இது இருக்க அபிவிருத்திக்கான தளத்தில் அரசியல் செய்ய...

03 Oct 2017

இது இருக்க அபிவிருத்திக்கான தளத்தில் அரசியல் செய்ய முதலமைச்சரை தூண்டியவர்களே முதல் குற்றவாளிகள். முதலமைச்சர் அபிவிருத்தி செய்யவே விளைந்தார். அரசியல் செய்யவல்ல. அதனாலேயே மகிந்த முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார். ஆரம்பத்தில் அபிவிருத்தி சம்பந்தமாகவே கதைத்தார். அவர் நம்பினார். தான் அபிவிருத்தி செய்ய தேசிய அரசியலில் உள்ள பெருந்தகைகள் அரசியல் செய்வார்கள் என. ஆனால் அவர்கள் தமக்கான அரசியல் செய்து இன நன்மைக்கான அரசியலை செய்ய மறந்தார்கள். அதனை உறுதிப்படுத்த பல ஆதாரங்களை சொல்ல முடியும். இது கட்டுரை அல்ல கருத்து என்பதால் குறுக்கிவிடுகிள்றேன். எனவே கம்பன் சொன்ன வழி வந்த முதலமைச்ர் ஒரு கட்டத்தில் இன மான உணர்வில் மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ என்ன பாணியில் உன்னை நம்பியோ அரசியலுக்கு வந்தேன் என்கின்ற பாணியில் அபிவிருத்தி தளத்தில் இருந்து அரசியல் தளத்துக்கு மாற நிர்ப்பந்திக்கப்பட்டார். இனத்தின் தேவை அதுவாகவே இருந்தமையால் அவரது நிலை தேசிய நிலை கடந்து சர்வதேச நிலை வரை வரவேற்கப்பட கடமை மறந்த கர்ம வீரர்கள் கடுப்பாகினார்கள். அத்துடன் முதலமைச்சரின் முடிவை தமக்கு சாதகமாக மாற்றி அரசியல் லாபம் தேட விளைந்தவர்கள் அவரைக் கூட்டுச் சேர்த்தார்கள். தலைவராக்கினார்கள். அப்போதும் கூட முதலமைச்சரின் கூட்டமைப்பு விசுவாசத்தை அறிந்த அவர்கள் இணைத்தலமை தான் கொடுத்தார்கள். இந்த நிலமை முதலமைச்சரை தமிழ் மக்கள் மத்தியில் தேசிய தலைவர் எனும் நிலைக்கு உயர்த்த தொடங்கியது. இது சம்சுங் அன் கோவுக்கு குறிப்பாக சும்முக்கு தனது அரசியல் கனவு குறித்த அச்சத்தை தந்தது. தனக்குப் பின் சும் தான் என சம் சர்வதேசத்துக்கு கைகாட்ட விக்கி இடையில் நுழைய சர்வதேசமும் அதனை ஏற்க சும் கனவு சிதையும் என கடுப்பானார். இந் நிலையில் முதலமைச்சரை நேரடியாக தாக்கின் விளைவு விபரீதமாகி விடும் என்பதால் அவரது நிர்வாகத்தை குறிப்பாக அவருக்கு நெருக்கமான அமைச்சரை இலக்கு வைத்து ஊழல் குற்றம் சாட்டி வடமாகாண சபையைக் குழுப்ப நினைத்தார்கள். இதற்கு இன இருப்பை சிந்திக்காது தமது இருப்பை மட்டும் சிந்திக்கும் இளைய அரசியல்வாதிகள் துணை போக சும் தான் தேர்தல் பட்டியல் இறுதி செய்வார் எனும் நம்பிக்கையில் யாழ்ப்பாண மாநகர சபை மேயர் கனவில் ஆனோல்டும் அருந்தவபாலனை வீழ்த்தி எம்.பி யாக தேசியப்பட்டியலில் தானும் வரலாம் என சயந்தனும் தமிழரசுக்கட்சியில் இணைவதே அரசியல் இருப்புக்கான வழியும் மாகாண சபை ஆசனத்தை தக்க வைக்க வழியும் என அஸ்மினும் சும்மின் சூழ்ச்சியில் விழ ஆட்டம் ஆரம்பமானது.

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.