கொழும்பில் இன்று 'சொல்விற்பனம்' கருத்தாடற்களம்

கொழும்பில் இன்று 'சொல்விற்பனம்' கருத்தாடற்களம்
 
 
அகில இலங்கைக் கம்பன் கழக இளநிலை நிர்வாகத்தினர் ‘சொல்விற்பனம்’ எனும் பெயரில் நடாத்தும் கருத்தாடற் களம் நிகழ்ச்சித் தொடரின் 6ஆவது நிகழ்வு  இன்று  22ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 
 

 

 
புதிய தலைமுறையினரின் மத்தியில் பேச்சாற்றலையும் சிந்திக்கும் திறனையும் மேம்படுத்தும்பொருட்டு நடாத்தப்படும் இவ்விழாவினை குறிஞ்சி ஹோம்ஸ் நிறுவன உரிமையாளர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கவுள்ளார். இசையாசிரியர் ஹம்சானந்தி தர்மபாலன் கடவுள் வாழ்த்தினை இசைக்கவுள்ளார். தொடர்ந்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையுரையும், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி.பாஸ்கரா அவர்களின் தொடக்கவுரையும் இடம்பெறும். 
 
தொடர்ந்து,  புகழ்பெற்ற சொற்பொழிவாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களோடு காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் மற்றும் கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் ஆகியோர் நடுவர்களாக இருக்க, இளம்பேச்சாளர்கள் பங்கேற்கும் “எம் இனம் எழுச்சியடைய பெரிதும் மாற்றம் நிகழவேண்டியது எங்கே?” எனும் பொருளிலான பட்டிமண்டபம் நடைபெறவுள்ளது. இவ்வரங்கில் ‘தலைவர்களிடமே!’ என த.கிருஷ் (வர்ணம் எப்.எம்) மற்றும் தெ.ஹர்ஷனும் (மக்கள் வங்கி), 'மக்களிடமே!" என ந.ஐங்கரன் (நீர்ப்பாசனத்திணைக்களம்) மற்றும் கு.அசோக்பரனும் (சட்டக்கல்லூரி) வாதிட உள்ளனர். 
 
  இவ்விழாவில் கலந்து தமிழ்ச் சுவையைப் பருக அனைவரையும் வருகை தரும்படி கம்பன் கழகத்தினர் வேண்டியுள்ளனர்.
 
 
 

 

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.