அதிர்வுகள் 31 | ''கல்யாண வயது ? ''
சர்ச்சைக்களம் 16 Jun 2016
உ
உங்களிடம் ஒரு கேள்வி?
பண்டைத்தமிழர்கள் ஆணுக்கும், பெண்ணுக்கும் வகுத்திருந்த,
திருமண வயது என்ன? சொல்லுங்கள் பார்க்கலாம்.
என்ன? பதில் தெரியாமல் விழிக்கிறீர்கள் போல?
தமிழர் தமிழர் என்று வாய்கிழியப் ‘பீத்திக்’ கொள்கிறோமே தவிர,
தமிழ் பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்ள என்றுமே முனைவதில்லை.
அதெல்லாம் யாருக்குத் தேவையாம்?
வெறுமனே வாய் கிழியப்பேசினால்த்தானே,
எம்மை இனப்பற்றாளர்கள் என்று நினைப்பார்கள் என்கிறீர்களாக்கும்.
நீங்கள் எப்படியும் இருந்துவிட்டுப்போங்கள்.
பண்டைத் தமிழர்களின் திருமண வயதை நான் சொல்கிறேன்.
அதையாவது கேட்டுத் தொலையுங்கள்.
✽❤❤✽
அந்தக் காலத்தில் ஆணுக்கான திருமண வயது பதினாறு என்றும்,
பெண்ணுக்கான திருமண வயது பன்னிரண்டு என்றும்,
நமது மூதாதையர் வகுத்து வைத்திருந்தார்கள்.
உங்களுக்கு இச்செய்தி,
ஆச்சரியமாகவும், சிரிப்பாகவும் கூட இருக்கலாம்.
ஆனால் நான் சொன்னது முற்றிலும் உண்மை.
✽❤❤✽
சான்று கேட்கிறீர்கள் போல.
இளங்கோவடிகளால் ஆக்கப்பட்ட,
சிலப்பதிகாரம்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கேள்விப்படாவிட்டால் விட்டு விடுங்கள்.
கோவலன், கண்ணகி கதையையாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அதுவும் தெரியாது என்கிறீர்கள் போல.
நல்ல தமிழர் ஐயா நீங்கள்.
சரி விடுங்கள்.
ஒருத்தியைத் திருமணம் செய்து பின் அவளைக் கைவிட்டு,
மற்றவளிடம் போன அந்தக் கோவலன் கதையைத்தான் சொல்கிறேன்.
என்ன உங்கள் முகத்தில் திடீர் மகிழ்ச்சி?
இப்போ தெரியவந்துவிட்டதாக்கும்.
அதுதானே பார்த்தேன்.
யார் புருஷன் யாரோடு போனான்? என்பதான கதைகளை,
அன்றாடம் ரி.வியில் பார்த்து ரசிக்கும் உங்களுக்கு,
இந்தக்கதை தெரியாமலா இருக்கப்போகிறது?
அப்படியாவது கண்ணகி கதையைத் தெரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சிதான்.
அப்படியும் கேள்விப்படாதவர்கள்,
இக்கட்டுரையை வாசிக்காமல் இருப்பது நல்லது.
✽❤❤✽
நாம் விஷயத்திற்கு வருவோம்.
அந்த சிலப்பதிகாரத்தில்,
கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் நடந்த போது,
அவர்கள் பதினாறு, பன்னிரண்டு வயதினராய்த்தான் இருந்தார்களாம்.
''ஈரெட்டாண்டு அகவையான்" என்றும்,
''ஈராறாண்டு அகவையாள்" என்றும்,
அவர்கள் கல்யாண வயதை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
என்ன பெருமூச்சு விடுகிறீர்கள்?
முப்பது வயதைத் தாண்டியும் இன்னும் திருமணமாகாத நீங்கள்,
இனிப் பெருமூச்சுவிட்டு என்னாகப்போகிறது?
சிலப்பதிகாரத்தில் மட்டுமன்றி,
வேறுபல தமிழ் இலக்கியங்களிலும் கூட,
இக்கல்யாண வயது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
✽❤❤✽
இதை வாசித்துவிட்டு,
தமிழர்கள் காட்டுமிராண்டிகள், பிற்போக்குவாதிகள் என்றெல்லாம்,
ஒரு சாரார் கூக்குரல் இடப்போவது இப்போதே என் காதுக்குக் கேட்கிறது.
இன்று நாங்கள் வகுத்து வைத்திருக்கிற,
திருமண வயதோடு ஒப்பிட்டுப்பார்த்தால்,
ஏன் உங்களில் பலரும் கூட அப்படித்தான் நினைப்பீர்கள்.
இன்று ஆண்களின் திருமண வயது,
முப்பத்தைந்தை எட்டியதாகவும்,
பெண்களின் திருமண வயது,
இருபத்தெட்டைக் கடந்ததாகவும்,
ஆகிக்கொண்டிருக்கும் நிலையில்,
பதினாறு வயதிலும் பன்னிரண்டு வயதிலும் திருமணமா? என்று,
நீங்கள் வியப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை தான்.
