Boomarang-1
#கேள்வி :
இதுவரை ஒவ்வொரு 50 வாரத்திற்குப் பின்னும் உங்களது கேள்வி, பதில் பகுதிக்கு புதிய பெயர்மாற்றம் செய்வீர்களே. இப்போது எறிகணையும் 50 வாரத்தைக் கடந்துவிட்டது. வழக்கம் போலப் புதிய பெயர்மாற்றம் ஏதும் உண்டா?
#பதில் :
நல்லகாலம் நான் மறந்ததை நீங்கள் நினைவூட்டினீர்கள். இதோ உங்கள் வேண்டுகோளின்படி கேள்வி, பதில் பகுதிக்கு “பூமராங்” எனப் புதிய பெயர் சூட்டப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் நல்லதென்று நம் இலக்கணக்காரர்களே சொல்லியிருக்கிறார்கள். அதைத்தான் நானும் பின்பற்றுகிறேன்.
இப்புதிய பெயரின் பொருத்தப்பாடு பற்றிச் சிந்திப்பீர்கள். “பூமராங்” பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன? அது அவுஸ்திரேலியப் பழங்குடிகளான “அபொறிஜினல்” இனத்தவர் பாவித்த ஓர் ஆயுதம். ஒருவரை நோக்கி அந்த ஆயுதத்தை யாரும் எறிந்தால் அது எதிராளியைத் தாக்கி விட்டு எறிந்தவர் கைக்கே போய்ச் சேருமாம். எறியப்படுகிற வாசகர்களின் கேள்விகளும், விடை ரூபமாக மாறி அவர்களின் கைகளுக்கே சென்று சேர்வதால்த்தான் இம்முறை வினா, விடைப் பகுதிக்குப் “பூமராங்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
உங்களது கேள்விகளான “பூமராங்குகளை” இனி எறியத்தொடங்குங்கள்.
#கேள்வி :
ஞானசார தேரரின் காவி உடையைக் களைந்துவிட்டு, கைதி உடையோடு நீதிமன்றத்திற்கு கொண்டுவந்ததை எதிர்த்து பௌத்தபிக்குகள் எதிர்ப்பு ஊர்வலம் நடத்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
#பதில் :
என்னத்தை நினைக்க? அவர்கள் புத்தரை அவமதிக்கிறார்கள். உலகின் நன்மை நோக்கி, உயர்ந்த கொள்கைகளை உலகிற்கு வழங்கிய, ஞானியர்களின் வழிகாட்டலை மீறி நடப்பதென்பது, அந்த ஞானியர்க்குச் செய்யும் அவமரியாதையன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
புத்தர் பெருமான் தன்னுடைய போதனைகளில் எண்வகை வழிகளையும், 5 வகை சீலங்களையும் உரைத்திருக்கிறார். அவை என்னவென்று முதலில் சொல்கிறேன். துன்பத்திலிருந்து விடுபடப் புத்தர் பின்பற்றிய நடைமுறை எண்வகை வழிகளைப்பற்றி முதலில் சொல்கிறேன்.
1) நல்நோக்கு : உண்மையை அறிந்துகொள்ளுதல்.
2) நல்லெண்ணம் : தீய எண்ணங்களை நீக்கி, கருணையுடன் இருத்தல்.
3) நல்மொழி : பொய், புறம் கூறுதல் மற்றும் கடுஞ்சொற்களைத் தவிர்த்தல்.
4) நற்செயல் : கொலை, திருட்டு மற்றும் தவறான நடத்தைகளில் ஈடுபடாமை.
5) நல்வாழ்க்கை :மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காத நேர்மையான தொழிலைச் செய்தல்.
6) நல்முயற்சி : நல்ல சிந்தனைகளை வளர்த்து, தீய எண்ணங்களை விலக்குதல்.
7) நல்நினைவு : உடல், மனம் மற்றும் உணர்வுகளை எப்போதும் விழிப்புடன் கவனித்தல்.
