கம்பன் விழா 2016 | பின்னிணைப்பு | வாழ்த்துக்களும்,விமர்சனங்களும், செய்திகளும்

கம்பன் விழா 2016 | பின்னிணைப்பு | வாழ்த்துக்களும்,விமர்சனங்களும், செய்திகளும்
இனிதே நிறைவுபெற்ற கொழும்புக் கம்பன் விழா தொடர்பான வாழ்த்துக்களும்,விமர்சனங்களும்.

புலவர் கோ சாரங்கபாணி
 


 
 

 

 

 
இல. கணேசன் 

வீரகேசரி 28.03.2016 முதற்பக்கம் 

தினக்குரல் 28.03.2016 முதற்பக்கம் 
 
 
 
 



 
 


டெய்லி நியூஸ் 28.03.2016


தமிழ் வின் செய்திகள் 
[ சனிக்கிழமை, 26 மார்ச் 2016, 04:14.00 PM GMT ]
 
அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் 2016 ம் ஆண்டுக்கான கொழும்பு கம்பன் விழாவில் 2 ம் நாள் நிகழ்வின் மாலை நேர அமர்வு நேற்றைய தினம் கொழும்பு இராமகிருஸ்ணமிஷன் மண்டபத்தில் பி.ப 5.30 மணியளவில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தலமையுரை ஆற்றிய அவர்,
ஒரு இனம் தன்னுடைய வாழ்வியலில் அது கால வர்த்தமானங்களால் முற்றுண்டு பிளவுண்டு அழிந்து நிமிர்ந்து வருகின்ற போதும் தன்னை நிலை நிறுத்துகிறபோதும் அதனுடைய இலக்கிய பரம்பல், இலக்கியவாழ்வு, இலக்கியச்சாரல் என்பது மிக முக்கியத்துவம் பெறுகின்றது.
அதனடிப்படையில் இன்றும் ஈழத்து மண்ணிலே இலக்கியத்தின் ஊடாக தமிழ் வளர்த்தல், தமிழைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை கம்பன் கழகம் ஆற்றுவது போற்றுதற்குரியது. பல்வேறு பட்ட அறிஞர்களை பிரசவித்ததில் கம்பன் கழகத்துக்கு முக்கிய பங்குள்ளது.
நான் நினைக்கிறேன் 1980களில், 1985 களில் யாழ் மண்ணிலே இளங்கலைஞர் மண்டபத்திலே, நல்லூர் வடக்கு வீதியிலே மண்டபம் அமைத்து நடைபெறுகின்ற ஒவ்வொரு நிகழ்வுகளும் பல பல புதிய தலைமுறைகளை இலக்கிய துறையிலே மிளிர்ந்து நுழைந்தமைக்கு, தமிழர்களின் மனதில் புதைந்த இலக்கியச் சுவை தம் தாய் மொழியை தமிழர்கள் நேசிப்பதில் காட்டிய உத்வேகம் என்றால் அது மிகையாகாது.
அதனுடைய அடித்தளத்தைக் கொடுத்தது இக் கம்பன் கழகம். இதனுடைய தமிழ் வளர்த்தல் பணியின் பெரும் அறிஞனாக தமிழ் அமுதூட்டும் தந்தையாக கம்பவாரிதி ஜெயராஜ் வரலாற்றில் தடம் பதித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலே தமிழ் வளர்த்த கம்பன் கழகம் இன்று கொழும்பிலே தமிழை வளர்க்கிறது என்றால், ஆயிரக்கணக்கானவர்களை இம் மண்டபம் கூட்டி தன்னுடைய விழாவை எடுக்கிறது என்றால் இது ஒரு காலப்பரிணாமம். இது காலத்தினுடைய விரிவு. இன்று தமிழர்களை நோக்கி பல்வேறுபட்ட சூழல்கள், நெருக்குவாரங்கள் இருக்கிறது.
நான் நினைக்கிறேன் தமிழ் இளைஞர்கள் ஒரு காலத்திலே இவ்வாறான சொற்களைக் கேட்டிருக்கவே மாட்டார்கள். மாணவன் கஞ்சா வைத்திருக்கிறான், மதுவருந்துகிறான், புகைக்கிறான் என்பதை 2009 க்கு முன்னர் அறியவில்லை. ஆனால் இப்போது இவையெல்லாம் மலிந்த சொற்களாக புரையோடிப்போயிருக்கின்ற சொற்களாக இருக்கிறது.
காரணம் அங்கு ஒரு சமயம் சார்ந்த இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளில் சிலவேளைகளில் எங்களிடம் விழுக்காடு இருக்கிறதோ யுத்தத்தின் பின்னர் தமிழர்களை இவ்வாறுதான் திசை திருப்பியிருக்கிறதோ யுத்தம் இவர்களை வேறு திசைகளுக்கு கொண்டு செல்கிறதோ? என்கின்ற பெரிய பயம் ஏக்கம் எங்களிடம் இருக்கிறது.
அந்த ஏக்கத்தை பயத்தை தீர்க்க கூடியவகையில் கம்பன் கழகம் செய்கின்ற காரியங்கள் மிக முக்கியமானது ஒவ்வொரு பாடசாலைகளில் இருந்தும் கூட பல மாணவர்களை இலக்கியங்கள் ஊடாக கொண்டுவந்திருக்கிறார்கள். கம்பன் கழகத்தில் வளர்ந்த அந்த இளம் பரம்பரை இன்று கம்பன் கழகத்தை நடத்தக்கூடிய ஆற்றலை கொண்டிருக்கிறது.
 
