கவியமுதம் 12
கவிதை முற்றம் 06 Sep 2026
பொங்குகிற அருள் முகத்தோடெங்கள் ஐயன்
பொலிந்திடவே அடியரெலாம் புடையே சூழ
தங்கரதம் ஏறித்தான் தரணி தன்னைத்
தயவோடு சுற்றிவரும் காட்சி கண்டு
அங்கமெலாம் உருகிப் போய் அழுகை பொங்க
அமரர்களும் நிலம் காண வந்து நிற்பர்
சங்கமதில் தலைவனென இருந்து எங்கள்
தமிழ் வளர்த்த நல்லூரான் பெருமை என்னே?
வேறு
கந்தனவன் முகம் தங்கம்
கையிருக்கும் வேல் தங்கம்
முந்துகிற ரதம் தங்கம்
முழுவதுமாம் அணி தங்கம்
கெந்துகிற மயில் தங்கம்
கிளர்ந்து எழும் கொடி தங்கம்
சிந்துகிற நகை தங்கம்
சேர் அடியார் மனம் தங்கம்