சொல்விற்பனம் 07 | இன்றைய தலைமைகளின் பெரும் குறைபாடு எது?

சொல்விற்பனம் 07 | இன்றைய தலைமைகளின் பெரும் குறைபாடு எது?
 
 
 
கம்பன் கழகம் நடாத்தும் சொல்விற்பனம்
கருத்தாடற்களம் 07
18.06.2016
 
அகில இலங்கைக் கம்பன் கழகத்தினரால் நியமிக்கப்பட்டுள்ள இளநிலை நிர்வாகத்தினர் 'சொல்விற்பனம்' எனும் பெயரில் நடாத்தும் கருத்தாடற் களம் நிகழ்ச்சித் தொடரின் ஏழாவது நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
 

சமூகத்தின் நிகழ்கால பிரச்சினைகளை விவாதித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு நடாத்தப்படும் இவ்விழாவினை அகில இலங்கை இந்துமாமன்ற உபதலைவர் ‘விடைக்கொடிச்செல்வர்’ சி.தனபாலா தம்பதியர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கவுள்ளனர். கடவுள் வாழ்த்தினை செல்வி இராமநாதன் ஸ்ரீவத்ஸலா இசைக்கவுள்ளார். தொடர்ந்து மேல் மாகாணசபை உறுப்பினர் திரு. கே.ரி. குருசாமி அவர்களின் தொடக்கவுரையும், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் கலாநிதி ந.குமரகுருபரன் அவர்களின் தலைமையுரையும் இடம்பெறும். 
 
 
 
தொடர்ந்து,  புகழ்பெற்ற சொற்பொழிவாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ், அவர்கள் நடுவராக இருக்க, “இன்றைய தலைமைகளின் பெரும் குறைபாடு எது?” எனும் பொருளிலான பட்டிமண்டபம் நடைபெறவுள்ளது. இவ்வரங்கில் ‘ஒற்றுமையின்மையே!’ என ஆசிரியர் ‘சொல்லின் செல்வர்’ இரா.செல்வவடிவேல் அவர்களும், ‘பதவி ஆசையே!’ என கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவர் சட்டத்தரணி ஜி.இராஜகுலேந்திரா அவர்களும், ‘தீர்க்கதரிசனமின்மையே!’ என கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் அவர்களும் வாதிட உள்ளனர். இவ்விழாவில் கலந்து தமிழ்ச் சுவையைப் பருக அனைவரையும் வருகை தரும்படி கம்பன் கழகத்தினர் வேண்டியுள்ளனர்.
 
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.