இனிவரும் சந்ததியையும் அந்தப்பரம்பரைக்கு கொண்டுவரவேண்டிய கடமையும் தேவையும் கம்பன் கழகம் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலே தமிழ்ச்சங்கம், கம்பன் கழகம் இவையெல்லாம் 
மிக முக்கியமான பாத்திர அமைப்புக்களை கொண்டிருக்கிறது. கம்பராமாயணம் பல பாத்திரங்களை சொல்கிறது.
 
அதிலே நன்மை சொல்கிறது, தீமை சொல்கிறது, கோள் சொல்கிறது, வீரம் சொல்கிறது எல்லாமாக உலகத்தின் வாழ்வைச் சொல்கிறது. அந்த வாழ்வைச் சொல்லுகின்ற கம்பராமாயணத்தினுடையதை ஆய்வு செய்வது என்பது அல்லது வார்த்தை சொல்வது என்பது முடியாத ஒன்று.
தற்போதைய எங்கள் வாழ்க்கையில் சமாதானமா நல்லாட்சியா என்பவற்றுக்கு அப்பால் நாங்கள் வாழ்வதற்காக துடிக்கிறோம். எங்கள் இடங்களில் இருப்பதற்காக துடிக்கிறோம். எங்களது இயல்பு வாழ்க்கை பற்றி சிந்திக்கிறோம். எங்களது இருப்புக்காக சிந்திக்கிறோம். இவற்றுக்கெல்லாம் எங்கள் இலக்கியங்கள் மிக முக்கியமானது. இதனைத்தான் கம்பராமாயணமும் பல்வேறு அரசியலை நல்ல காரியங்களை சொல்லியிருக்கிறது.
அந்தக்காரியங்களில் எல்லாம் துறை தோய்ந்திருக்கின்ற கம்பராமாயணத்திற்கூடாக ஒரு கம்பன் வளர்த்த காவியத்தை வான்மீகியிலிருந்து வந்தாலும்கூட கம்பனுடைய ஒவ்வொரு சொற்களும் வார்த்தைகளும் பாடல்களும் கூட வரலாற்றிலே புதிய அத்தியாயங்களைத் தந்திருக்கிறது.
அந்த வகையில் நீங்கள் எடுத்திருக்கின்ற இந்தப்பணி எங்கள் அன்புக்கும் செழுமைக்குமுரிய அண்ணன் ஜெயராஜ் அவர்கள் ஒரு ஓரமாக ஒதுங்கியிருக்கக்கூடிய மனிதர் அல்ல. அவருடைய பணி மகத்தானது. அவரோடு இணைந்திருக்கின்ற கூட்டு முயற்சியாளர்களான குறிப்பாக ஈஸ்வரன் ஜயா அவர்கள் என்னைப்பார்த்து கேட்டார்.
எங்களுடைய கூடாரத்துக்குள் உங்களைக்கொண்டு வந்து விட்டோம் என்று கூறினார். நான் அவருடைய ஒரு விசுவாசி எப்பொழுதும் அவரை நான் என்னுடைய நிகழ்கால தமிழ் தலைவர்களில் ஒருவராக காண்கிறேன். நாங்கள் தமிழர்கள் ஒன்றாக இணைந்திருக்கிறோம் இதில் கூட கம்பன் கழகம் பெரும் பங்கு வகிக்கின்றது அதை நான் மனதார பாராட்டுகிறேன்.
இனமத பேதமின்றி கம்பன் கழகம் அனைவரையும் ஒன்றிணைத்து நாடு கடந்து இந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரியாக இருக்கலாம் அல்லது உலகமெல்லாம் இருக்கிறவர்களை இணைத்து ஒரு குடையின் கீழே கொண்டுவருகின்ற ஆற்றல் கம்பன் கழகத்துக்கே இருக்கிறது. அதனால் தான் கம்பன் கழகம் வாழும் நிலைத்து நிற்கும். தனது பணியைத்தொடரும்.
அதற்காகத்தான் நீங்கள் இவ்வளவு பேரும் கூடியிருக்கிறீர்கள். எந்தவொரு காரியத்திலும் அதிகமாக மக்கள் கூடுகிறார்கள் என்றால் அங்கே ஒரு தொன்மம் இருக்கும். குறிப்பாக நல்லூரிலே திருவிழாக்காலங்களில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களை நாங்கள் ஆலயச் சூழலில் நித்தமும் காணுகிறோம்.
 