✽❤❤✽
சரி,
பண்டைத்தமிழர்கள் வகுத்துக்கொண்ட,
பதினாறு, பன்னிரண்டு எனும் திருமண வயதா?
இற்றைத் தமிழர்கள் வகுத்துக்கொண்ட,
முப்பத்தைந்து, முப்பது எனும் திருமண வயதா? சிறந்தது.
ஆராயவேண்டியது அவசியமாகிறது.
முடிந்தால் சாலமன் பாப்பையா தலைமையில்,
ஒரு பட்டிமண்டபமே கூட நடத்திவிடலாம்.
அது நடக்கிற போது நடக்கட்டும்.
நாம் நம் சொந்த புத்தியை வைத்து (அப்படி ஒன்றிருந்தால்),
இதுபற்றி ஆராய்ந்தால் என்ன? என்று தோன்றுகிறது.
✽❤❤✽
பெண்ணுக்கு இருபது வயது கடந்து விட்டாலே,
பெற்றோர் பதட்டப்பட்ட காலம் ஒன்று நம் ஊரிலும் இருந்தது.
நான் சொல்வது சங்ககாலத்தை அல்ல.
முப்பத்தைந்து நாற்பது வருடங்களுக்கு முற்பட்ட,
எங்களின் இளமைக்காலத்தை.
அப்போதெல்லாம் ஆண், பெண்ணின் திருமண வயதின் கடைசி எல்லை,
இருபத்தைந்து, இருபது என்றிருந்தது.
இன்று நாகரீகமும், அறிவும் வளர வளர,
திருமண வயதெல்லை முப்பத்தைந்து, முப்பது என்று,
நீண்டு கொண்டே போகிறது.
புத்திசாலித்தனம் வளர வளர,
இயற்கையோடு முரண்படுதலை,
நாம் வளர்த்துக் கொண்டே போகிறோம்.
✽❤❤✽
காலத்திற்குக் காலம் தம் கருத்தை மாற்றி உரைக்கும்,
விஞ்ஞானிகளின் கருத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டே,
அரசாங்கங்களும்,
திருமண வயதைத் தீர்மானிக்கத் தலைப்படுகின்றன.
அது தவறு என்றே நான் நினைக்கிறேன்.
பருவம் எய்திய பின்னர் கூட,
சில காலம் திருமணத்தைத் தள்ளிப்போடுவதுதான்,
நல்லது என்கின்றனர் இன்றைய அறிவியளாலர்கள்.
உடல் முதிர்ச்சியுற்ற பின்னர்தான்,
திருமணம் செய்யவேண்டும் என்பது,
அவர்களின் கருத்தாய் இருக்கிறது.
அக்கருத்தை நம் மூதாதையர்கள் ஏற்கவில்லை.
இயற்கையோடு பொருந்தி வாழ்வதே சிறந்தது என்பதுதான்,
நம்மவர்கள் கருத்தாய் இருந்தது.
அது பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன்.
✽❤❤✽
அது என்ன இயற்கையோடு பொருந்தி வாழும் வாழ்வு என்கிறீர்களா?
மாரி, கோடை, இளவேனில், முதுவேனில்,
முன்பனி, பின்பனி என,
இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப,
வாழ்வை அமைத்துக் கொள்வதே,
இயற்கையுடன் பொருந்தி வாழும் வாழ்வாம்.
தாவரங்கள் தாம் பூத்து, காய்த்து, பழுப்பதற்கான தகுதியை,
இயற்கையை அடிப்படையாய்க் கொண்டே அமைத்திருக்கின்றன.
அமைத்திருக்கின்றன என்பது கூட தவறு.
அமைந்திருக்கிறது என்பதுதான் சரி.
அதுபோலவே விலங்குகளும் கூட தமது புணர்ச்சியை,
இயற்கை மாற்ற அடிப்படையிலேயே செய்கின்றன.
பூச்சி, புழுக்கள் கூட அப்படித்தான்.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது?
இயற்கையோடு பொருந்தி வாழும் வாழ்வே,
உலக ஜீவராசிகள் அனைத்திற்குமான பொது நெறி.
இந்த இயல்பை வேறு எந்த ஜீவராசிகளும் மீறுவதில்லை.
மனிதன் மட்டுமே அறிவு வளர வளர,
இயற்கை வாழ்விலிருந்து விலகிச்செல்கிறான்.
அந்த விலகலின் ஒரு பகுதிதான்,
திருமண வயதைத் தள்ளிப்போடும் இன்றைய முட்டாள் முயற்சி.
✽❤❤✽
இயற்கை நமக்குத் தேவையான பலவற்றை,
நம் உடலின் இயல்பாய்,
தானே அமைத்துத் தந்திருக்கிறது.
உணவு தேவையானால் வயிறு பசித்துக் காட்டுகிறது.
களைப்படைந்தால் உடம்பு தூங்க விளைகிறது.
