கொழும்புக் கம்பன் கழகம் நடாத்தும் திருக்குறள் மனனப் போட்டி
செய்திப்பெட்டகம் 31 Jan 2018
அகில இலங்கைக் கம்பன்கழகம் ஆண்டுதோறும் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலுமாகக் கம்பன் விழாக்களை நடாத்திவருகிறது. அவ்விழாக்களின் வரிசையில் 2018 ஆம் ஆண்டுக்கான கொழும்புக் கம்பன்விழாவினை எதிர்வரும் மார்ச் மாதம் நடாத்தவுள்ளது. இவ் விழாவை முன்னிட்டு நாவலர் நற்பணி மன்றத் தலைவர் என். கருணையானந்தன் அவர்களின் அனுசரணையுடன் நடத்தப்படும் திருக்குறள் மனனப்போட்டிக்கான விபரங்களைக் கொழும்புக் கம்பன்கழகம் அறிவித்துள்ளது.
இப்போட்டி இருபிரிவுகளாக நடைபெறும். பாலர் பிரிவில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவர்களும் கீழ்ப் பிரிவில் தரம் 6 முதல் 8 வரையான வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம். பாலர் பிரிவில் கலந்து கொள்வோர் குறிப்பிட்ட ஐந்து அதிகாரங்களை (50 குறள்கள்) மனனம் செய்தல் வேண்டும். கீழ்ப் பிரிவில் கலந்து கொள்வோர் குறிப்பிட்ட பத்து அதிகாரங்களை (100 குறள்கள்) மனனம் செய்வதோடு அக்குறள்களுக்குhன பொருளறிவையும் பெற்றிருத்தல் வேண்டும். மனனம் செய்யவேண்டிய அதிகாரங்கள் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
பாலர் பிரிவினர்
(மனனம் செய்யவேண்டிய அதிகாரங்கள்)
· கல்வி 40 ஆம் அதிகாரம்
· கல்லாமை 41 ஆம் அதிகாரம்
· கேள்வி 42 ஆம் அதிகாரம்
· அறிவுடைமை 43 ஆம் அதிகாரம்
· குற்றம் கடிதல் 44 ஆம் அதிகாரம்
குறிப்பு: மேலே தரப்பட்டுள்ள அதிகாரங்களிலுள்ள குறள்கள் 50ஐயும் மாணவர்கள் மனப்பாடம் செய்திருந்தால் போதுமானது.
கீழ்ப் பிரிவினர்
(மனனம் செய்யவேண்டிய அதிகாரங்கள்)
· பெரியாரைத் துணைக்கோடல் 45ஆம் அதிகாரம்
· சிற்றினம் சேராமை 46ஆம் அதிகாரம்
· தெரிந்து செயல்வகை 47ஆம் அதிகாரம்
· வலி அறிதல் 48ஆம் அதிகாரம்
· காலம் அறிதல் 49ஆம் அதிகாரம்
· இடன் அறிதல் 50ஆம் அதிகாரம்
· தெரிந்து தெளிதல் 51ஆம் அதிகாரம்
· தெரிந்து வினையாடல் 52ஆம் அதிகாரம்
· சுற்றம் தழால் 53ஆம் அதிகாரம்
· பொச்சாவாமை 54ஆம் அதிகாரம்
குறிப்பு: மேலே தரப்பட்டுள்ள அதிகாரங்களிலுள்ள குறள்கள் 100ஐயும் அவற்றுக்கான பொருளையும் மாணவர்கள் மனப்பாடம் செய்திருக்கவேண்டும்.
மேற்படி திருக்குறள் மனனப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் சுயமாகத் தயாரிக்கப் பெற்ற விண்ணப்பப் படிவத்தில் தமது முழுப் பெயர், வயது, பிறந்ததிகதி, முகவரி, தொலைபேசி இலக்கம், மாணவராயின் பாடசாலையின் பெயர், ஆகியவற்றைக் குறிப்பதோடு தாம் கலந்து கொள்ளவுள்ள போட்டி விபரங்களையும் குறிப்பிட்டு, இல. 12, இராமகிருஷ்ண தோட்டம், கொழும்பு - 6 (ளுநஉசநவயசலஇ ஊழடழஅடிழ முயஅடியn முயணாயமயஅஇ 12இ சுயஅயமசiளாயெ புயசனநnஇ ஊழடழஅடிழ - 06.) எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். கடித உறையின் மேற்பக்கத்தில் போட்டியாளர் விண்ணப்பிக்கும் போட்டி விபரத்தையும் எழுதுதல் வேண்டும். 2018 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். போட்டி நடைபெறும் திகதி போட்டியாளர்களுக்குத் தனித்தனியே அறிவிக்கப்படும். பாடசாலை மாணவர்களது விண்ணப்பங்களைத் தனித்தோ, தமிழ் மன்றங்களின் ஊடாக ஒரே தொகுதியாகவோ அதிபரின் உறுதிப்படுத்தலுடன் அனுப்பி வைக்கலாம்.