கம்பன் விழா நிறைவுநாள் நிகழ்ச்சிகள்

கம்பன் விழா நிறைவுநாள் நிகழ்ச்சிகள்
கொழும்புக் கம்பன் கழகத்தின் கம்பன் விழாவின் நிறைவு நாள் காலை நிகழ்வுகள் 9.30 மணிக்கு ஸ்ரீஐஸ்வர்ய லட்சுமி ஆலய அறங்காவலர் மாலா சபாரட்ணம் அவர்களின் மங்கல விளக்கேற்றலுடனும், செல்வி வைஷாலி யோகராஜாவின் கடவுள் வாழ்த்துடனும் ஆரம்பமாகும். பேராதரனப் பல்கலைக் கழகத் தகைசார் பேராசிரியர் சி. தில்லைநாதன் தலைமையுரையையும், இந்து சமயத் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தொடக்கவுரையையும் ஆற்றவுள்ளனர். 
 
 
தொடர்ந்து கவிஞர் சோ. பத்மநாதன் கம்பன் சொல் வளம் எனும் தலைப்பில் உரையாற்றுவார். அடுத்து தமிழகப் பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் தலைமையில் “எண்களும் எண்ணங்களும்” எனும் பொருளில் சிந்தனையரங்கம் இடம்பெறும். இதில் பேரா. ரி. ரெங்கராஜா, புலவர் தா.கு.சுப்பிரமணியம், கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன், கலாநிதி ஆறு. திருமுருகன் ஆகியோர் உரையாற்றுவர். 
 
மாலை நிகழ்வுகள் 5.30 மணிக்கு தேவி ஜூவலர்ஸ் அதிபர் திரு.என். வாசு தம்பதியர் மங்கல விளக்கேற்ற, அ. ஆரூரன் கடவுள் வாழ்த்திசைக்க ஆரம்பமாகும். தலைமையுரையை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டி.எம். சுவாமிநாதனும், தொடக்கவுரையை எதிர்க் கட்சித்தலைவர் மாண்புமிகு அரா. சம்பந்தன் அவர்களும், சிறப்புரையை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவும் ஆற்றவுள்ளனர். 
 
தொடர்ந்து நம் நாட்டு ஆன்றோர் அறுவருக்கான கௌரவம் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில், திருமறைக் கலாமன்ற ஸ்தாபகர் வண. மரியசேவியர் அடிகளார், எழுத்தாளர் அருள் சுப்பிரமணியம், ராவய பத்திரிகை ஆசிரியர் விக்டர் ஐவன், தென்கிழக்குப் பல்கலைக் கழக துணைவேந்தர் எம்.எம்.எம். நாஜிம், மயுரபதி பத்திரகாளி அம்பாள் ஆலய அறங்காவலர் பி. சுந்தரலிங்கம், யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ரி. சத்தியமூர்த்தி ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர். தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற தமிழ் அறிஞர் பிரபல பேச்சாளர் பி. சுசீலா அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா பொற்கிழி உள்ளடங்கலாக, கம்பன்புகழ் விருது வழங்கப்படவுள்ளது.
 
நிறைவாக, சிறப்பு நிகழ்ச்சியான வழக்காடு மன்றம் ‘கம்பவாரிதி’ இ. ஜெயராஜ், பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, கலாநிதி ஆறு. திருமுருகன் ஆகியோர் நீதியரசர்களாக அமர நடைபெறவுள்ளது. குற்றக் கூண்டில் சீதையை நிறுத்தும் இவ்வழக்காடு மன்றத்தில் பேராசிரியர் வி. அசோக்குமாரன், புலவர் தா.கு. சுப்பிரமணியம், இரா.செல்வவடிவேல், பேராசிரியர் தி. வேல்நம்பி ஆகியோர் வாதாடவுள்ளனர்.
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.