கடும் கோபம் வந்துவிட்டால் பெருமூச்சும், வியர்வையும் பொங்கி,
அக்கோபத்தைத் தணிக்கச் செய்கின்றன.
உடம்பில் எங்கேனும் ஒரு முள் தைத்துவிட்டால்,
அந்த இடத்தில் சீழ்கட்டி வலித்துக் காட்டுகிறது.
மூக்கில் ஏதும் தூசு நுழைந்து விட்டால்,
தும்மல் வந்து அதைத் தானாய் வெளியேற்றுகிறது.
கண்களில் ஏதும் விழுந்துவிட்டால் அவற்றில் நீர் பொங்கி,
அவை அதனைக் கழுவ முயல்கின்றன.
பொருந்தாத உணவு உள்ளே போய்விட்டால்,
வாந்தி எடுத்தோ? பேதியாகியோ,
உடம்பு உடனே அதை வெளித்தள்ளி விடுகிறது.
இவையெல்லாம் நம் நலனுக்காய்,
உடலில் இயற்கை அமைத்திருக்கும் பொறிமுறைகள்.
✽❤❤✽
இதே போலத்தான்,
ஆணினதும், பெண்ணினதும் நலனுக்கேற்ற,
புணர்ச்சித் தகுதிக்கான காலத்தையும்,
இயற்கை தெளிவுபட வகுத்திருக்கிறது.
ஒருவனோ ஒருத்தியோ புணர்ச்சியில் ஈடுபட்டு,
புதிய உயிரைத் தயார் செய்யும்,
உடல் தகுதியை பெற்று விட்டனர் என்பதற்கான அடையாளத்தையும்,
இயற்கை தானாக அமைத்துத் தந்திருக்கிறது.
ஒரு பெண் பருவமடைவதும்,
ஒரு ஆண் காம இச்சைக்கு ஆளாகத் தொடங்குவதும்,
அத்தகுதிக்கான இயற்கையின் அறிவிப்பேயாம்.
✽❤❤✽
பெரும்பாலும் இவ் அறிவிப்புக்கான வயது,
பன்னிரண்டு, பதினாறு எனும் எல்லைகளிலேயே,
அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது.
இதிலிருந்து இயற்கையால் அங்கீகரிக்கப்பட்ட திருமண வயது,
நம் பண்டைத் தமிழர்கள் வகுத்த திருமண வயதே என்பதை,
நாம் உறுதி செய்து கொள்ளலாம்.
✽❤❤✽
நீ சொல்வது உடம்பைப் பொறுத்தவரை சரியாயிருக்கலாம்.
ஆனால் திருமணத்திற்கு உடம்பின் முதிர்ச்சி என்பதோடு,
அறிவின் முதிர்ச்சியும் அவசியமல்லவா?
அம் முதிர்ச்சி வராமல்,
உடம்பின் முதிர்ச்சியை மட்டும் வைத்து,
திருமண வயதை நிர்ணயிக்கலாமா? என்பீர்கள்.
உங்கள் கேள்வி சரியானது தான்.
✽❤❤✽
உங்கள் கேள்விக்கான பதிலை சற்று ஆராய்வோம்.
திருமணத்திற்கு அறிவின் முதிர்ச்சி அவசியம் என்பார்க்கு,
ஒன்றை உரைக்க விரும்புகிறேன்.
அறிவின் முதிர்ச்சி காலத்தால் நிர்ணயிக்கப்படுவதன்று,
அது தேடலால் நிர்ணயிக்கப்படுவது.
காலத்தால் அறிவு முதிர்ச்சி உண்டாகுமெனின்,
வயது ஆக ஆக எல்லோரும் அறிஞர்களாக வேண்டும்.
அஃது இயற்கை முரணாம்.
தேடலை எவர் அதிகரித்துக் கொள்கிறார்களோ,
அவர்கள் தான் அறிவின் வளர்ச்சியை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
எனவே அறிவு முதிர்ச்சிக்காக காலத்தை நீட்டிக்காமல்,
இயற்கை அறிவிக்கும் கால எல்லைக்குள் தேடலை அதிகரித்து,
அறிவு முதிர்ச்சியை உருவாக்குவதே பொருந்துமான செயலாம்.
✽❤❤✽
உண்மை இப்படியிருக்க,
அதை விடுத்து அறிவு முதிர்ச்சிக்காக,
திருமண வயதைத் தள்ளிப்போடுகிறோம் என்று சொல்வதில்,
எவ்வித அர்த்தமும் இருப்பதாய்த் தெரியவில்லை.
✽❤❤✽
திருமணத்திற்கு அறிவின் முதிர்ச்சி அவசியம் என்பவர்களிடம்,
மற்றொன்றையும் கேட்க விரும்புகிறது என் மனம்.
அறிவுமுதிர்ச்சி எய்தும் முன்பு செய்யப்பட்ட அன்றைய திருமணங்களா,
அறிவுமுதிர்ச்சி எய்திய பின்னராய்ச் செய்யப்படும் இன்றைய திருமணங்களா,
உடையாமல் நின்று பிடிக்கின்றன?