8) நல்நிலைப்பாடு : தியானத்தின் மூலம் மனதை ஒருமுகப்படுத்துதல்.
அடுத்ததாக, சாதாரண மக்கள் பின்பற்ற வேண்டிய புத்தர் சொன்ன ஐந்து ஒழுக்க நெறிகளைப் பற்றி நாம் பார்க்கலாம்.
• உயிர்களைக் கொல்லாமை
• திருடாமை
• தவறான காமத்தில் ஈடுபடாமை
• பொய் கூறாமை
• போதைப்பொருள் மற்றும் மது அருந்துதலைத் தவிர்த்தல்.
புத்தர் சொன்ன இந்தப் பஞ்சசீலக் கொள்கைகளையும், அவர்காட்டிய எண்வகை வாழ்க்கை வழிகளையும் ஞானசாரதேரர் பின்பற்றியிருந்தால், அவரது காவி உடையை அகற்றியது மிகப்பெரிய குற்றமாகத்தான் இருந்திருக்கும்.
அவற்றை அவர் பின்பற்றவில்லை எனின், அவரது காவி உடையைக் கழற்றியதைக் குற்றமாய்க் கொள்ள முடியாது. ஊர்வலம் வரும் பௌத்த துறவிகள், மேற்சொன்ன இந்த இரண்டில் நடந்தது எது என ஞானசாரதேரரின் வாழ்க்கையை வைத்துப் பதில் சொல்லவேண்டும்.
அவர்கள் அத்தோடு நிறுத்தாமல், புத்தர் சொன்ன மேற்குறிப்பிட்ட கொள்கைகளுக்குப் பொருந்தத்தான் தாங்கள் ஊர்வலம் நடத்துகிறார்களா? என்பது பற்றியும் தெரிவிக்கவேண்டும்.
#கேள்வி :
அர்ச்சுனா தினந்தினம் ஒன்றுக்கொன்று மாறான, புதுப்புது கொள்கைப் பிரகடனங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார். பிரபாகரன்தான் தன் கடவுள் என்கிறார். பின்னர் மஹிந்தவைத் தன் தந்தை என்கிறார். சிங்கள மக்கள் அவருக்குத் துரோகம் செய்துவிட்டார்கள் என்கிறார். பிறகு நாமலுக்கு கார் ட்றைவராகவேனும் இருப்பேன் என்கிறார். புலம்பெயர் தமிழர்களைப் போற்றுகிறார், பின் தூற்றுகிறார். இப்படியாக அவர் மாறிமாறிப் பேசுவதால், அவரது கொள்கை என்னவென்று கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. அவரது கொள்கை இன்னதுதான் என்று உங்களுக்கேனும் புரிகிறதா?
#பதில் :
வீட்டில் வேலை ஏதும் இல்லாமல் இருக்கிறீர்கள் போல. அதனால்த்தான் உங்களுக்கு இந்த ஆராய்ச்சி. சோற்றில் கல்லைத் தேடிப் பொறுக்கலாம். கற்குவியலில் சோற்றைத் தேடிப் பொறுக்க முடியுமா? மாறி மாறிப் பேசும் அர்ச்சுனா பற்றி எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை. இத்தனைக்குப் பிறகும் அவரின் கொள்கை பற்றி ஆராயும் உங்களைப் பற்றித்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது.
#கேள்வி :
ஷிராந்தி ராஜபக்ஷ அவர்களின் கைது பற்றி?
#பதில் :
அவர் கைதான காட்சி கண்டு கவலைப்பட்டேன். எவ்வளவோ உயரத்தில் இருந்தவர்கள். இவ்வளவு ஆழத்தில் வீழ்ந்திருக்கிறார்கள். மஹிந்த சுகயீனமுற்று இருக்கிறார். மனைவியாரும், மைந்தரும் மறியலில் இருக்கிறார்கள். மற்றொரு மகனின் தலைமேல் வழக்குக்கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.
