இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு 'கம்பர் விருது' | தமிழக அரசு அறிவிப்பு

இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு 'கம்பர் விருது' | தமிழக அரசு அறிவிப்பு
 
 
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
2016ஆம் ஆண்டிற்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகள், 2015ஆம் ஆண்டிற்கானத் தமிழ் செம்மல் விருது ஆகிய விருதுகளுக்கான விருதாளர்கள் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
 
2016ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான மாணவர் மன்றத்திற்கும் கபிலர் விருது முனைவர் இல.க. அக்னிபுத்திரன் அவர்களுக்கும், உ.வே.சா விருது முதுமுனைவர் ம.அ. வேங்கடகிருஷ்ணன் அவர்களுக்கும், கம்பர் விருது இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கும், சொல்லின் செல்வர் விருது பி. மணிகண்டன், ஜி.யு.போப் விருது வைதேகி ஹெர்பர்ட், உமறுப்புலவர் விருதுபேராசிரியர் முனைவர் அப்துல் காதர் , இளங்கோவடிகள் விருது நா. நஞ்சுண்டன் , அம்மா இலக்கிய விருது ஹம்சா தனகோபால் , மொழிபெயர்ப்பாளர் விருது நாகலட்சுமி சண்முகம், முனைவர் அ. ஜாகிர் உசேன், அல்லா பிச்சை (எ) முகம்மது பரிஸ்டா, உமா பாலு, முனைவர் கா.செல்லப்பன், வி. சைதன்யா, முருகேசன், பால சுப்பிரமணியன், ஆறுமுகம் பிள்ளை, முனைவர் கே.எஸ். சுப்பிரமணியன் 2015ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது முரளி (எ) செல்வ முரளி வழங்கப்படுகிறது.

விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூபாய் 1 இலட்சமும், 1 சவரன் தங்கப் பதக்கமும், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
 
 
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விருதாளர்களுக்கு 25-ந் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் விருதுகளை வழங்குவார்.
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.