அன்றைய காலத்தில் விவாகரத்து என்பது அபூர்வ விடயமாய் இருந்தது.
இன்றோ அஃது வரைவின்றி விரிந்துவிட்டது.
அதிலிருந்தே எது திருமணத்திற்கு உகந்த வயது என்று தெரியவேண்டாமா?
காரியத்தை வைத்துக் காரணத்தைக் கண்டுபிடிக்காவிட்டால்,
அது அறிவுடைமையாகுமா?
✽❤❤✽
இன்று திருமணங்கள் அதிகமாய் உடைந்து போவதற்கான,
காரணத்தையும் சொல்கிறேன்.
வயது ஆக ஆக உடம்பு முதிர்வது போல,
உள்ளமும் முதிரவே செய்கிறது.
இளமையில் வளைந்து கொடுக்கும் உடம்பு,
முதுமையில் வளைந்து கொடுக்க மறுப்பதை,
இயற்கையில் அறிகிறோம்.
அதனால்த்தான் ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்றார்கள்.
உடம்பு மட்டுமல்ல உள்ளமும் அப்படித்தான்.
இளமையில் அது வளைந்து கொடுக்கத் தயாராயிருக்கும்.
வயது ஏற ஏற அதன் வளைந்து கொடுக்கும் தன்மை குறையும்.
✽❤❤✽
திருமணம் என்பது,
இருவர் உள்ளத்தால் பொருந்தி வாழும் வாழ்க்கை.
இயல்பாக உள்ளத்தால் நூறுவீதம் பொருந்தியோர் என்று எவரும் இல்லை.
அதனால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தலே,
திருமண வாழ்வின் வெற்றிக்கான அடிப்படையாம்.
மனம் முதிராத இளமையில்,
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல் இலகுவாகிறது.
வயது ஏறி மனம் முதிர முதிர,
அத்தன்மை குன்றிக்கொண்டே போகிறது.
அதனால்த்தான் வயதான பின்பு செய்யப்படும் இன்றைய திருமணங்கள்,
பெரும்பாலும் உடைந்து போகின்றன.
✽❤❤✽
குறிப்பிட்ட வயதை எய்தியதும்,
உடலிலும், உள்ளத்திலும் மாற்றுப்பாலினத்தார் மேல்,
இச்சை ஏற்படுவது இயற்கை.
கல்வி, அறிவு, தொழில்முயற்சி, தகுதி என்றெல்லாம்,
பலவிடயங்களை முன்னிறுத்தி,
திருமண வயதை நாம் தள்ளிப்போடுகிறோம்.
இவையெல்லாம் நாம் உருவாக்கும் செயற்கை எண்ணங்களாம்.
இயற்கையேயான இச்சையை செயற்கையான விருப்புகளுக்காக,
நாம் தள்ளிப்போடுவது என்பது,
இயற்கையோடு முரண்படும் செயலாம்.
இயற்கையோடு முரண்பட்டதால் இன்றைய விஞ்ஞானம் படும்பாட்டை,
நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
நிலைமை அப்படியிருக்க,
பொய்யான விஞ்ஞானச் செய்திகளை நம்பி,
நம் தனி வாழ்வையும் செயற்கைப்படுத்துவது எங்ஙனம் சரியாகும்?
✽❤❤✽
இயற்கை தரும் கால எல்லைக்குள்,
அறிவு முதிர்ச்சியை உருவாக்கும் தேடலை அதிகரிப்பதே,
சரியான வழி என்றேன் அல்லவா.
அது எப்படிச் சாத்தியமாகும் என்பீர்கள்?
அதுபற்றி சற்று விரிவாய்ச் சொல்கிறேன்.
✽❤❤✽
அக்காலத்தில் பிள்ளைகளுக்கு மூன்று வயதில் வித்தியாரம்பம் செய்தார்கள்.
அறிவைப் பற்றக் கூடிய தகுதி,
இவ்வயதில் குழந்தைகளுக்கு வந்துவிடுவதை,
இன்றைய அறிவுலகமும் ஒத்துக்கொள்கிறது.
அந்த வயதிலிருந்து முழுமையான அறிவூட்டத்தை,
ஒரு பிள்ளைக்குச் சரியாய் வழங்குவோமானால்,
அப்பிள்ளை தனது பதினாறாவது வயதில்,
அதாவது கிட்டத்தட்ட பன்னிரண்டாண்டு கால இடைவெளியில்,
போதிய அறிவூட்டத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதைத்தான் அன்று நம் மூதாதையர்கள் செய்தார்கள்.
இன்று இது சாத்தியமா?என்பீர்கள்.
பதில் சொல்கிறேன்.
✽❤❤✽
இன்று ஒரு பிள்ளையை,
ஆறு வயதில் தான் பாடசாலையில் சேர்க்கின்றோம்.
