ஐயா, நீங்கள் இதிகாசங்களுடன் நன்கு பரிச்சயமானவர்....

03 Dec 2016

ஐயா, நீங்கள் இதிகாசங்களுடன் நன்கு பரிச்சயமானவர்.
நெடுங்காலமாக எனக்குள்ள இரண்டு சந்தேகங்கள்.
*
ஏன் கண்ணபரமாத்மா பாண்டவர்களிடம்
“டேய் பசங்களா என்னைப்போய் உங்களுக்காக கௌரவர்கள் கிட்டபோய் ஐந்து ஊர்களோ ஐந்து வீடுகளாவது கொடுங்கடா என்றெல்லாம் கேட்டுக் கெஞ்ச வைக்காதீங்கடா …………… கிழக்கால அவுஸ்திரேலியா, மேற்கால அமெரிக்கா, கனடா கண்டமெல்லாம் சும்மாதான் தரிசாய்க்கிடக்கு, இவங்ககூட மல்லுக்கு நிக்கிறதவிட்டு வாங்கடா நாம அங்கே போய் இஷ்டப்படி இராச்சியங்களை அமைச்சுக்கலாம்” என்று வடமொழியில் சொல்லவில்லை?...
*
பாண்டவர்கள் பரதவர்களின் காலத்தை திரேதயுகம் கிருதகயுகம் என்றெல்லாம் யுகக்கணக்கில் சொல்கிறார்கள். மக்கள் தம் ஆயுதங்களாக 10,000 ஆண்டுகளுக்கு முன் வரை கற்களைத்தான் பாவித்துள்ளனர். ஆக இதிகாசகாலத்தவர்களுக்கு அம்பும் வில்லும் வாளும் வேலும் தேர்களுக்கும் தேவியர்களின் நகைகளுக்கும் உலோகங்கள் எங்கிருந்து கிடைத்தன?
நன்றி.
 

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.