சித்தப்பாக்களில் ஒருவர் வெளிநாட்டில் ஒழிந்து கொண்டிருக்கிறார். மற்றொருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகத் தன்னைக் கைது செய்யக்கூடாது என நீதிமன்றில் ஜாமீன் கேட்டு நிற்கிறார். குடும்பமே அல்லாடிப்போய் நிற்கிறது.
முதல்நாள் போரில் தோற்று அனைத்தையும் இழந்து நின்ற இராவணனைப் பார்த்து, பெரும் புயலில் பூளைப்பூ பறந்து போய்விடுவது போல, உனக்குக் கிடைத்த உயர் வரங்களெல்லாம் பறந்து போய்விட்டன என்கிறான் இராமன். (“ஆளையா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளையாயின”)
அந்தப் பாடல்வரிதான் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. உயர்வு வரும்போது நாம் நிதானத்துடன் அறம் பேணி வாழவேண்டும். இல்லாவிட்டால் நமக்குக் கிடைத்த வரங்களெல்லாம் பூளைப்பூவாய்ப் பறந்து போய்விடும் என்ற உண்மையை ஷிராந்தி நமக்கு உணர்த்தி இருக்கிறார். தன்வினை தன்னைச் சுட்டிருக்கிறது. வருத்தப்படுவதைவிட நாம் என்ன செய்யமுடியும்?
#கேள்வி :
கிளிநொச்சியில் நீங்கள் நடத்திய ஆளுமைப்பயிற்சி முகாம் வெற்றி பெற்றதா?
#பதில் :
பெரிய வெற்றி பெற்றது. யாழ். இந்துக்கல்லூரியிலிருந்தும், கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயத்திலிருந்தும், கிளிநொச்சி இந்துக் கல்லூரியிலிருந்தும் 80 மாணவர்கள் அளவில் கலந்து கொண்டனர். புதிதாகக் கிளிநொச்சியில் நாம் அமைத்துள்ள கம்பன் அறிவாலயத்தில் மேல்மாடியில் ஆண்களும் கீழ்த்தளத்தில் பெண்களுமாக, தங்கியிருந்து பயிற்சி பெற்றனர்.
சட்டம், கல்வி, நிர்வாகம், காவல்த்துறை, ஊடகவியல், வங்கியியல், உளவியல் ஆகிய துறைகளைச் சார்ந்த ஆளுமையாளர்கள் மேற்படி பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கினர். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், பேராசிரியர் மா. சின்னத்தம்பி, சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிவானந்தன் நிதர்சன், வசந்தம் ரி.வி பணிப்பாளர் நிசாம்தீன் ஹிஷாம் முஹமத், வங்கி முகாமையாளர் கு. சிவஞானசுந்தரம், முல்லைத்தீவு அரச அதிபர் அ. உமாமகேஸ்வரன், உளவள வைத்திய நிபுணர் டாக்டர் சி. சிவதாஸ் ஆகியோர் தத்தம் துறைசார்ந்து மாணவர்களுக்கு ஆளுமை விருத்திப் பயிற்சி அளித்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த புகழ்பெற்ற பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் மாணவர்களுக்கு இலக்கியத்துறை சார்ந்து மிக அற்புதமான பயிற்சியினை அளித்தார். தனது உரையால் அவர் மாணவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். ஒருநாள், நானும் ஆளுமை ஆற்றல் பற்றிய எனது கருத்துக்களை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டேன்.
கலந்து கொண்ட அனைவருமே மிக அற்புதமாக தம் உரைகளை நிகழ்த்தினார்கள். குறிப்பாக மூவரது உரைத்திறன் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.
