கந்தன்கவி அமுதம் 13

கந்தன்கவி அமுதம் 13

மாம்பழத்துப் போட்டிக்காய் முருகன் தானும்

மயிலமர்ந்து உலகுதனை வலமாய்ச் சுற்ற

தேம்பி மனம் சோராது திகழும் பெற்றோர்

திருவுருவை வலம் வந்து கனியைப் பெற்று

ஓம் பொருளாம்  கணபதியும் உவந்து நிற்க

உளம்வாடிக் கந்தனவன் ஆண்டிக் கோலம்

தாம் அடைந்து நிற்கின்ற காட்சி  காண

                தரணியெலாம் நல்லூரில் திரண்டு நிற்கும்

 

மங்களமாய் வெளிவந்த முருகன் தானும்

                மனம் நொந்து ஆண்டியென நிற்கக் கண்டு

அங்கிருக்கும் மக்களெலாம் அதிர்ந்து நிற்பர்

                ஆண்டியென நின்றாலும் அழகன் கந்தன்

எங்களுடை இறை என்றே சொல்லிச் சொல்லி

                ஏற்றமுற அவன்தன்னை வலமாய் வந்து

பொங்குகிற அன்போடு வணங்கும் அன்பர்

                பொலிவுறவே வரங்கள் பல வழங்கி நிற்பான்.

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.