முதலில் மன்னித்துக்கொள்ளுங்கள்...உங்களது " கெ...
முதலில் மன்னித்துக்கொள்ளுங்கள்...உங்களது " கெடு குடி சொற் கேளாது" என்ற பழமொழிக்கு இயைபாக ஏதோ ஒரு ஆர்வக் கோளாற்றில் இக்கட்டுரையை வாசித்துவிட்டேன் ஐயா....உணர்ச்சிபொங்கி வரும் பொழுதுகளில் வார்த்தைகள் மௌனமாகி...அமைதியாய் எல்லாவற்றையும் சகிப்பதே மேல் எனத்தோன்றுகின்றது...
"ரமில்..ரமில்" என்று எதைச் சொல்லுகிறீர்கள் என்பது "ரமில் ஈலம்" காணும் வரை சத்தியமாய் விளங்கவே இல்லை...
............அப்போதுதான், பக்கத்து வீட்டுச் சின்னம்மா,
‘உதென்ன தங்கச்சி?’ என்று கேட்க,
‘அது எங்கட “பேபி”யைக் கிடத்துறத்துக்கு’ என்று,
உங்கள் மனைவி பெருமையாய்ச் சொல்லலாம்.
‘குழந்தயக் கிடத்துறத்துக்கு என்னத்துக்கு மேனே கூடை?
தோளில கிடத்தலாம் தானே!
கூடையோட வச்சிட்டு அங்கால இங்கால பார்க்கேக்க,
நாய் கீய் தூக்கிக் கொண்டு போனா என்ன செய்யுறது?’
சின்னம்மா பேத்தனமாக் கேக்கும்.
‘என்ன அன்ரி?
நீங்கள் சரியான ‘கன்றி புறூட்டா’ இருக்கிறீங்கள்,
பேபியைத் தோளில் போட்டா, அது “சூ” செய்து,
“டிரெஸ்ச” எல்லாம் பழுதாக்கியெல்லே போடும்.’
உங்கள் மனைவி பெருமையாய்ச் சொல்லுவா.
அவா குழந்தையா இருக்கேக்க,
தன்ட தோளில் கிடந்து பெஞ்ச “சூ”வை,
‘என்ட சின்னக் குஞ்சு தேன்மாரி பெய்யுது’ எனச் சொல்லி,
தன்ட சீலைத் தலைப்பால துடைச்சு விட்டத,
சின்னம்மா பெருமையாச் சொல்லும்.
“யூறினை” சீலையால துடைக்கிறனீங்களோ? “டேட்டி ஹபிற்”
‘லண்டனில “டெற்றோல்” போட்டுத் துடைக்காமல்,
நாங்கள் பிள்ளையத் தொட மாட்டம்’
உங்கட மனைவி பெருமையாய்ச் சொல்ல,
சின்னம்மா பாவம், வாயை மூடிக் கொள்ளும்.......
உண்மையில் நெஞ்சை நெருக்கிய வரிகள்..
சரி இவர்கள் தான் இப்படிப்போய்விட்டார்கள்...அவர்களின் அக்காலச்சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்களை தமிழ் மண்ணிலிருந்து வேரோடு வோறாக்கிவிட்டது..தமிழ் மணத்தை "நாத்தம்" என்று கருதுகின்ற நிலைக்கு வந்து விட்டார்கள்..போகட்டும்...ஆனால்.மேற்போன்றவர்களின்
ஆடம்பரவாழ்க்கையின் மோகத்தில் இன்றைய இளசுகள் அதுதான் மரியாதை..அதுதான் மகிழ்ச்சி என்று கனைப்பதை நினைக்கத்ததான் கவலையாய் இருக்கிறது ஐயா...
கொஞ்சக்காலத்தில்" என்ரையும் ராயும் மகில்ந்ரு கிலவி இருன்ரரும் இன்நாரே.."என்றுசொல்பவன்தான் தமிழினத்தின் வழிகாட்டியாய் இருப்பானோ என்ற அச்சம் தான்.....சிரிப்பதா? அழுவதா? ப்ரியவில்லை..... மன்னிக்கவும் புரியவில்லை..