அம்மே! நினைத் தோற்றனமே!

அம்மே! நினைத் தோற்றனமே!
(திருமதி அநுத்தமா ஜெய்ராம் அவர்கட்கான அஞ்சலி)
 
 
வாழ்த்துப் பாக்கள் சூடிடும் வயதில்
வருத்தப் பாவைச் சூடிய பாவை
ஆழ்த்துகின்ற துயர்இது மறக்க
ஆற்றுமோ? கொடு அந்தகக் கூற்றன்
கீழ்த்தரங்களால் எங்களின் கிளியைக் 
கிடத்தினன் பெருந்துயில் அதனில்,
தாழ்த்துகின்றனன் கம்பனும், அரசில்
தாழ்ந்திடாத தன்பெருந் தலையை.
 
கம்பன்பணியில் தனைக்கரைத் துழைக்கும்
கணவனார்க்குக் கைகொடுத் திருந்த
செம்பொன்னவளே! இச்சிறு வயதில்
சிறகடித்துப் பறந்தது என்னே? 
தம்பணி குடும்பம் தம்சுற்றத்தார்
தாம்தாம் என்றே வாழ்கிற உலகில்
நும்பணி தமிழ்தான் என நோற்றவளே!
நொடியில் அம்மே! உனைத் தோற்றனமே!
✿✿✿
- அகில இலங்கைக் கம்பன் கழகத்தினர்
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.