பொலிஸ் அதிகாரியான சிவானந்தன் நிதர்சனின் பேச்சு, மிகச் சாதாரணமாகத்தான் இருக்கப்போகிறது என எதிர்பார்த்தேன். பொலிஸ் அதிகாரிக்குப் பேச்சு வராது என்ற எண்ணந்தான் என்னை அங்ஙனம் நினைக்கத் தோன்றியது. ஆனால் மனிதர் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டார். மிக யதார்த்தமான சிந்தனை, அறப்பற்று, கூர்மையான நகைச்சுவை, மெல்லிய கிண்டல், சமூகப் பொறுப்புணர்ச்சி என அவர் தூவிய “மசாலாக்களால்” அவரது உரைச்சமையல் அனைவருக்கும் மிகவும் பிடித்துப் போயிற்று.
அடுத்து என்னைக் கவர்ந்தவர் ஊடகவியலாளரான நிசாம்தீன் ஹிஷாம் முஹமத் அவர்கள். திட்டமிடப்பட்ட தெளிவான பேச்சு அவரது. கேள்விகளால் மாணவர்களைத் தன்னோடு இணைத்துக் கொண்ட அவர், சொல்ல வந்த செய்திகளை மாணவர்களிடம் புகுத்துவதற்குப் புதிய உத்திகள் பலவற்றைக் கையாண்டார். அவர் முகத்தில் எப்போதும் புன்னகை ஒட்டிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்து சிறப்பாக வெற்றி கண்டார். இவர் வருங்காலத்தில் இஸ்லாமியர்களின் ஓர் தலைவராக மாறுவார் என்று நினைத்துக் கொண்டேன்.
மூன்றாமவர் டாக்டர் சிவதாஸ் அவர்கள். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே அவரை நான் அறிவேன். சமூக உணர்வும் தொண்டு மனப்பான்மையும் மிக்கவர். வன்னிப்போர் முடிவில் அகதிகளுக்கு அவர் செய்த உபகாரம் அளப்பரியது.
புதுவிதமான ஒரு பேச்சுத் தொனியுடன் நகைச்சுவை கொப்பளிக்க அவர் ஆற்றிய உரை நான் எதிர்பாராதது. இடைக்காலத்தில் அவர் எவ்வளவு வளர்ந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து வியந்தேன். தனக்குத் தரப்பட்ட நேரத்தில் ஒரு விநாடிகூட மாணவர்களைச் சோர்வடைய விடாமல் உற்சாகம் கொப்பளிக்கு அவர் ஆற்றிய உரையில் அவரது ஒரு புதிய தரிசனம் கண்டேன்.
சரியாகக் காலை 6.00 மணிக்கு அத்தனை மாணவர்களுக்கும் யோகாசனப்பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தப் பயிற்சியை, திருமதி புஸ்பகாந்தி அவர்கள் வழங்கினார். தெளிவான விளக்கவுரையுடன் அவர் நடத்திய அந்தப் பயிற்சியால் யோகாசனத்தில் மாணவர்கள் விருப்புற்றார்கள்.
இரவு நேரங்களில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பங்குபற்றிய மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்தியத்துணைத் தூதரகத்தின், துணைத்தூதுவர் கௌரவ சாய்முரளி அவர்கள் பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்து மிக ஆழமானதும் அறிவுபூர்வமானதுமான சிறந்த ஓர் தொடக்கவுரையை நிகழ்த்தியதோடு, மதியம் வரை மாணவர்களோடு இருந்து பயில் அரங்கை ஊக்குவித்தார்.
பயில் அரங்கின் நிறைவு நிகழ்ச்சியில், கலாநிதி ஆறு திருமுருகன், “வலம்புரி” பத்திரிகை ஆசிரியர் ந.விஜயசுந்தரம், கரைச்சி பிரதேசச் செயலாளர் தவ.முகுந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக உரையாற்றி நிகழ்வை நிறைவு செய்து வைத்தனர்.
