♻ ஆண்டுக்கணக்கில் பல அரசியல் கைதிகள் சிறையில் இருக...

14 Aug 2017

♻ ஆண்டுக்கணக்கில் பல அரசியல் கைதிகள் சிறையில் இருக்க தன் குருவான கொலைச்சாமியார் பிரேமானந்தரின் சிஷ்யர்களின் விடுதலைக்காக இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதி தன் இனப்பற்றின் நிலையை எடுத்துக் காட்டிய இவர், இன்று நிர்வாகத்தில் முழுத்தோல்வி கண்டு நிற்கிறார். மூன்றாண்டுகளில் இவரது நான்கு அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு. அதில் இரண்டு நிரூபணமே ஆகிவிட்டது. இனங்காணப்பட்ட இருவரில் ஒருவர் முதலமைச்சரின் வலக்கையாய் இயங்கியவர். இதை அவரே சொல்லியிருக்கிறார். தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை ஆகவேண்டும் என நினைந்து தமிழரசுக்கட்சிக்குத் தலையிடி கொடுக்க குற்றம் நிரூபணம் ஆகாத இருவரும் கூட குற்றவாளிகளே என பிடிவாதம் பிடிக்கும் இவரின் நிலைகண்டு அரசியல் அவதானிகள் நகைத்து நிற்கின்றனர். அங்கங்களின் பிழைக்கு அரசன் பொறுப்பாகானா? யார்தான் பதில் சொல்வது? 


♻ மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதால் மட்டுமே தம் தூய்மையை மறுதலையாய் நிரூபித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர், செய்நன்றி மறத்தல், உட்பகை விளைத்தல், கூடா நட்பு, மடி (சோம்பல்), தெரிந்து தெளியாமை என அரசியலுக்கு முரணானதாய் வள்ளுவர் சொன்ன அனைத்தையும் தம்வயப்படுத்திச் செய்யும் நிர்வாகம், தமிழ்மக்களைப் பாதாளம் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. 
பதில்: சரியான கணிப்பு!

♻ தனது மானமும் அகங்காரமும் மட்டுமே முக்கியமெனக் கருதி  இயங்கும் இவரது செயலால் ஒற்றுமையாய் இருக்கவேண்டிய அவசிய நிலையில், தமிழ்த்தலைவர்களும் மக்களும் பிரிவுபட்டுச் சிதைந்து கொண்டிருக்கிறார்கள். நான் எனும் ஆணவம் தள்ளலும் இந்த ஞாலத்தைத் தான் எனக் கொள்ளலும் என பாரதி சொன்ன உத்தம புருஷலட்சணத்தை இவரிடம் காண முடியவில்லை. மொத்தத்தில் இவருக்கும் தன் வெற்றியின் மீதன்றி தமிழினத்தின் வெற்றி மீது அக்கறையில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.  
பதில்: முதலமைச்சருக்கு ஒரு சரா சரி மனிதனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் இல்லை. அவரே நியமித்த விசாரணைக் குழு குற்றம் எண்பிக்கப்படவில்லை எனச் சொல்லி விடுவித்த இரண்டு அமைச்சர்களை தொடர்ந்து பழிவாங்குகிறார்.

♻ இங்ஙனமாய் தமிழர்தம் தலைமைப் போட்டியில் இன்று மும்முனை ஆட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இவ் ஆட்டத்தில் சுயநலத்தோடு கலந்துகொண்டிருக்கும் மூவர் முதலிகளில் எவர்க்கும் மக்களின் நல்வாழ்வு பற்றிய கவலை கிஞ்சித்தும் இருப்பதாய்த் தெரியவில்லை. அன்றுதொட்டு இன்றுவரை ஏமாற்றுவதே தமிழ்த் தலைமைகளின் வேலையாகவும் ஏமாறுவதே தமிழ் மக்களின் வேலையாகவும் இருக்கிறது. என்னாகப் போகிறது நம்  இனம்?
பதில்: இப்படிப் புலம்பிப் பலனில்லை. தலைவர்கள் சரியில்லை என்றால் மக்களை குறை கூறுங்கள். ஆனால் மக்கள் தீர்ப்பு எப்போதுமு மகேசன் தீர்ப்புத்தான்!

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.