'நியூ ஜப்னா' கம்பவாரிதியின் மீது வசை !
அரசியல்களம் 25 Dec 2015
நேற்றைய தினம் “நியூ ஜப்னா” (NewJaffna) எனும் இணையத்தளம் கம்பவாரிதியின் கட்டுரைக் கருத்துக்களை விட்டுவிட்டு, அவரை தனிப்பட்ட வகையில் பொய்யாய் இழிவு படுத்தி, தனது வழமையான கீழ்த்தரத்தோடு ஒரு கட்டுரையைப் பிரசுரித்துள்ளது. அதனை நாம் கம்பவாரிதியின் பார்வைக்குக் கொண்டு வந்தோம்.
அவர் அதைப் படித்து விட்டு, “நான், என்னை இழிவு செய்தால் ஒழிய, வேறு ஒருவராலும் என்னை இழிவு செய்ய முடியாது. எனது தரத்தை உலகம் அறியும். அவர்கள் தரத்தையும் உலகம் அறியவேண்டும். எனவே உகரத்தின் தரம் தாழ்வது பற்றி கவலைப்படாமல் அவர்கள் செய்தியையும் பிரசுரியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க இச்செய்தி இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.
காவி உடுத்து, கம்பனின் காதல் பேசி பிழைக்கும் ஜெயராஜுக்கு அரசியல் எதற்கு?
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கும், கம்பவாரிதி இ. ஜெயராஜுக்கும் இடையில் ஒரு மாபெரும் அரசியல் யுத்தம் விஷ்வரூபம் பெற்று நடந்து வருகின்றது.
ஆயினும் இந்த அரசியல் யுத்தம் கம்பன் கழகத்தின் பின்னணியில் விக்னேஸ்வரனுக்கும், ஜெயராஜுக்கும் இடையில் ஆரம்பத்தில் தோன்றிய தனிப்பட்ட பிணக்கின் முற்றிய நிலையே ஆகும்.
வேண்டாப் பெண்டாட்டி தொட்டால் குற்றம், தொடா விட்டாலும் குற்றம் என்பது போல விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளரானது முதலே இவரை கம்பவாரிதி கண்டபடி தாக்கி வருகின்றார்.
இப்பொழுது உகரம் என்கிற இணையத் தளத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரனை தாக்குகின்றமைக்கு என்றே கம்பவாரிதி ஆரம்பித்து உள்ளார் என்று விளங்குகின்றது.
கம்பவாரிதி இ. ஜெயராஜ் காவி உடை அணிந்தவர். ஆனால் சிருங்கார சுவையை பேசுகின்ற கம்பராமாயணத்தை வாழ்வாதாரமாக கொண்டு இருக்கின்றார். காவி உடைக்குள் காதல் இரசிகன்.
காவி உடை அணிந்து இலக்கிய பணி ஆற்றுகின்ற ஜெயராஜுக்கு அரசியல் எதற்கு? இவர் சில வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சிக்காக இவருக்கே உரித்தான பாணியில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் மிலிந்த மொறகொடவை ஆதரித்து பேசினார்.
வட மாகாண சபையின் முதலமைச்சராக இவருக்கு இப்போது பிடிக்காத விக்னேஸ்வரன் இருப்பதால் விக்னேஸ்வரனையும், வட மாகாண சபையையும் பிரேக் இல்லாத சைக்கிள் போல அறுத்துக் கொண்டே இருக்கின்றார்.
ஒரு காலத்தில் நீதிமன்ற சேவைக்குள் மட்டுப்பட்டு நின்று கொண்டிருந்த விக்னேஸ்வரனை அகில இலங்கை கம்பன் கழகத்தின் மூலம் வெளிக் கொணர்ந்தவர் இதே கம்பவாரிதிதான். அகில இலங்கை கம்பன் கழகத்தின் பெருந்தலைவர் என்கிற மரியாதை விக்னேஸ்வரனுக்கு வழங்கி கௌரவித்தார். மட்டும் அல்லாமல் கம்பன் விழாக்களில் மங்கள விளக்கேற்றுகின்ற பெருமையையும் கொடுத்து இருந்தார்.
கம்பன் கழகத்தின் உள்வீட்டு இரகசியங்கள் விக்னேஸ்வரனுக்கு தெரிய வந்ததை அடுத்து குறிப்பாக விக்னேஸ்வரன் உயர் நீதிமன்ற நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றமையை தொடர்ந்து கம்பவாரிதியின் சுய உருவம் வெளிப்பட்டு உள்ளது.
ஏனைய விடயங்களை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு பார்த்தாலும் முதலமைச்சர் விக்னேஸ்வரனை விமர்சிக்கின்ற அருகதை, தூய்மை கம்பவாரிதிக்கு கிடையவே கிடையாது.
கொழும்பின் மிக பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் ஜெயராஜ். கம்பனும், கம்பன் கழகமும் இவருக்கு கொடுத்த வரம் இது. இதனால் இவரின் பணத்தை எவரும் சட்ட ரீதியாக கேள்விக்கு உட்படுத்த முடியாது.
கம்பன் விழா பேச்சு ஒன்றில் இவர் சொன்னது போல கொழும்பில் கடந்த இரு தசாப்த காலத்துக்கும் மேலாக எந்தவொரு தொழிலும் பார்க்காமல் இருந்த இடத்திலேயே சாப்பிடுகின்ற இராஜ யோகம் உடையவர்.
பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பது என்பது மிகவும் கடினமான காரியம். ஏனென்றால் சீதனம் கொடுக்க வேண்டும். அதுவும் யாழ்ப்பாணத்தவர்கள் என்றால் நிலைமை இன்னும் மோசம். ஆனால் சொந்த சகோதரிகள் எவருக்கும் ஒரு சதம்கூட சீதனம் கொடுக்காமல் திருமணம் நடத்திய கில்லாடி ஜெயராஜ். இவருடைய சிஷ்ய பிள்ளைகளையே சகோதரிகளுக்கு கட்டி வைத்தார்.
இவர் காலையில் வெள்ளவத்தை கடற்கரையில் நடைப் பயிற்சி செய்கின்றமை வழக்கம். அப்போது இவ்வீதியால் நடந்து போகின்ற யுவதிகளின் மார்பகங்களை நோக்கி இவரின் கண்கள் பார்க்காமல் பார்க்கும் என்று பலரும் கூறுகின்றனர்