இலட்சோப இலட்ச மக்கள் நல்லூரை தரிசிக்க வருகிறார்கள் என்பது அவ்வாலயத்தின் தொன்மையை, வரலாற்றை, பாராம்பரியத்தை சிறப்புற வெளிக்காட்டி நிற்கிறது. அதே போல 
மடுத்தேவாலய திருவிழாக்காலங்களில் உலகெமெலாம் இருந்து அடியவர்கள் வருவதும் இலங்கையின் மூலை முடுக்குகளிலிருந்தும் மக்கள் மடுமாதாவை தரிசிக்க எண்ணுகின்ற செயலை உற்று நோக்கும் போது அங்கே ஒரு தொன்மம் இருக்கிறது. இருந்து வருகிறது.
 
இவ்வாறான சிறப்புக்களையும் தொன்மங்களையும் வரலாற்றுச்சரித்திரங்களும் இல்லாத இடங்களில் எங்களால் ஒன்று கூட முடிவதில்லை. அவற்றுக்கெல்லாம் வரலாற்றுப்பின்னணிகள், இலக்கிய இரசனைகள், இலக்கியத்தொடர்புகள் இருக்கிறது.
அந்த வாய்ப்புக்களை எல்லாம் தன்னகத்தே கொண்டு அனைத்து இன மத வேறுபாடுகளைக்கடந்து அனைவரையும் ஒரே குடையின் கீழ் திரள்வதற்கான களத்தை கம்பன் கழகம் அருளியிருக்கிறது. உங்களது வளர்ச்சியில் பல எதிர்ப்புக்களையும் கடந்துதான் நீங்கள் பரிணாம வளர்ச்சி கண்டீர்கள்.
குறிப்பாக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்ற பெரியோர்களான கந்தசாமி ஜயா மற்றும் விஸ்வநாதன் ஜயா இவர்களை எல்லாம் நான் பார்க்கின்றபோது தமிழோடு வளர்வதற்கு தமிழர்களை வளர்ப்பதற்கு இவர்கள் எடுத்திருக்கும் காரியங்கள் போற்றத்தக்கது.
இவர்கள் தமிழர் வரலாற்றின் புருசர்கள் இவர்களுடைய அளப்பரிய பணிகளூடாகத்தான் நாங்களும் என்றும் மாறாத தமிழ் மிடுக்கோடு வளர்ந்திருக்கிறோம். அன்பிற்கினிய தமிழ் வளர்க்கும் சான்றோர்களே இது ஒரு இலக்கிய ஒன்றுகூடலாக நான் பார்க்கவில்லை.
இது ஒரு தமிழர் வரலாற்றின் காலப்பதிவு, வருடாந்தம் தமிழர்கள் தம் தாய்மொழியை நினைக்கின்ற தமிழர்கள் தங்கள் வாழ்வியலைச்சிந்திக்கின்ற தங்களது அடையாளங்களை மீட்டுகின்ற சரித்திர நிகழ்வு. கொழும்பில், சென்னையில், புதுச்சேரியில் மட்டுமல்ல கலாச்சார மையமான யாழ்ப்பாணத்திலும் இதன் சிறப்பு மலரும்.
இதன் சிறப்பை நீங்கள்தான் உலகமெலாம் கொண்டு செல்லவேண்டும். நான் நினைக்கிறேன் சிலருக்கு சில இடங்களால் பெருமை கிடைக்கிறது. சில நபர்களால் சில இடங்களுக்கு பெருமை வந்து சேர்கிறது இவையெல்லாம் கடந்து இன்றைய கம்பன் விழாவில் என்னையும் இந்நிகழ்வுக்கு அழைத்தமையையிட்டு அதுவும் தமிழ் வளர்க்கும் கம்பன் விழாவில் நான் கலந்து கொண்டதையிட்டு நான் பெருமை கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.
சிறப்புற இடம் பெற்ற நிகழ்வில் தலைமையுரையை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களும் தொடக்கவுரையினை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க அவர்களும் மற்றும் கம்பவாரிதி ஜெயராஜ்,
பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சித்தர்த்தன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விநாயகமூர்த்தி ,மகேந்திரன் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டதோடு புலவர் கோ.சாரங்கபாணி தலைமையிலான பட்டிமன்றமும் இடம் பெற்றதுடன் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
 
