இப்போ நமக்கு முன் உள்ள கேள்வி அபிவிருத்திப் பாதையி...
இப்போ நமக்கு முன் உள்ள கேள்வி அபிவிருத்திப் பாதையில் இருந்து அரசியல் பாதைக்குள் விக்கி ஐயாவை முழுமையாக இழுத்தவர்கள் யார? அவர்கள் தான் முதல் குற்றவாளிகள். வள்ளுவரின் குறள் செய்தக்க செய்யாமை.... அவர்களுக்கு பொருந்தும். சரியான நுண்மாண் நுழைபுல அறிவற்று இவ் நுணுக்க அரசியலை உணராது உள்ள புத்திஐீவிகள் சமூகத்தின் சாபக்கேடு? உண்மையில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் தரப்பிலிருப்பதால் தப்பிச் செல்வதை விட அவர்கள் யோக்கியமானவர்கள் எனச் சிந்திக்கும் தட்டைத்தனமான சிந்தனை...(இப்போது புதிய சுகாதார அமைச்சரை வரவேற்ற மாகாண சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் முகப்புத்தகத்தில் பிரதேச வாதமற்ற ஊழலற்ற பழிவாங்கலற்ற இலஞ்சமற்ற நேர்மையான தலமைத்துவத்தை எதிர்பார்க்கின்றோம் என வாழ்த்துத் தெரிவித்திருப்பதன் உட்கிடை உணர்க) இவற்றைக் கொண்டோர் தான் குற்றவாளிகள்....