கம்பன் கழகத்தின் சொல்விற்பனம் சிறப்பு நிகழ்ச்சி
செய்திப்பெட்டகம் 19 Dec 2018
உ
எதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி..?
அகில இலங்கைக் கம்பன்கழக இளநிலை நிர்வாகிகள் நடாத்தும் சொல்விற்பனம் சிறப்பு நிகழ்ச்சி அறங்கூறு அவையமாக எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வெள்ளவத்தை மயுரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருமண மண்டபத்தில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் திரு. எஸ். ஸ்ரீகஜன், தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் திரு. ஆர். பி. ஹரன், தினகரன் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த திரு. தே. செந்தில்வேலவர், சக்தி எப்.எம். பணிப்பாளர் திரு. ஆர். பீ. அபர்ணாசுதன், வசந்தம் தொலைக்காட்சியின் பிரதிப் பொதுமுகாமையாளர் திரு. மு. குலேந்திரன், ஆதவன் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் திரு. ப. ஸ்ரீகாந் ஆகிய ஊடகவியலாளர்கள் மங்கல விளக்கினை ஏற்றவுள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக பாரளுமன்ற உறுப்பினர்களான கௌரவ த.சித்தார்த்தன், கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கௌரவ மனோ கணேசன், கௌரவ ம. ஆ. சுமந்திரன், கௌரவ சி. சிறீதரன் ஆகியோரும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான கலாநிதி க. சர்வேஸ்வரன், திரு. சி.தவராசா, திரு. க. சிவாஜிலிங்கம் ஆகியோரும், மேல்மாகண சபை உறுப்பினர் திரு. சண். குகவரதன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். தொடக்கவுரையினை தமிழ்ச்சங்கத் தலைவர் சட்டத்தரணி ஆர். இராஜகுலேந்திரா அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.
“எதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி..” எனும் பொருளில் இடம்பெறவுள்ள இவ் அறங்கூறு அவையத்திற்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ், கம்பன்கழக நிறுவுநர் கம்பவாரிதி இ.ஜெயராஜ், கொழும்பு பல்கலைக் கழக சட்டபீட முதுநிலை விரிவுரையாளர் அ.சர்வேஸ்வரன், பேராதனைப் பல்கலைக்கழக அரசியற்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ச. பாஸ்கரன், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன் ஆகியோர் நடுவர் ஆயத்தினராக அமரவுள்ளனர். எதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே ! என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தனும், தமிழ் மக்கள் கூட்டணியே! என தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைப் பரப்புச் செயலர் க. அருந்தவபாலனும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே! என யாழ். மாநகரசபை உறுப்பினர் இரா. செல்வவடிவேலும், ஜனநாயக மக்கள் முன்னணியே! என மேல் மாகாண சபை உறுப்பினர் கே.ரி. குருசாமியும் வாதிடவுள்ளனர். இவ் விழாவிற்கு அனைவரையும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றனர் கம்பன் கழகத்தினர்.
நிகழ்வின் அழைப்பிதல்....