நியூஸ் பெர்ஸ்ட் 
 

இலங்கைத் தமிழ் இலக்கியம் கட்டியெழுப்பப்பட வேண்டும் – அநுரகுமார திஸாநாயக்க

இலங்கைத் தமிழ் இலக்கியம் கட்டியெழுப்பப்பட வேண்டும் – அநுரகுமார திஸாநாயக்க
சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அடிப்படை உரிமைகளை ஏற்று, அதன் அடிப்படையில் நல்லிணக்கத்தைக் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கொழும்பு கம்பன் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்ற போது, அதில் கலந்துகொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு வௌ்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் கம்பன் விழா நடைபெற்றுவருகின்றது.
அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்ததாவது,
கடந்த 30 வருடகால யுத்தம் காரணமாக இந்த நாட்டில் ஒரு பிரபல்யமான இலக்கியத்தைக் கட்டியெழுப்ப முடியாமற்போது. இன்றும் இலங்கை தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டின் தமிழ் இலக்கியத்தின் கீழ் தான் உள்ளது. இலங்கைத் தமிழ் இலக்கியம் கட்டியெழுப்பப்பட வேண்டும். எங்கள் மூலம் என்ன உதவி தேவையோ அதை வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஒரே பாடசாலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று எமக்கு கனவு இருக்கின்றது.
 
 
 
 
ஆதவன் செய்திகள் 

இலங்கையை இராமாயண பூமியென அங்கீகரிக்க வேண்டும்: இராதாகிருஷ்ணன்

 
 
 
13இலங்கை மக்களின் கர்ண பரம்பரைக் கதைகள் ஊடாகவும் புவிசார் அமைப்புகள் ஊடாகவும் கம்ப இராமாயணம் ஊடாகவும் இன்னும் பல ஆய்வுகளை எதிர் காலத்தில் முன்னெடுக்கவும், இலங்கையை இராமாயண பூமியென அங்கீகரிக்கவும் இங்குள்ள அறிஞர்கள் ஊக்கம் காட்ட வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை கம்பன் கழகத்தின் கொழும்பு கம்பன் விழாவின் மூன்றாம் நாள் அமர்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு தலைமையுரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பஞ்ச ஈஸ்வரங்களை கொண்டிருப்பதால் இலங்கையை சிவபூமி என சிறப்பிக்கிறார்கள். ஆனால் இலங்கை இராமாயணத்தோடு மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதால் இலங்கையை இராமாயண பூமி எனவும் அழைக்கலாம்.
அத்துடன், இலங்கை இராமாயண பூமி என்பதை உலகளாவிய தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லவே வருடந்தோறும் கம்பன் கழகம் கம்பனுக்கு விமர்சையாக விழாவெடுத்து அதனூடாக இராமாயணத்தின் பெருமையை பறைசாற்றுகின்றது.
மேலும் ரம்பொட பிரதேசம் அனுமன் சீதையை தேடிய பகுதியாகவும் ராமர் படை இருந்தமையாலும் இங்கு சின்மயா மிஷனால் ஸ்ரீ பக்த ஹனுமன் ஆலயம் எழுப்பப்பட்டு உலகெங்கும் உள்ள ராம பக்தர்கள் மலையகத்துக்கு வந்து வழிபாடு செய்வது மயைகத்துக்கும் இராமாயணயத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தொடர்ந்தும் வலுப்பெறச் செய்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தினக்குரல் 30.03.2016 








 

 

 

தமிழ் மிரர் தனிப்பக்கச் செய்தி 

ஐ.ரி.என். செய்திகள் 

 

PM says he and the President are dedicated to build a country uniting communities

Prime Minister Ranil Wickremasinghe has said that he is proud that the Sinhala and Tamil cultural bonds prevailing from the ancient past within Sri Lanka are still existing. The Prime Minister made this reference joining in the Kambanwila Festival, which is an annual event.
 
The Kamban Festival, an annual Tamil Literary celebration, organized by the Kamban Kalagham Organization, was staged at the Ramakrishnan Hall in Wellawatte for four days. Yesterday’s concluding sessions was held under the patronage of Prime Minister Ranil Wickremasinghe. Several persons were feted for the yeoman services they had discharged on behalf of the Tamil Language and the uplift of the Tamil Culture. The Kamban Special Award was given to P. Susila, a famous Indian playback vocalist. A special honourary award was also presented to the Prime Minister.
Expressing his views at this function, Premier Wickremasinghe mentioned that his and the desire of the President is to build Sri Lanka’s future as a united and not as a divided nation.
“The Prime Minister said that as Sri Lankans we should be proud of our country’s history and heritages. Ramayanaya, which part of the Tamil Culture does not belong to one nation, area or a region. It is a common art work. Accordingly the Government’s intention is to further craft the necessary environment for all communities to live in brotherhood.”
A distinguished gathering including Minister D.M. Swaminathan joined in the occasion.
சிலோன் டுடே

 

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.