வீழ்வோம் என நினைத்தீரோ! - உளம் பகிரும் அ.இ.கம்பன் கழகத்தினர்.

வீழ்வோம் என நினைத்தீரோ! - உளம் பகிரும் அ.இ.கம்பன் கழகத்தினர்.

 

உங்களோடு உளம் பகிர விரும்புகிறோம்.

நிறைய எதிர்ப்புக்கள்!
நிறையத் திட்டுக்கள்!
நிறையப் பரபரப்புக்கள்!
பணம் வாங்கி தரப்பட்ட மண்டபம் மறுக்கப்பட்டது!
இணைய வெளிகளில் ஏசுவோர் தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது!
ஆதரிப்போர் அன்பும் அது போலவே.
இவ்வளவும் எதற்காக?
நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நம் தமிழ்த் தலைமைகளை
மக்கள் மன்றுக்கு அழைக்கிறோம் என்பதற்காகவே.
ஆச்சரியமாய் இருக்கிறது!.
மக்கள் மன்றில் தலைமைகளை பதிலுரைக்க அழைப்பதில் தவறென்ன இருக்கிறது?
சில பேருக்கு மாற்றணி பலம் பெற்று விடுமோ என்று பயம். 
வேறு சிலபேருக்கு மக்கள் மன்றில் தலைகவிழ்ந்து விடுவோமோ என்று பயம்.
இன்னும் சிலருக்கு கழகம் அணி சார்ந்து நடக்குமோ என்று பயம்.
பலமின்மையால் தம் பயத்திற்கு விதவிதமாய் விடைகாண்கிறார்கள் சிலர்.
காலாகாலமாக கேள்வி கேட்காமல் தலைமைகளை நம்புவதும் பின்னர் பிழைகள் முழுவதுக்குமான பழியை அவர்கள் மேல் மட்டும் சுமத்துவதும் நம் இனத்தின் வழக்கமாகிவிட்டது.
சறுக்குக் கட்டை போடாமல் தேர் இருப்பிடம் சேருமா?
சேர்க்கும் முயற்சியே எம் நிகழ்ச்சி.
எல்லா வினாக்களுக்குமான விடைகள் நிகழ்ச்சி மேடையில் கிடைக்கும்.
ஒன்று நிச்சயம்! 
கழகம் தாம் கூட்டும் பொது மேடையில் நிச்சயம் நடுநிலைமை தவறி நடக்காது. 
கழகத்தை அறிந்தார் இதனை அறிவார்.
அறியார் அறியாதாரே.
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.