மாகாண சபையை பொறுத்தவரையில் நடந்த மிகப்பெரிய தவறு. ...
மாகாண சபையை பொறுத்தவரையில் நடந்த மிகப்பெரிய தவறு. அந்தத் தளத்தையும் அரசியல் தளமாக மாற்ற முனைந்ததே. மாகாண சபை என்பது அபிவிருத்திக்கான தளம். வடக்கின் கல்வி விளையாட்டு கலாச்சாரம் கூட்டுறவு சமூக அபிவிருத்தி கிராமிய அபிவிருத்தி விவசாயம் மீன்பிடி போக்குவரத்து என அபிவிருத்தியின் அத்தனை அடிப்படைத் துறைகள் மீதும் ஆதிக்கம் செலுத்தத்தக்க வல்லமை மாகாண சபைக்கு உண்டு. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதை விட மாகாண சபை அமைச்சராக இருப்பது பெரிய விடயம். அதேபோன்று அமைச்சராய் இருப்பதை விட முதலமைச்சராய் இருப்பது பெரிய விடயம். இந்த ஆசைகள் நம் தலைவர்கள் பலருக்குள் வந்துவிட்டது. இருந்து பாருங்கள் தேசிய அரசியலில் உள்ள பலர் அடுத்த முறை மாகாண அரசியலுக்குள் வர எத்தனிப்பார்கள்.இந் நிலையில் மாகாண அரசியலில் தமக்கு சவாலாக உள்ள சிலரை அகற்ற முனைவதன் விளைவு தான் அத்தனைக் குழுப்பத்தினதும் அடிப்படை.