அதன் அத்தனை அநியாயங்களையும் பார்த்தோம். அனுபவிக்கி...

03 Oct 2017

அதன் அத்தனை அநியாயங்களையும் பார்த்தோம். அனுபவிக்கின்றோம். இப்போ நமக்கு முன் உள்ள கேள்வி அபிவிருத்திப் பாதையில் இருந்து அரசியல் பாதைக்குள் விக்கி ஐயாவை முழுமையாக இழுத்தவர்கள் யார? அவர்கள் தான் முதல் குற்றவாளிகள். வள்ளுவரின் குறள் செய்தக்க செய்யாமை.... அவர்களுக்கு பொருந்தும். சரியான நுண்மாண் நுழைபுல அறிவற்று இவ் நுணுக்க அரசியலை உணராது உள்ள புத்திஐீவிகள் சமூகத்தின் சாபக்கேடு? உண்மையில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் தரப்பிலிருப்பதால் தப்பிச் செல்வதை விட அவர்கள் யோக்கியமானவர்கள் எனச் சிந்திக்கும் தட்டைத்தனமான சிந்தனை...(இப்போது புதிய சுகாதார அமைச்சரை வரவேற்ற மாகாண சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் முகப்புத்தகத்தில் பிரதேச வாதமற்ற ஊழலற்ற பழிவாங்கலற்ற இலஞ்சமற்ற நேர்மையான தலமைத்துவத்தை எதிர்பார்க்கின்றோம் என வாழ்த்துத் தெரிவித்திருப்பதன் உட்கிடை உணர்க) இவற்றைக் கொண்டோர் தான் குற்றவாளிகள்.... பி.கு மதிப்புக்குரிய கம்பவாரிதி ஐயாவின் தெரிவு ஒரு போதும் தவறாகாது. அவர் அதை உணராது இருப்பினும் அவரை உணர்ந்த நாம் அதை ஆழமாக உணர்வோம். காலம் எழுதிச் செல்லும் பக்கத்தில் நடந்த முடிந்த அத்தனை அநியாயங்களும் வெளிவரும் போது விக்கி ஐயாவினதும் அவரோடு இணைந்து தூய மனத்துடனும் பணியாற்றியவர்கள் மீது பூசிய சேறை காலம் கழுவும். இப்போது சிலவேளை தமிழர்களை பேய்கள் அரசாளலாம். விக்கி ஐயாவுக்கு எப்படி முன் தகுதிகள் இல்லையோ அவ்வாறே முன் தகுதிகள் அற்றவர்கள் தமிழர் தலமையாகிவிடாமல் பார்த்துக் கொள்வது தான் கம்பவாரிதி போன்றவர்கள் இனத்துக்கு செய்யும் காலக்கடமை.

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.