ஹிந்து தர்மம் எப்படி உருவானது?இன்றிலிருந்து 5000ம...

29 Apr 2016

ஹிந்து தர்மம் எப்படி உருவானது?
இன்றிலிருந்து 5000ம் வருடங்களுக்கு முன்னாள்..இந்த உலகத்தில் பாரத தேசம் மட்டும் இருந்தது..அங்கே இப்பொழுது டெல்லி என்றழைக்கப்படும்,இடத்தில் யமுனை நதிக்கரை ஓரத்தில் சூர்யவம்சத்து இளவரசன் ஸ்ரீகிருஷ்ணன்..தனது சத்யுக ராஜ்யத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் வளர்ந்து கொண்டிருந்தான்..தனது இளம் பிராயத்தில் தன்னுடைய ராஜ்யத்திற்கு அருகில் இருந்த மற்றொரு ராஜ்யத்தில் இருந்த ராதை என்ற ஒரு அழகிய இளவரசியை கண்டு மனதை பறிகொடுத்தான் ஸ்ரீ கிருஷ்ணன்.. பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரின் மனமும் ஒருமனமாகி திருமணமானது.. திருமணம் புரிந்த ஸ்ரீ கிருஷ்ணர் தேசத்தின் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்..அன்றிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணர் என்ற பெயர் மாறி ஸ்ரீ நாராயணன் என்றும்..ஸ்ரீ ராதை என்ற பெயர் மாறி ஸ்ரீ லக்ஷ்மி என்றும் அழைக்கப்பட்டது.. இவர்கள்தான் உலகத்தின் முதல் மகாராஜா, மகாராணி..இவர்கள் ஆட்சி புரிந்த இடமே வைகுண்டம் என்ற சுவர்க்கம்..இந்த சுவர்க்கத்தில் வருவதற்குத்தான் எல்லா தர்மங்களும் போட்டா..போட்டி..போடுகின்றன.. இங்கே ஸ்ரீ நாராயணருக்கு தான் ஒரு மதத்தை சேர்ந்தவர் என்றெல்லாம் தெரியாது.. ஏனென்றால் பிற மதங்கள் அங்கே இல்லை.. இப்படி ஆரம்பித்த ஸ்ரீ நாராயணரின் ஆட்சியில் அவரது மகன் இரண்டாம் நாராயணன் என்றும்.. இரண்டாவது நாராயனரின் மகன் 3ம் நாராயணன் என்றும், வம்சமாக வரிசையாக 8 நாராயணர்கள் வருகின்றனர்..இந்த சூர்ய வம்சத்துக்கு பிறகு வருவது ஸ்ரீ ராமச் சந்திரனின் ஆட்சி..இதே போல வம்ச வழியாக 12 ராம்-சீதைகள் திரேதா யுகத்தில் வருகின்றனர்..ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்..கிருஷ்ணரின் ஆட்சியில் கம்சனோ.. ராமரின் ஆட்சியில் ராவணனோ கிடையாது.. ஒருவேளை.. இவர்கள் இருந்தால் அதை சுவர்க்கம் என்று அழைக்க முடியுமா..?!அங்கே ராமர் வனவாசமும் செல்லவில்லை.. கிருஷ்ணர் வெண்ணை திருடி உண்ணவுமில்லை..ஏனென்றால் சுவர்க்கத்தில் யாருக்கும் தீய குணங்களே இல்லை..இந்த 5000ம் வருடங்களில் 1250 வருடங்கள் சத்யுகம்.. 1250 வருடங்கள் திரேதாயுகம்..2500 வருடங்கள் முடிய அங்கே தேவதைகளாக வாழ்ந்த 33 கோடி பேர் தன்னுடைய சக்திகளை இழக்க ஆரம்பிகின்றனர்..அப்பொழுது உலகில் பூகம்பங்களும்..