கிட்டத்தட்ட அவன் பல்கலைக்கழகப் படிப்பை முடிக்க,
இருபத்திமூன்று வயதைத்தாண்ட வேண்டியிருக்கிறது.
அப்படிப்பார்த்தால் அவன் கல்வித்தேடலுக்காகச் செலவழிக்கும் காலம்,
பதினாறு அல்லது பதினேழு ஆண்டுகளாகின்றன.
✽❤❤✽
அப்போதெல்லாம் ஒரு பிள்ளை பதினாறு வயதில்,
தனது கல்வியைப் பூர்த்தி செய்யும் வண்ணம்,
நம் பெரியோர்கள் கல்வித்திட்டத்தை அமைத்திருந்தார்கள்.
அங்ஙனம் செய்வதில் பல நன்மைகள் அடங்கியிருந்தன.
அவற்றுள் முக்கியமான இரண்டைச் சொல்கிறேன்.
✽❤❤✽
ஒன்று.
நமது புத்தி என்பது இன்றைய கணினியின் ‘ஹார்ட் டிஸ்கைப்’ போன்றது.
கணினியில் ‘ஹார்ட்டிஸ்க்’ வெறுமையாய் இருக்கையில்,
விடயங்களைப் பதியும் ஆற்றலும், வேகமும் அதற்கு அதிகமாக இருக்கும்.
அதனுள் விடயங்கள் ஏற ஏற,
விடயங்களை உள்வாங்கும் சக்தியும், வேகமும்,
அதற்குக் குறைந்து கொண்டேபோகும்.
அதேபோலத்தான் நமது புத்தியும்.
இளமைக்காலத்தில் அறிவைப் பதிவு செய்து கொள்ளும் ஆற்றலும், இடமும்,
புத்தியினுள் அதிகம் இருப்பதால்,
அக்காலத்தில் அதனுள் நம்மால் ஏற்றப்படும் விடயங்கள்,
இலகுவாயும், வேகமாயும் அதனுள் பதிவாகிவிடுகின்றன.
காலம் ஆக ஆக நம் ஐம்பொறிகளின் வாயிலாகவும்,
தேவையற்ற பல விடயங்கள் ஏறி ஏறி,
நம் புத்தியில் பதிவாகிவிடுவதால்,
வயது ஆக ஆக,
தேவையானவற்றை உள்வாங்கும் சக்தியும், வேகமும்,
மெல்ல மெல்ல குறைந்து போகின்றன.
அதனால்த்தான் முடிந்த அளவு இளமைக்காலத்தை,
கல்விக்காய்ப் பயன்படுத்துவதே சரியென,
நம் பெரியவர்கள் முடிவு செய்து,
மூன்று வயதில் தொடங்கி பதினாறு வயதிற்குள்,
கல்வியை முடித்துவிடும் வண்ணம்,
தம்வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டனர்.
✽❤❤✽
இன்று நாம் என்னென்னவோ காரணங்கள் சொல்லி,
கல்விக்கான வயதெல்லையை கிட்டத்தட்ட,
இருபத்தைந்து வரை நீட்டித்துக் கொண்டோம்.
அதனால் தேவையற்ற பல விடயங்கள் நம் புத்தியில் பதிவான பின்பே,
தேவையான விடயங்களை உட்புகுத்த வேண்டியிருக்கிறது.
கல்விக்கான பொருத்தமான காலத்தை வீணே விட்டுவிட்டு,
காலம் கடந்த பின்பு தேவையற்று சிரமப்பட்டுத் திரிகிறோம்.
அதுபற்றி சற்று விரிவாகவே சொல்கிறேன்.
✽❤❤✽
எனக்கு தற்போது ஐம்பத்தொன்பது வயதாகிறது.
எனது புத்தியில் இதுவரை முழுமையாக அல்லது பகுதியாக,
ஒரு பத்தாயிரம் சினிமாப் பாடல்களேனும் பதிவாகியுள்ளன.
இசை தொடங்கியதுமே இதுதான் அப்பாடல் என,
என்னால் சொல்லமுடிகிறது.
இப்பாடல்களை நான் இருந்து பாடமாக்கவில்லை.
வெற்றிடமாக இருந்த எனது புத்திப்பகுதிகளால்,
கால ஓட்டத்தில் தேவையற்று உறிஞ்சப்பட்டவை அவை.
அவற்றால் எனக்கு எந்த அறிவுப்பயனும் இல்லை.
ஆனால் என் புத்தியின் வெற்றிடங்களை அவை நிரப்பிவிட்டதால்,
இன்று எனக்குத் தேவையானவற்றைக் கூட,
என்னால் புத்தியில் பதிவு செய்ய முடியாதிருக்கிறது.
✽❤❤✽
இளமைக்காலத்தில் கல்விக்கான எனது நேரத்தை,
நான் அதிகப்படுத்தியிருந்தால்,
எனக்குத் தேவையான கல்வி விடயங்களை,
எனது புத்தியின் வெற்றுப்பகுதிகள் உறிஞ்சியிருக்கும்.
