♻ புலிகளின் மறைவோடு தமிழரசுக்கட்சி, இனி தாம் மட்டு...

14 Aug 2017

♻ புலிகளின் மறைவோடு தமிழரசுக்கட்சி, இனி தாம் மட்டுமே தமிழினத் தலைவர்கள் என்றும், இணைந்த இயக்கத்தலைவர்கள் வெறும் ‘போடுதடிகள்’ தான் என்றும் நினைந்து செயற்படத் தொடங்கியது.
பதில்: புலிகள் இருக்கும் போதே தமிழரசுக் கட்சிக்குத்தான் முதலிடம். தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனே தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் ஆவர்.


♻‘கூட்டமைப்பை ஓர் கட்சியாய்ப் பதிவு செய்வோம்’ என்ற பங்காளிக்கட்சியினரின் கோரிக்கையை நிராகரித்தும் முடிவுகளை எடுக்கையில் அவர்களை அலட்சியம் செய்தும் ‘எம்மை விட்டால் இவர்களால் என்ன செய்யமுடியும்?’ எனும் அலட்சியத்தில், தன்னிச்சையாய் செயற்படத் தொடங்கி பங்காளிகளின் மனக்கசப்பை தூண்டியது அக்கட்சி. 
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேர்தல் கூட்டணி என தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கட்சியாக பதிவு செய்வதாக இருந்தால் அந்தக் கட்சியில் உள்ளவர்கள் மத்தியில் கொள்கை, கோட்பாடு பற்றி ஒற்றுமை வேண்டும். ஏனைய கட்சிகள் ஆயுதம் தாங்கி பொதுமக்களைக் கொன்று குவித்த கட்சிகள்.

♻ வடமாகாண சபை தேர்தல் வர, பங்காளிக் கட்சியினரையும் தம் கட்சியின் மூத்த உறுப்பினர் சிலரையும் முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வந்து, வளர விட்டுவிடக்கூடாது என ‘சம்சும்குழுவினர்’ (சம்பந்தன், சுமந்திரன்)நினைத்தார்கள்.  அதனால் புத்திசாலித்தனமாய்த் திட்டமிட்டு, மாற்றணியினரால் மறுக்கமுடியாத ஒருவராக நீதியரசரைத் தேர்ந்த அவர்கள், அரசியல் அனுபவம் இல்லாத நீதியரசர் தம் மகுடிக்கு நன்றாக ஆடுவார் எனும் நம்பிக்கையில், தம் நிலைவிட்டு இறங்கிக் கெஞ்சிக் கூத்தாடி மற்றவர்களின் எதிர்ப்பையும் நிராகரித்து அவரைச் செங்கம்பளம் விரித்து அரசியலுக்குக் அழைத்து வந்தார்கள்.
பதில்: இது கம்பவாரியின் கற்பனை. விக்னேஸ்வரனை இழுத்து வந்தவர் இரா. சம்பந்தன்தான். இதில் சுமந்திரனுக்குப் பங்கில்லை. விக்னேஸ்வரனை அரசியலுக்கு இழுத்து வந்ததற்கு ஒரே காரணம் அவரது மொழிப் புலமை, முன்னாள் நீதியரசர் என்ற தகைமை. அவர் தமிழரசுக் கட்சியின் மகுடிக்கு ஆட வேண்டும் யாரும் நினைக்கவில்லை. அமைச்சர்களை நியமனம் செய்யும் உரிமையை தமிழரசுக் கட்சி அவருக்கு வழங்கியிருந்தது. அவர் விருப்பப்படியே அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதில் கட்சி தலையிடவில்லை. விக்னேஸ்வரனின் தேர்வும் நியாயமாகப்பட்டது.

♻ ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ எனும் பழமொழி இவர்களைப் பொறுத்தவரை இன்று நிஜமாகியிருக்கிறது. வேலியில் நின்ற ஓணானை மடியில் கட்டிவிட்டு ‘குத்துகிறது குடைகிறது’ என்று குளறுபவனைப் போல ஆழமறியாமல் ஆளைக் கொண்டுவந்துவிட்டு இன்று அந்தரித்து நிற்கிறார்கள் இவர்கள்.  
பதில்: இரா.சம்பந்தன் விக்னேஸ்வரனது சாதகத்தை சரியாகப் பார்க்கவில்லை என்பது சரியே.


♻ மொத்தத்தில் ஒற்றுமையைச் சிதைக்கும் பகை விதையை முதலில் விதைத்தவர்கள் இவர்களே. இவர்களது செயற்பாட்டில் இன அக்கறையைவிட எதேச்சதிகாரமும், ராஜதந்திரத்தின் பெயரிலான வஞ்சனையும், பதவி ஆசையும் விஞ்சிக் கிடப்பது நிதர்சனம்.
பதில்: பதவி ஆசை என்பது உண்மையானால் தமிழ் அரசுக் கட்சியினர் அமைச்சர் பதவிகளைப் பெற்றிருப்பர். பெரும்பான்மை மக்களது தெரிவு தமிழ் அரசுக் கட்சியே. 2015 ஆம் ஆண்டு தேர்தல் அதற்கு நல்ல உதாரணம். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் சித்தார்த்தன் தவிர முதல் 6 இடங்களையும் தமிழ் அரசுக் கட்சியே கைப்பற்றியது. இபிஎல்ஆர்எவ் கட்சியில் கேட்ட இருவர் (தலைவர் உட்பட) தோற்றுப் போனார்கள். ரெலோ வேட்பாளர் பத்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்கள்.
 

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.