ஐயா, தெளிவும் நிறைவும் வேண்டி ஒரு கேள்வி, பதில் அள...
ஐயா, தெளிவும் நிறைவும் வேண்டி ஒரு கேள்வி, பதில் அளிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
இவ்வளவு விலா வாரியாக நிகழ்வுகளைப் பதிவிட்டிருக்கும் நீங்கள் திரு விக்னேஸ்வரன் கம்பன் கழகத்திலிருந்து ஒரு கருத்து வேறுபாடு காரணமாக விலகியதாக எழுதியுள்ளீர்கள். அந்த கருத்து வேறுபாடு என்ன என்பதைத் தெளிவாகவும் விளக்கமாகவும் வாசகர்களுக்கு அறியத் தர முடியுமா?
உங்கள் எழுத்த்குக்களின் நம்பகத் தன்மையை வலுப்படுத்த அந்தக் காரணத்தைத் தெளிவு படுத்துவது அவசியம். உங்களுக்கும் முதலமைச்சருக்குமிடையில் இருக்கும் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே நீங்கள் அவரைத் தாக்கி வருவதாகவும் சிலர் கூறுகின்றனர். எனவே நீங்கள் 'ஒரு கருத்து முரண்பாடு காரணமாக விக்னேஸ்வரன் விலகினார்' என்று கூறியதை சற்று விரிவு படுத்தி தெளிவு படுத்த முடியுமா? நீங்கள் பிரசுரித்துள்ள அவரது கடிதத்தில் மிகக் கண்ணியமாக 'தனிப்பட்ட காரணங்களுக்காக' பதவி விலகியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இது நீங்கள் முன்னதாக அவர் பற்றி எழுதிய 'அவர் ஒரு சண்டைக் காரர்', 'ஈகோ பிடித்தவர்' போன்ற பதிவுகளுடன் ஒத்து வருவது போல் தெரியவில்லை. மேலும் அந்த காரணம் என்ன என்பதைத் தெளிவு படுத்தாமல் விட்டால் அது குறித்த ஊகங்களும் பல விதமாக எழலாம். இவற்றை நேர்மையுடன் நிவர்த்தி செய்வீர்கள் என நம்புகின்றேன்.