கந்தன் கவிஅமுதம் 16

கந்தன் கவிஅமுதம் 16

உலகமெலாம் காத்தருளும் நல்லூர்க் கந்தன்             

ஒப்பற்ற திருவிழவும் உயர்ந்து ஓங்கி

நலம் திகழ நல்லபடி நிறைவும் காண

நாதனவன் கேணியதில் தீர்த்தமாடி

பலர் புகழக் கரையேறி வீதி தன்னில்

பார்ப்பவர்கள் கண் குளிர வலமும் வந்தான்.

மலமறுத்து உயிர்களேயே உய்யச் செய்யும்

மால்மருகன் திருவடியைப் பணிந்து நிற்பாம்

 

 

முருகனவன் திருவிழவைக் காண இன்னும்

முழுதாக ஓராண்டு செல்லும் என்னும்

கருத்ததனால் அடியரெலாம் கவலை பொங்க

கந்தனவன் திருவடியைத் தொழுது நிற்பார்

வருத்தமுடன் கண்களிலே அருவிபாய 

வணங்கித்தான் நிற்கின்ற அடியார்தமை

திருத்தமுற ஏற்றேதான் நல்லூர்க் கந்தன்

                தீர்த்தமதில் நீராடி அருளைப் பெய்வான்

 

 

 

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.