கம்பவாரிதி ஒரு நல்ல கற்பனைவாதி. இதுவரை தமிழ்த் தலை...
கம்பவாரிதி ஒரு நல்ல கற்பனைவாதி. இதுவரை தமிழ்த் தலைவர்கள் கைக் கொண்ட வழிமுறை, செல்கின்ற பாதை சரியானதே. தலைவர்கள் செய்தக்க அல்லாதவற்றை செய்தார்களா? அல்லது செய்தக்கவற்றை செய்யாது விட்டார்களா? 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் எமது தலைவர்களின் சாதுரியத்தால் (1) மகிந்த இராஜபக்சா அரசை அகற்ற சிறிசேனா - ரணில் விக்கிரமசிங்கி இருவரோடும் கை கோர்த்தோம். இது தவறு என்று இற்றைவரை யாரும் கொல்ல முடியாது. (2) பன்னாட்டு சமூகத்தின் ஆதரவை திரட்டி ஐநாமஉ பேரவையில் 2015 இல் ஒரு கனதியான தீர்மானத்தினை நிறைவேற்றினோம். இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை அரசும் அனுசரணை வழங்கியுள்ளது. இதிலிருந்து இலங்கை அரசு விலக முடியாது. கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கம் ஐநாமஉ பேரவையின் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து நழுவ முடியாது. அந்த தீர்மானத்தை அடுத்த 2 ஆண்டுகளில் இலங்கை முழுதாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடே மேற்குலக நாடுகளின் நிலைப்பாடாகும். (3) இந்தியா எமது பக்கம் உள்ளது. (4) புதிய யாப்பு உருவாக்கத்தைப் பொறுத்த மட்டில் ஒரு மாகாணத்தில் மாகாண சபையே நிருவாக அலகாக இருக்கும். இப்போதுள்ள கச்சேரி முறைமை ஒழிக்கப்படும். நிறைவேற்றதிகாரம் மாகாண சபை அமைச்சரவைக்கே உண்டு. ஆளுநருக்கு அல்ல. இப்போதுள்ள ஒருமித்த பட்டியல் (Concurrence list) ஒழிக்கப்படும். யாப்பு வரைவை நாடாளுமன்றம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் விவாதிக்க இருக்கிறது. யாப்பு வரைவு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறும் வாய்ப்பு அதிகம் உண்டு. இவற்றைவிட எமது தலைவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்பதை கம்பவாரிதி திருவாய் மலர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.