எங்களுக்கும் இது ஒரு புதிய முயற்சிதான். பலவிதமாக, பலகாலமாக, வேறு வேறு விதமாய்த் திட்டமிட்டும் நிறைவேற்ற முடியாமல் இருந்த இந்த முயற்சி, இறையருளால் திடீரென நிறைவேறியது கண்டு நெகிழ்ந்து போனோம். இம்முயற்சியின் வெற்றியில் கழக அமைப்பாளர் வாசுதேவாவின் பங்கு மிகப்பெரியதாய் இருந்தது. மற்றைய கழக உறுப்பினர்களும் அவரோடு உடன் நின்று உழைத்தார்கள்.
அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவி திருமதி அபிராமி கயிலாசபிள்ளை அவர்களின் பெருந்துணையால் நிமிர்ந்து நிற்கும் கம்பன் அறிவாலயம் பயன்பெற்றதில் நான் நிறைவு கொண்டேன்.
#கேள்வி :
நோபல் பரிசு பெற்ற திருமதி நவநீதம்பிள்ளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
#பதில் :
முதல் முறையாக ஒரு தமிழருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. அம்மையார், உலக அளவில் தமிழினத்தைத் தலைநிமிர வைத்திருக்கிறார். அதற்காக உலகத்தமிழினம் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர் இனம் சார்பாக நாமும் வாழ்த்துரைப்போம்.
தென்னாபிரிக்காவில் நிகழ்ந்த இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் பங்களிப்புச் செய்யத் தொடங்கி, இன்று உலக அளவில் துன்பப்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் நிமிர்வு பெற்றவர் அவ் அம்மையார்.
ஐ.நா.சபையில் மனித உரிமை “கௌன்சிலில்” தலைமைப் பதவியேற்று, பலநாடுகளிலும் நடந்த மனித உரிமை மீறல்களைத் துணிவோடு தட்டிக்கேட்டவர் அவர். இலங்கையில் நடந்த இறுதிப்போரில் நிகழ்ந்ததான மனித உரிமை மீறல்களை, ஆளுமையோடு கையாண்டார். தமிழராய் இருப்பதால், தமிழர்களின் சார்புபட்டு இவர் நடக்கிறார் என அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ குற்றம் சாட்டும் அளவிற்கு இலங்கை அரசை அதட்டியவர் அவர்.
“இவர் யாரென்றே எனக்குத் தெரியவில்லை” என்று அறிக்கை விட்டதன் மூலம், இவர்மீதான எரிச்சலினைப் பதிவிட்டிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி “டொனால்ட் ட்றம்ப்” அவர்கள். சண்டைகளை வளர்த்துக் கொண்டு சமாதானத்திற்கான பரிசினை எதிர்பார்த்த அவருக்கு ஏற்பட்ட விரக்தியில் “சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்” என்கிறார் அவர்.
உலக வல்லரசான அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி வழங்கப்பட்டிருக்கும் இந்த நோபல் பரிசை, எங்கள் தமிழினத்தைச் சார்ந்த ஓர் பெண்மணி பெற்றிருப்பதால் நாமெல்லாம் இனி உலக அரங்கில் “கொலர்” நிமிர்த்திக் கொண்டு நடமாடலாம்.
அவரும் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அந்நாட்டுக்குச் சென்றவர்தான். ஆனால் அந்நாட்டுக்குத் தான் வாழ வந்தவர் என்று நினையாமல், அந்தத் தேசத்தைத் தன் தேசமாய் நினைந்து பணியாற்றி, இன்று இந்த அளவு உயர்ந்திருக்கிறார் அந்த அம்மையார்.
நம் நாட்டிலிருந்து பலநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றவர்களும் இந்த அம்மையாரை முன்னுதாரணமாகக் கொண்டு இயங்கி, என்றோ ஒருநாள் இத்தகைய ஓர் உலகப் பெருமையைப் பெற்றால், தமிழ்மொழி மட்டுமன்றி நம் தமிழ் ஈழமும் பெருமை கொள்ளும். எதிர்பார்ப்போம்!