அவர்களின் கோடு!

அவர்களின் கோடு!
 
என் கோட்டோவியத்தை,
நான் தீர்மானிப்பதில்
தொடங்கியது
இந்தச் சிக்கல்.

பென்சில் விற்றவன்
தன் விருப்பத்தையும் 
இலவச இணைப்பாகத் தருகிறான்,
கட்டாயம் என்னும் 
கவனக்குறிப்போடு.

தன் பங்கிற்கு 
படபடத்து, படபடத்து
அள்ளி எறிகிறது 
மனசு விரும்பாத கோடுகளை, 
தாள்.

சித்திரக் குருவானவரின்
உத்தரவுக்கு அஞ்சி, 
நீளமறுக்கிறது
என் கட்டை விரல்.

அவர் கோடு
என்பாடு. 

இப்படித்தான்
ஆகின எல்லாமும்...

‘ஆழக்கடல் எங்கும் 
சோழமகராசன் 
ஆட்சி புரிந்தானே 
அன்று.
அதன் மூலை முடுக்கெங்கும்
அமெரிக்க வல்லூறு,
மூக்கை நுழைக்குதே
இன்று.’
******
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.