கம்பன் விழாவின் 3ஆம் நாள் இன்று

கம்பன் விழாவின் 3ஆம் நாள் இன்று
 
கொழும்புக் கம்பன் கழகத்தின் கம்பன் விழாவின் 3ஆம் நாள் காலை நிகழ்வுகள் 9.30 மணிக்கு ஐ.நா.சபையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி திரு.சு. திருஞானசம்பந்தர் தம்பதியினரின் மங்கலவிளக்கேற்றலுடனும் திருமதி ஹம்சானந்தி தர்மபாலனின் கடவுள் வாழ்த்துடனும் ஆரம்பமாகும். கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்; பேராசிரியர் மா.செ.மூக்கையா தலைமையுரையையும், நாவலர் நற்பணி மன்ற தலைவர் என். கருணையானந்தன் தொடக்கவுரையையும் ஆற்றவுள்ளனர். 
 
இன்றைய விழாவின் சிறப்பு நிகழ்வான சிந்தனை அரங்கு கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையில் நடைபெறும். “கம்ப மொழித் திறம்” என்;ற பொருளிலான இவ்வரங்கில், டாக்டர் ரி. ரெங்கராஜா, கலாநிதி ஆறு.திருமுருகன், கலாநிதி ஸ்ரீ பிரசாந்தன், பேராசிரியை பர்வீன் சுல்தானா, ‘இலக்கியச்சுடர்’ த.இராமலிங்கம்  ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
 
மாலை நிகழ்வுகள் 5.30 மணிக்கு ' சமூகப்புரவலர் ' ஏ.எம்.சுப்ரமணியம் தம்பதியினரின் மங்கல விளக்கேற்றலுடனும், திரு ரி.கருணாகரனின் கடவுள் வாழ்த்துடனும் ஆரம்பமாக உள்ளன. தலைமையுரையை கல்வி ராஜாங்க அமைச்சர் மாண்புமிகு வே. ராதாகிருஷ்ணனும் தொடக்கவுரையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வரும் ஆற்றவுள்ளனர். தொடர்ந்து நடைபெறவுள்ள படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் நிகழ்ச்சியில், புலவர் கோ. சாரங்கபாணி, எம்.எஸ். ஸ்ரீதயாளன், த. சிவகுமாரன், செ. சொபிசன், ஐ. கதிர்காமசேகரம், கு. அசோக்பரன், லோ. பிரசன்னவருண், செ.மதுரகன், ஏ.எச்.ஜலால், எஸ். ரவி ஆகியோர் மேடையேறவுள்ளனர். 
 
அதனைத் தொடர்ந்து, சிறப்பு நிகழ்வாக, நேற்றைய தினம் இடம்பெற்ற பட்டிமண்டபத்தின் தீர்ப்பை எதிர்த்து,  மேன்முறையீட்டுப் பட்டிமண்டபம் இடம்பெறும். ‘கம்பவாரிதி’ இ.ஜெயராஜ், அமைச்சர் மாண்புமிகு எம். சரவணன், டாக்டர் ஜின்னா ஷரிபுத்தீன் ஆகியோர் நடுவர்களாகக் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியில் ‘இலக்கியச்சுடர்’ த. இராமலிங்கம், பேராசிரியை பர்வீன் சுல்தானா, டாக்டர் ரி. ரெங்கராஜா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.