சினிமாப்பாடல்கள் போன்ற,
தேவையற்ற விடயங்கள் நிரப்பிய எனது புத்தியின் அறிவுப்பகுதிகளை,
எனக்குத் தேவையான அறிவு விடயங்கள் தமதாக்கியிருப்பின்,
இன்று நான் பெரிய அறிஞனாகியிருப்பேன்.
கல்விக்காலத்தை நீட்டிக்க நீட்டிக்க வரும்,
தேவையற்ற கால இடைவெளிகளில்,
வேண்டாத விடயங்கள் பல,
புத்தியில் நம்மை அறியாது வீணே பதிவாகி,
புத்தியின் பதிவுப் பகுதிகள் நிறைந்து விடுவதால்,
கற்க வேண்டிய விடயங்களைக் கற்பதில்,
இன்று எனக்கு இடர் உண்டாகின்றது.
அதனால்த்தான் நம் தமிழ் முதாதையர்கள்,
'இளமையிற் கல்வி சிலையில் எழுத்து’ என்று,
பழமொழியால் வலியுறுத்தினர் போலும்.
✽❤❤✽
கல்விக்காலத்தை நீட்டிப்பதால் வரும் இடர்களில் ஒன்றைச் சொன்னேன்.
இன்னொன்றையும் சொல்கிறேன்.
பன்னிரண்டு வயது தாண்டத் தொடங்கையில்தான்,
ஒரு பிள்ளைக்குக் காம உணர்ச்சி அறிமுகமாகிறது.
அவ் உணர்ச்சி அப்பிள்ளையின் சமநிலையைக் குழப்பும் என்பது நிச்சயம்.
புதிதாய் அறிமுகமான இயற்கையேயான அவ் உடல்கிளர்ச்சியை எதிர்கொள்ள,
பிள்ளைகள் சற்று சிரமப்படவேண்டியிருக்கும்.
அதனால் அக்காம உணர்ச்சி அறிமுகமாகும் முன்பு,
ஒரு பிள்ளை தனது அடிப்படைக் கல்வியைப் பூர்த்தி செய்துவிடுவது உகந்தது.
அன்றேல் சிந்தை ஒருப்படாது,
கல்வியில் மனம் செலுத்த அப்பிள்ளை சிரமப்படவேண்டியிருக்கும்.
இதுவும் கல்விக்காலத்தை வேகப்படுத்துவதன் தேவைகளில் ஒன்றாம்.
✽❤❤✽
இன்றைய நவீன அறிவியலாளர்களும்,
பதின்மூன்று முதல் பத்தொன்பது வரையிலான வயதினரை,
‘டீன்ஏஜ்’ பிரிவினர் என்று வேறுபடுத்துகின்றனர்.
ஆங்கில எண் வரிசையில்,
பதின்மூன்று முதல் பத்தொன்பது வரையிலான எண்கள்,
‘டீன்’ என்ற ஓசையோடு முடிவதால்,
இவ்விரு வயதிற்கும் இடைப்பட்டோரை,
‘டீன்ஏஜ்’ பருவத்தினர் என்றனர் அவர்கள்.
இப்பருவத்தினர் தம் உடலில் புதிதாய் ஏற்படும் காம அறிமுகத்தால்,
குழப்பமான மனநிலையைக் கொண்டிருப்பர் என்பது,
அவர்தம் முடிவுமாம்.
இவ் உண்மையை ஒத்துக்கொண்ட பின்பும்,
அக் குழப்ப காலத்தின் பெரும்பகுதியைக் கல்விக்காக்கும்,
இன்றைய அறிஞரை விட,
அந்தப் பருவத்தின் பெரும்பகுதியைத் தவிர்த்து,
கல்விக்காலத்தை முற்படுத்திய நம் அறிஞர்கள்,
நிச்சயம் பெரியவர்களேயாம்.
✽❤❤✽
இதைத்தவிரவும் ஒன்றைச் சொல்லவேண்டியிருக்கிறது.
இல்லறம் சிறக்க தம்பதியர்களுக்கிடையேயான,
‘செக்ஸ்’ உறவும் மிக அவசியம் என்பதை,
இன்றைய அறிவியாளாலர்கள் ஒத்துக் கொள்கின்றனர்.
ஆரம்ப இளமைக்காலத்தில் ‘செக்ஸ்’ உணர்ச்சி,
எவரிடமும் கூர்மை பெற்றிருப்பது வெளிப்படை.
வயதாக வயதாக அவ் உணர்ச்சியில்,
மந்தத்தன்மை ஏறிக்கொண்டே போவது இயற்கை.
அன்றைய நம் மூதாதையர்கள்,
இயல்பாக ‘செக்ஸ்’ உணர்ச்சி கூர்மை பெற்றிருந்த ஆரம்ப இளவயதை,
இளையோரின் திருமண வயதாக்கி,
இயற்கையோடு அவர்தம் வாழ்வைப் பொருத்தினர்.