கடல் பொங்கியதால் ஏற்பட்ட சீற்றங்களினாலும் அவர்களுடைய நினைவு சின்னங்கள் அழிந்தது.. அதை லெமூரியா கண்டம் என்று சரித்திரம் இன்றும் அழைக்கின்றது..மற்ற தர்மத்தை சேர்ந்தவர்கள் மெல்ல..மெல்ல..வர..துவாபரயுகம் ஆரம்பம் ஆனது.. தெய்வீகத் தன்மையை இழந்த 33 கோடி பேர்கள் பிற தர்மங்களுக்கு சென்று தன்னை மாற்றிக் கொண்டார்கள்..இவர்களே பிற்பாடு அந்த தர்மங்களை சேர்ந்தவர்களாக தன்னை அறிவித்துகொண்டார்கள்.. ஆனால்.,ஒரே ஒருவருக்கு மட்டும் ஜோதிவடிவமாக இறைவன் சிவனின் காட்சி கிடைக்க அவர் சோம்நாத் என்ற தங்க கோவிலை முதன் முதலில் கட்டி அங்கே வைரலிங்கத்தை ஸ்தாபித்தார்.. அவர்தான் விக்ரமாதித்ய மகாராஜா..இவர் மூலமாக பக்தி ஆரம்பித்தது என்றால்.., இவர்தான் ஹிந்து தர்மத்தை ஆரம்பித்து வைத்தவர் என்றும் கூறலாம்.. இவரை பின்பற்றி மற்ற அரசர்களும் கோவில்களை உருவாக்க.. அங்கிருந்த மக்களும் அதையே வழிபட ஆரம்பித்தார்கள்.. ஒன்றன் பின் ஒன்றாக பிற தெய்வங்களும் வழிபட ஆரம்பித்த மக்கள் 33 கோடி தெய்வங்களையும் மெல்ல மெல்ல வழிபட ஆரம்பித்தனர்.. இவர்களை வழிபட்ட மக்கள் தன்னுடைய தெய்வீக தன்மையை இழந்து விட்ட காரணத்தால் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் என்று அழைத்துக் கொள்வதற்கு பதிலாக தன்னைஹிந்து தர்மம் என்று தன்னை அழைத்துக்கொண்டனர்.. பிறகு..5000ம் வருடங்களில் 3750 வருடங்கள் கழித்து கலியுகம் ஆரம்பமானது.. துவாபர யுகத்தில் ஆரம்பமான தீய குணங்கள்.. கலியுகத்தில் இன்னும் அதிகமாக பெருகியது.. இதைதான் கலிமுத்தி விட்டது என்றும் இந்த நேரத்தில் கடவுள் அவதரித்து தர்மத்தை படைப்பார் என்றும் எல்லா தர்மங்களும் கூறிக்கொண்டு வந்தன.. ஆம்,யார் ஜோதிவடிவமாக காட்சிகொடுத்தாரோ அந்த சிவபெருமான் அவரே உலகின் ஒரே தெய்வம் இவரையே மற்ற தர்மங்கள் யேகோவா என்றும் அல்லா என்றும் பரமபிதா என்றும் அழைக்க ஹிந்துக்கள் பரசிவம்..பரமேஸ்வரன் என்றும் அழைகின்றனர்..இவர் உடலற்ற ஜோதியாவார் உலகிற்கு ஒரே இறைவன் ஆவார்..இவர் மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆட்சியை கொண்டு வந்து ஆதி சனாதன தர்மத்தை பூமியில் படைக்கின்றார்..இதுவே "யதா யதாகி தர்மஸ்ய" என்று அழைக்கப் படுகின்றது..இப்பொழுது "ராஜஸ்வ அஸ்வமேத அவினாஷி ருத்ர ஞானயாகத்தை" இறைவன் சிவன் இந்த பூமியில் படைத்துள்ளார் எந்த தீய குணங்களால் சுவர்க்க ராஜ்யத்தை நாம் இழந்தோமோ அதை இந்த யாகத்தில் அர்ப்பணித்து மீண்டும் தர்மம் நிறைந்த ஒரே ராஜ்யத்திற்கு பயணம் செய்வோம்.

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.