எனவே கம்பன் சொன்ன வழி வந்த முதலமைச்ர் ஒரு கட்டத்தி...
எனவே கம்பன் சொன்ன வழி வந்த முதலமைச்ர் ஒரு கட்டத்தில் இன மான உணர்வில் மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ என்ன பாணியில் உன்னை நம்பியோ அரசியலுக்கு வந்தேன் என்கின்ற பாணியில் அபிவிருத்தி தளத்தில் இருந்து அரசியல் தளத்துக்கு மாற நிர்ப்பந்திக்கப்பட்டார். இனத்தின் தேவை அதுவாகவே இருந்தமையால் அவரது நிலை தேசிய நிலை கடந்து சர்வதேச நிலை வரை வரவேற்கப்பட கடமை மறந்த கர்ம வீரர்கள் கடுப்பாகினார்கள். அத்துடன் முதலமைச்சரின் முடிவை தமக்கு சாதகமாக மாற்றி அரசியல் லாபம் தேட விளைந்தவர்கள் அவரைக் கூட்டுச் சேர்த்தார்கள். தலைவராக்கினார்கள். அப்போதும் கூட முதலமைச்சரின் கூட்டமைப்பு விசுவாசத்தை அறிந்த அவர்கள் இணைத்தலமை தான் கொடுத்தார்கள். இந்த நிலமை முதலமைச்சரை தமிழ் மக்கள் மத்தியில் தேசிய தலைவர் எனும் நிலைக்கு உயர்த்த தொடங்கியது. இது கம்ப வாரிதி சொல்லும் சம்சுங் அன் கோவுக்கு குறிப்பாக சும்முக்கு தனது அரசியல் கனவு குறித்த அச்சத்தை தந்தது. தனக்குப் பின் சும் தான் என சம் சர்வதேசத்துக்கு கைகாட்ட விக்கி இடையில் நுழைய சர்வதேசமும் அதனை ஏற்க சும் கனவு சிதையும் என கடுப்பானார்.