இன்றைய அறிஞர்களோ இல்லறத்திற்குத் தேவையான அவ் உணர்ச்சி,
கூர்மை பெற்றிருக்கும் இளமைக் காலத்தை வீணே தள்ளிப்போட்டு,
அவ் உணர்ச்சி மங்கத் தொடங்கும்,
முதிர் இளமைக்காலத்தில் இல்லறத்தை விதிப்பதால்த்தான்,
இன்றைய திருமணங்கள் பல உடைந்து போகின்றன.
✽❤❤✽
இயற்கையின் இயல்பறிந்து நம் பெரியவர்கள்,
முதிராத மனமும், முதிர்ந்த காமமும் கொண்ட,
இளமைக் காலத்தை திருமணத்திற்குரிய காலமாக்கி,
கல்வியை அதற்கு முன்பாக உட்செலுத்தி,
இல்லறமும், கல்வியும் ஒருங்கே சிறக்க வழி செய்தனர்.
✽❤❤✽
இன்றைய நவீன மருத்துவ உலகத்தார்.
முப்பது வயதைக் கடக்கும் போது,
ஒரு பெண்ணின் கர்ப்பம் தரிக்கும் ஆற்றல்,
அரைவாசியாகிறது என்ற உண்மையை ஒத்துக்கொள்கின்றனர்.
சில காலத்தின் முன் இந்திய அரசு,
திருமண வயதெல்லையைக் குறைப்பதற்காக,
பல நீதியரசர்களைக் கொண்ட,
ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்திருக்கிறது.
இவையெல்லாம் நம் மூதாதையர்தம் தீர்மானம்,
சரியென்பதற்கான சான்றுகளாம்.
✽❤❤✽
இவை தவிரவும் திருமணவயதை முன் நகர்த்துவதில்,
மற்றொரு உலகியல் பயனும் உண்டு.
எவருக்கும் இளமைக்காலமே வலிமைக்குரிய காலமாம்.
வயது முதிர முதிர உடலில் சோர்வு ஏற்படுவது இயல்பே.
அதனால்த்தான் அரச வேலைகளில் கூட,
ஐம்பதிற்கும் அறுபதிற்குமான வயதின் இடைப்பகுதியில்,
ஓய்வுபெற அனுமதிக்கின்றனர்.
அவ் வயதின்பின் வலிமையாய் இயங்குவது எவர்க்கும் கடினமாம்.
✽❤❤✽
பிள்ளைகளின் இளமைத் தடுமாற்றக்காலத்திலும்,
உயர்கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் என்பதான,
முக்கியமான வாழ்க்கைத் திருப்பங்களிலும்,
பெற்றோர் வலிமையுடன் இருந்து,
அவர் தமக்கு வழிகாட்டுதல் அவசியமாம்.
✽❤❤✽
இவையெல்லாம் இருபதுகளில் திருமணம் செய்யும் பெற்றோருக்கு,
இயல்பாய் வாய்க்கும் தகுதிகளாய் அமையும்.
முப்பத்தைந்தைக் கடந்து திருமண வாழ்வில் புகுவோர்,
தமது ஓய்வுக்காலத்திலேயே,
பிள்ளைகளின் இளமை வாழ்வைச் சந்திக்கவேண்டியிருக்கிறது.
அதனால் உடல்ச்சோர்வு, மனச்சோர்வு, அறிவுச்சோர்வு என்பவை தாக்க,
இவர்கள் புதிய தலைமுறையினரை,
திருப்தி செய்ய இயலாதவர்களாய்ப் போய்விடுகின்றனர்.
✽❤❤✽
நீ சொல்வதெல்லாம் சரியாகவே இருக்கட்டும்.
ஆனால் இன்றைய சூழ்நிலையில்,
இளையோர்க்கு பதினாறு வயதிற்கு முன் கல்வியைப் புகுத்திவிடமுடியுமா?
அது நடைமுறைக்குப் பொருந்தாத விடயம் என்பீர்கள்.
நிச்சயம் இல்லை.
இன்றைய நிலையிலும் அதனைச் சாதிக்கலாம் என்பதே எனது பதில்.
எப்படி என்கிறீர்களா?
சொல்கிறேன்.
✽❤❤✽
இன்றைய நவீன கல்விமுறையில்,
இளையோர்தம் இளமைக்காலம் வீணே செலவாக்கப்படுகிறது.
இன்றைய கல்வித்திட்டத்தின்படி,
ஆறு வயதிலிருந்து இருபத்திரண்டு வயது வரையிலான காலத்தை,
தம் கல்விக்காய் இளையோர்கள் செலவழிக்கின்றனர்.
அதாவது தம் ஆயட்காலத்தின் பதினாறு வருடங்களை,
அவர்கள் தம் கல்வித்தேடலுக்காய் விரயம் செய்கின்றனர்.
