகளைச் சந்தித்து  பயம் கொள்ளாதீர்கள் என்று தைரியம் கொடுத்தவர்.  வலிகாமம் வடக்கிற்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரி அங்குள்ள நலன்புரி முகாம்களுக்கு நேரில் சென்று, குடிசை வீட்டுக் குந்தில் குந்தியிருந்து  குசினியில் ஆக்கப்பட்ட  சமையலைப் பார்த்துவிட்டு வலி.வடக்கில் குடியமர்த்தக்கூடாது என்று  தென்பகுதியில் இருந்து கொக்கரிப்பவர்கள் ஒருக்கால் வலி. வடக்கு மக்களின் அவலத்தை  இங்கு வந்து பார்க்கவேண்டும் என அறைகூவல் விடுத்தார். அதுமட்டுமல்ல 
யாழ்ப்பாணத்திற்கு அவர் வரும் போதெல்லாம்  எந்தவித பாதுகாப்பு படோபகாரங்களும் இல்லாமலே வந்து போனார். ஆனால் ஜனாதிபதி வடக்கிற்கு வந்த எந்தச் சந்தர்ப்பத்திலும்  தமிழரசுக் கட்சியின் தலைமைகள் அவருடன் வரவும் இல்லை, அவரைச் சந்திக்கவும் இல்லை. பாதுகாப்பு பந்தோபஸ்து இல்லாமல்  மிக எளிமையாக  ஜனாதிபதி மைத்திரி வடபகுதிக்கு வருவதைச் சாதகமாக்கி அவரைக் கொல்வதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதான தகவல்களை புலனாய்வுத்துறை வெளியிட்டபோது  ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயங்களும் கணிசமாகக் குறைக்கப்பட்டன.
 
பாதிக்கப்பட்ட மக்களையும் சம்பந்தப்பட்ட இடங்களையும் நேரில் சென்று நிலைமையை அவதானித்து, படிப்படியாக காணி விடுவிப்புக்களையும்  மீள்குடியமர்வுகளையும் செய்து வந்த ஜனாதிபதி மைத்திரியின் பால் தமிழ்மக்கள் ஈர்க்கப்பட்டு  விடுவர் என்பதனாலும் ஐக்கிய தேசியக் கட்சி மீதான விசுவாசத்தின் காரணமாகவும்  ஜனாதிபதி மைத்திரியின் உறவைத் தமிழரசுக் கட்சியின் தலைமை வெட்டிவிட்டது. ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்­வைத் தோற்கடிக்க வேண்டும். எனவே அவரை எதிர்த்து  நிற்கின்ற மைத்திரி பால சிறிசேனவை நாங்கள் ஆதரிக்கவேண்டும் என்று  கூறிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தரின் வழி  தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரியைத் தேர்தலில் ஆதரித்தார்கள். அது மைத்திரியை ஜனாதிபதியாக்கியது.
இருந்தும்  இரா.சம்பந்தர்  தனது அரசியல் சாணக்கியத்தை அமுல்படுத்த முடியாதவராக- ஜனாதிபதி மைத்திரியுடன் நெருங்கிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியாதவராக ஆக்கப்பட்டார். 
இதை ஆக்கியவர்கள்  தமிழரசுக் கட்சியில் முக்கிய இட த்தில் இருக்கக்கூடிய  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு  வேண்டியவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
 
என்ன செய்வது, தமிழ் இனத்திற்கு தன் அரசியல் காலத்தில்  தீர்வைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்ற நினைப்பை இரா. சம்பந்தர் ஐயா கொண்டிருந்தாலும்  அவரின் முதுமையும் பக்க பலத்தின் தேவையும்  காரணமாக மற்றவர்களின் ஆலோசனை களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியவராக  மாறினார். இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான உறவுகள் முற்றுமுழுதாக முடிவுறுத்தப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான உறவு வலுப்படுத்தப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் ஒன்றித்த தமிழரசுக் கட்சி இரா. சம்பந்தர் ஐயாவின் கேள்விக் கணைகளைத் தடுக்கும் பொருட்டு அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெற்றுக் கொடுக்கப்பட்டது.  அவ்வளவு தான் அந்தப் பதவி  சம்பந்தர் ஐயாவின் வாயை அடைத்தது.
 
அங்கு ஞானசம்பந்தக் குழந்தை திருவாய் மலர்ந்தழுததால் வேதநெறி தழைத்தோங்கியது. இங்கு சம்பந்தர் ஐயா வாய் மூடி  மௌனியாக இருந்ததால் தமிழினத்திற்குச் சாதகமாக இருந்த அத்தனை சூழ்நிலைகளும்  தவிடுபொடியாக்கப்பட்டன. இந்த நிலைமைகள் ஜனாதிபதி மைத்திரியையும்  தமிழ் மக்களையும்  பிரித்தாண்டது. உண்மையில் ஜனாதிபதி மைத்திரியின் கரத்தைப் பலப்படுத்தி அவர் மூலமாக சில வேலைத் திட்டங்களை  நாம் செய்து முடித்திருக்கவேண்டும். ஆனால்  அது திட்டமிட்டு கைவிடப்பட்டது.
 
✿ ✿ ✿ ✿ ✿ ✿

புருசோத்தமன் எழுதும் கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல் (பாகம் 6)
 
மிழ் மக்களோடு நல்லதொரு புரிந்துணர்வைக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மாவீரர் தின நிகழ்வுகளை அனுஷ்டிப்பது தொடர்பிலோ முள்ளிவாய்க் கால் நினைவேந்தலின் போதோ எந்தவிதத் தடைகளையும்  ஏற்படுத்தாமல் அது தமிழ் மக்களின் உரிமை என்பதாக நடந்து கொண்டார்.
 
முன்னைய ஆட்சிகளில் மாவீரர் தினம் ஆரம்பமாகிறது என்றாலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக  கவசவாகனங்கள்  நிறுத்தப்படும். வீதியயங்கும்  சீருடையினர். சோதனை நடவடிக்கைகள் தீவிரமாகும். இந்த நெட்டூரத்தை இல்லாமல் செய்து நினைவு கூரலைத் தடுக்கக்கூடாது என்பதாக புதிய கலாசாரத்தை அமுலாக்கியவர் ஜனாதிபதி மைத்திரி.
 
இதை நாம் கூறும்போது  ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவைப் புகழ்ந்து புராணம் பாடுவதாகத் தயவுசெய்து யாரும் நினைத்துவிடாதீர்கள். மாறாக, ஜனாதிபதி மைத்திரி அடிப்படையில் ஒரு நல்ல மனிதர். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களால் ஆதரிக்கப்பட்ட ஒருவர். தமிழ் மக்கள் வாக்களித்ததனால்  ஜனாதிபதிப் பதவியைப் பெற்றவர் என்பதான சாதக நிலைமைகள் இருந்த போதிலும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உறவை, அவரின் ஆதரவை தமிழரசுக் கட்சி வெட்டிவிட்டது எனும் போது அதற்குள் இருக்கக்கூடிய சூக் குமங்கள் எத்தகையவை என்பதை நாம் கூறாமல
&
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.