உயிர்த் தோழமை நெஞ்சங்களுக்கு! -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

உயிர்த் தோழமை நெஞ்சங்களுக்கு!  -கம்பவாரிதி  இ.ஜெயராஜ்-
 
 
கரம் சிலகாலமாய் உறங்கிக் கிடந்தமை பற்றி,
சற்றுக் கோபமாய் இருப்பீர்கள்.
பிழை, தலைமை ஏற்ற என் மேலதுதான்.
என் செய்ய?
 
இணையத்துள் புகுந்து செயலாற்றும் ஆற்றல் எனக்கில்லை.
பொறுப்பேற்ற இளையோர்க்குப் பொறுப்பில்லை.
இதனால்த்தான் இடைவெளி நீண்டு போயிற்று.
புதிய நிர்வாகத்தைப் புகுத்தியிருக்கிறோம்.
இனியேனும் உகரம் உயிர்பெறுமா?
உங்கள் மனத்தில் எழும் கேள்வியே என்மனத்திலும்.
திகட்டாத ஆக்கங்களோடு தினம் தினம் சந்திக்கும் விருப்பால்,
நாளுக்கொரு ஆக்கத்தை வெளியிடத் திட்டமிடுகிறார்கள்.
சாத்தியப்பாட்டை காலம் நிர்ணயிக்கட்டும்.
இம்முறை ஒரு சிறுமாற்றம்.
புதிய நிர்வாகம் உங்கள் ஆக்கங்களையும் உவப்போடு வரவேற்கிறது.
அனுப்பவேண்டிய இணைய முகவரி kambanlanka@gmail.com
 
ஆக்கங்களைச் சிதைக்காமல் ஆசிரியர் குழு திருத்தங்கள் செய்யுமாம்.
தக்கவை தரத்தோடு பிரசுரிக்கப்படுவது உறுதி.
உங்கள் அபிப்பிராயங்களை விருப்போடு வேண்டி நிற்கிறார்கள்.
இனியவை நிகழ இறையருள் கிட்டட்டும்.
 
<>    <>   <>   <>   <>
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.