பரீட்சை முடிவுக்காகக் காத்திருக்கும் காலம்,
‘ஸ்ரைக்’ என்பவையான வேறு சில விடயங்களையும் சேர்த்தால்,
அக்காலம் இன்னும் ஓரிரு வருடங்கள் அதிகமாகக்கூட ஆகலாம்.
✽❤❤✽
மேற் சொன்ன பதினாறு வருட காலங்களில்,
கல்விக்காய் இன்றைய இளையோர் செலவழிக்கும் நேரத்தை,
பின்வருமாறு கணிக்கலாம்.
❥❥ ஒரு வருடத்தில் விடுமுறைக்காலமாக அவர்கள் செலவழிக்கும் நேரம் பின்வருமாறு.
ஒருமாதத்தில் நான்கு சனி, ஞாயிறு தினங்கள்.
இவைதவிர விஷேட விடுமுறை நாட்கள் என்று குறைந்தது ஒருநாள்.
இப்படி ஒரு மாதத்தில் ஒன்பது நாட்கள் இவர்களுக்கு விடுமுறை நாட்களாகின்றன.
இதன்படி ஒரு வருடத்தில் நூற்றியெட்டு நாட்கள் அவர்களுக்கு விடுமுறையில் கழிய,
அவர்கள் வருடத்தில் இருநூற்றி ஐம்பத்தியேழு நாட்களையே கல்விக்கு பயன்படுத்துகின்றனர்.
❥❥ இதிலும் தவணை விடுமுறைகள் என்ற பெயரில் இரண்டு மாதங்கள் விடுமுறையாக அவர்களது கல்விக்காலம் மேலும் குறைந்து நூற்றித்தொண்ணூற்றேழு நாட்களாகின்றது.
❥❥ இவை தவிர கல்வி நாட்களிலும் கூட ஒவ்வொரு தவணையிலும் விளையாட்டுப்போட்டி, மொழியறிவுப்போட்டி, சுற்றுலா என இவர்களது கல்விநாட்களில் இன்னும் சில தினங்கள் வீணாகின்றன. இதற்காக தினமும் அவர்கள் செலவழிக்கும் மணித்தியாலங்களைக் கூட்டிப்பார்த்தால், முழுமையாக அதற்கும் குறைந்தது ஏழு நாட்களாவது செலவாவது நிச்சயம். அதனையும் கழித்துப் பார்த்தால் அவர்களது கல்வி நாட்கள் நூற்றித்தொண்ணூறு நாட்களே.
❥❥ இந்த நூற்றித்தொண்ணூறு நாட்களிலும் அவர்கள் முழு நேரத்தையும் கல்விக்குச் செலவழிப்பதில்லை. சராசரியாக அவர்களது கல்லூரி நேரம் ஆறு மணித்தியாலங்களே. அதிலும் இடைவேளை நேரமான பதினைந்து நிமிடங்களுடன், வழிபாடு, ஆசிரியர் வரா நேரம் என்பவற்றையும் கழித்தால், இன்னும் ஒரு அரைமணிநேரம் அதில் குறையும். ஆகவே ஒருநாளில் அவர்கள் கல்வி கற்கும் சராசரி நேரத்தை ஐந்தரை மணித்தியாலங்களாகவே கொள்ளவேண்டும்
❥❥ அதன்படி அவர்கள் ஒருவருடத்தில் கல்விக்காய்ச் செலவழிக்கும் காலம் 190 X 5 = 950 மணித்தியாலங்களாம். அந்நேரத்தை நாட்கணக்கில் பார்த்தால் முப்பத்தொன்பது நாட்களே ஆகின்றன. எனவே மொத்தத்தில் ஒருவருடத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதத்தையே இன்றைய இளையோர் தம்கல்விக்காய் செலவழிக்கின்றனர்.
❥❥ தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் நேரத்தை இளையோரது கல்வி நேரத்தில் சேர்க்கவேண்டுமல்லவா? என்ற கேள்வி பிறக்கும். தனியார் கல்வி நிறுவனத்தில் செலவழிக்கும் நேரம் என்பது படித்ததை மீளப்படிக்கவே செலவிடப்படுகின்றது. இஃது இன்றைய நம் கல்விமுறையின் மற்றொரு மாபெரும் தவறு. ஒரு சிலருக்கே தேவைப்படும் இம் மீளக் கற்பித்தல் முறையை அனைவருக்குமாக்கி நாம் தவறிழைக்கிறோம். தனியார் கல்வி நிறுவனத்திற்குச் செல்லாமல் விடுவதை ஒரு குற்றமாகவே கருதும் அளவிற்கு இன்றைய சமூக மனநிலை வளர்ந்திருக்கிறது. ஒன்று கல்லூரியில் முறையாய்க் கற்கவேண்டும். அன்றேல் தனியார் நிறுவனத்தில் கற்க வேண்டும். ஒன்றையே கற்க இரண்டு இடத்தில் நேரம் செலவழிப்பதென்பது நேர விரயமாகவே கருதப்படவேண்டிய ஒன்றாகும்.
&